பாலியல் அத்துமீறல்: புகார் அளித்த ஆசிரியை நீக்கம்!
5 Mar 2012அஹ்மதாபாத்:குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள நேசனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டிசைன்(என்.ஐ.டி) வளாகத்தில் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்த ஆசிரியை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான தீபா சல்கா என்பவர் 2 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் ஆசிரியையாக என்.ஐ.டியில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் தொடர்பாக வருடாந்திர மதிப்பீடு நடைபெறும் என்றும், வேலையில் திருப்தி இல்லாவிட்டால் ஒரு மாத நோட்டீஸ் வழங்கி பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் என்றும் நியமன உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
இந்நிலையில் பிப்ரவரி 22-ஆம் தேதி தீபாவை நீக்குவதாக கூறி நோட்டீஸ் அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அத்துடன் ரூ.40 ஆயிரத்திற்கான செக்கும் அளிக்கப்பட்டது. ஒப்பந்தம் முடிந்துவிட்டதாகவும், 29-ஆம் தேதிக்குள் குவார்ட்டர்ஸை காலிச் செய்யவும் உத்தரவிடப்பட்டது. தீபா சல்கா கடந்த நவம்பர் மாதம் அளித்த பாலியல் அத்துமீறல் தொடர்பாக அளித்த புகாரில், நடவடிக்கை தாமதமாவது குறித்து உள்ளூர் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருந்தன. அதன் பின்னர் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காந்திநகரில் என்.ஐ.டி இன்ஸ்ட்யூட்டில் ஆண்கள் ஹாஸ்டலில் வார்டனாக பணியாற்றும் ஸத்ருக்னன் திபாரி பாலியல் அத்துமீறும் வார்த்தைகளை பேசியதாகவும், சைகைகளை செய்ததாகவும் குற்றம் சாட்டி ஒரு குழந்தையின் தாயாரான சல்கா புகார் அளித்து இருந்தார்.
இன்ஸ்ட்யூட் பொதுநிர்வாக பிரிவு செயலாளர் சித்தார்த்த நாராயணனுக்கு அளித்த புகாரில் தனது கண்ணியத்தை பாதுகாக்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று புகாரில் சல்கா குறிப்பிட்டிருந்தார்.
இன்ஸ்ட்யூட் பொதுநிர்வாக பிரிவு செயலாளர் சித்தார்த்த நாராயணனுக்கு அளித்த புகாரில் தனது கண்ணியத்தை பாதுகாக்கும் விதத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும் என்று புகாரில் சல்கா குறிப்பிட்டிருந்தார்.
இச்சம்பவம் குறித்து புகார் அளித்தபிறகு விசாரணை நடைபெற்றாலும் அதன் அறிக்கை தனக்கு கிடைக்கவில்லை என்பதால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின அடிப்படையில் புகார் அளித்ததாக சல்கா கூறுகிறார்.
சித்தார்த் சுவாமி நாராயணன் கூறுகையில், “புகாரில் பாலியல் அத்துமீறலை குறித்து கூறவில்லை. புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்று கூறுகிறார்.
ஆனால் புகாருக்கு பதில் அளிக்காததற்கு காரணத்தை அவர் விளக்கவில்லை. திபாரியின் மொழிரீதியான அறிவின்மையால் ஏற்பட்ட தவறு என்று பிரச்சனையை கைகழுகும் விதத்தில் கூறுகிறார் காந்திநகர் இன்ஸ்ட்யூட் தலைவர் அகில் ஸக்ஸேனா.
No comments:
Post a Comment