நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வபாத்தும்
இப்னு மஸாஹிரா
நபியவர்களின் வபாத் எல்லோர் மனதையும் அதிரவைக்கும் ஒரு சம்பவமாகும். இதனைப்பற்றி பேசும் போதே எமது மனது அதிர்ச்சியில் ஆழ்கிறது.
தனது கணவனும் சகோதரனும் போராட்டத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டனர் என்று கூறியதையும் பொருட்படுத்தாது, றஸூல் (ஸல்) அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள், றஸூல் (ஸல்) அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள் என கூறிய ஸஹாபிய பெண்ணுக்கு அல்லாஹ் அருள்பாளிக்கட்டும். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களை நேரடியாக கண்ட பின்னரே அமைதியடைந்தாள். அவள்: "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முன்னால் எந்த சோதனையும் கால் தூசுக்கு சமன்" என்று கூறினாள். இவ்வாறே ஸஹாபாக்களின் உறவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தது.
ஏன் இப்படியான உறவு இருந்தது? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அதுதான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸஹாபாக்கள் வைத்த அன்பாக இருக்கிறது. நபியவர்களின் பண்பாட்டால் கவரப்பட்ட பலர் இவ்வாறான உறவை வைத்திருந்ததை நாம் அறிவோம். ஆனால், எம்மில் சிலரிடம் நல்ல பண்புகள் அரிதாகிக்கொண்டே போகின்றன. ஒருமுறை ஒருவரிடம் குறிப்பிட்டதொரு பரீட்சை எழுதப்போகிறேன் எனக்கூறினேன். (இது பரீட்சை எழுதப்போகும் தினத்தில் நடைபெற்றது). அதற்கு அவர் "இந்த பரீட்சையையா எழுதப்போறீங்கசு என இழிவான தொனியில் குறிப்பிட்டார். ஆனால், நான் இதே விடயத்தை ஒரு சகோதர இனத்தவரிடம் குறிப்பிட்டபோது அவர் என்னைப் பாராட்டி, உட்சாக வார்த்தைகளைக் கூறி அனுப்பினார். நாம் எம்மை மாற்றாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்.