Showing posts with label Headline today. Show all posts
Showing posts with label Headline today. Show all posts

Friday, 13 July 2012

முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!



Manmohan tells Maha govt, HM to examine police bias against Muslims
புதுடெல்லி:மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் கைதிகளிடம் போலீஸ் பாரபட்சமாக நடந்துகொள்வது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்த மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவிட்டுள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பத்திரிகைச் செய்தியில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸ் நடத்திய ஆய்வில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம் கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடவேண்டும் என முஸ்லிம் லீக் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் கோரிக்கை விடுத்திருந்தார்.

Friday, 11 May 2012

கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 கருணை மனுக்களில் முடிவு!


ப.சிதம்பரம்

புதுடெல்லி:கடந்த மூன்றரை ஆண்டுகளில் 16 கருணை மனுக்கள் மீது முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் மாநிலங்களவையில் நேற்று(புதன்கிழமை) தெரிவித்தார்.

மாநிலங்களவையில் இதுக்குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில் ப.சிதம்பரம் கூறியது: உலகம் முழுவதும் மரண தண்டனை தொடர்பாக 2 விதமான கருத்துகள் உள்ளன. ஒன்று, மரண தண்டனையை ஒழிப்பது. மற்றொன்று குறிப்பிட்ட சில வழக்குகளுக்கு மட்டும் மரண தண்டனையை ஏற்பது. இந்தியச் சட்டம் அரிதினும் அரிதாக மரண தண்டனையை பரிந்துரைக்கிறது.
மரண தண்டனையை ஒழிப்பதற்கு சட்ட ஆணையம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. எனவே, மரண தண்டனை குறித்து மத்திய அரசு எந்த முடிவையும் எடுக்கவில்லை.
எனவே, இப்போதைக்கு மரண தண்டனை பற்றி எந்த மறு ஆய்வும் இல்லை. ஆனால், மறு ஆய்வுக்கான காலம் வரும். குடியரசுத் தலைவரால் மரண தண்டனையைக் குறைக்க முடியும். மொத்தம் 16 கருணை மனுக்கள் மீது குடியரசுத் தலைவர் முடிவெடுத்துள்ளார். அவரது முடிவு குறித்து நான் எனது கருத்தைக் கூற முடியாது.

கெளரவ கொலைக்கு ஆதரவாக உ.பி போலீஸ் டி.ஐ.ஜி


DIG Satish Kumar Mathur

டெல்லி:தனது மகளை க்ரிமினல்கள் கடத்திச் சென்றதை குறித்து புகார் அளிக்க வந்த தந்தையிடம் ‘தற்கொலைச் செய்யுங்கள் அல்லது மகளை கொலைச் செய்ய வேண்டும்’ என்று கூறிய போலீஸ் டி.ஐ.ஜி சிக்கலில் மாட்டியுள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் சஹரன்பூர் மண்டல டிஐஜி சதிஷ் குமார் மாத்தூர் இன்று வழக்கம் போல காவல் நிலையங்களுக்கு விசிட் கொடுத்தார். அப்போது ஒரு காவல் நிலையத்தில் பிரபுத்நகர் மாவட்டம் கசர்வா கிராமத்தைச் சேர்ந்த ஷவ்கீன் முகமது என்பவரை மாத்தூர் சந்தித்தார். ஷவ்கீனின் மகள் இஷ்ரத் ஜஹான்(14) ஓடிப் போய்விட்டதாகக் கூறப்படுகிறது.
இதைக் கேள்விப்பட்ட டிஐஜி இஷ்ரத்தின் தந்தையைப் பார்த்து, “உங்கள் மகளைக் கண்டுபிடித்துக் கொண்டு வர என்னிடம் மாயசக்தி ஒன்றும் இல்லை. உங்கள் மகள் ஓடிப்போயிருந்தால் நீங்கள் வெட்கி தற்கொலை செய்துகொண்டிருக்க வேண்டும். என் தங்கை மட்டும் இவ்வாறு செய்திருந்தால் அவளைக் கொன்றிருப்பேன் அல்லது நான் தற்கொலை செய்திருப்பேன்” என்றார்.
அவரின் கூற்று உள்ளூர் ஊடக கேமராக்களில் பதிவாகியுள்ளது. ஒரு டிஐஜியே கௌரவக் கொலையை ஆதரிக்கிறார் என்று பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
வீட்டு வராண்டாவில் நின்று கொண்டிருந்த இஷ்ரத்தை 2 வாலிபர்கள் கடத்தியதாகக் கூறப்படுகிறது. அதே பகுதியைச் சேர்ந்த வாலிபர்கள் மொகின் சத்பல் மற்றும் ஒமா அத்ரா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இஷ்ரத் பற்றி எந்தவித தகவலும் கிடைக்கவில்லை. அந்த இருவரும் இஷ்ரத்தை கெடுத்து கொன்றிருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகிறார்கள்.
இது குறித்து இஷ்ரத்தின் தந்தை ஷவ்கீன் கூறுகையில்,
“என் மகளை கடத்திச் சென்றுவிட்டனர். ஆனால் டிஐஜி அவள் ஓடிப்போய்விட்டதாகக் கூறுகிறார். அவருக்கு இந்த தகவல் எங்கிருந்து கிடைத்தது என்று தெரியவில்லை. ஊர் மக்கள் முன்னிலையில் என் மகள் கடத்தப்பட்டாள். போலீஸ் அதிகாரி சொல்வது போன்று என் மகள் ஓடிப்போயிருந்தாலும் அவள் ஒரு மைனர், நல்லது கெட்டது தெரியாதவள். அதனால் அவளை தேடிக் கண்டுபிடித்து பத்திரமாக ஒப்படைப்பது போலீசாரின் கடமை. ஆனால் டிஐஜி கௌரவ கொலைக்கு ஆதரவாகப் பேசுகிறார்” என்றார்.

இரவில் வேலைப் பார்க்கும் பெண்களுக்கு பாதுகாப்பில்லை – ஆய்வில் தகவல்!

Women feel unsafe in night shifts
புதுடெல்லி:இரவில் வேலைப் பார்க்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்பற்ற நிலையிலேயே பணியாற்றுவதாக அசோசியேட் சேம்பர்ஸ் ஆஃப் காமேர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ ஆஃப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு ஷிஃப்டில் வேலைப் பார்க்கும் 73 சதவீத பெண்களும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர். இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் 2000க்கும் அதிகமான இரவு வேலைப்பார்க்கும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
சிறுதொழில்-மத்தியதர-பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன. பி.பி.ஒ, ஐ.டி, மருத்துவமனை, ஊடகங்கள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்கள்தாம் அதிகமான பாதுகாப்பற்ற சூழலை அனுபவிக்கின்றனர்.
வேலை நேரங்களிலும், அதற்கு பிறகும் இத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் உடல்ரீதியான, இதர தாக்குதல்களுக்கு ஆளாவதாக ஆய்வு கூறுகிறது.
வேலை முடிந்து செல்லும்பொழுது போதிய வாகன வசதிகள் இல்லாமை, பெண்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதற்கு நிறுவனங்களில் போதுமான வசதிகள் இல்லாமை, சக ஊழியர்களின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் ஆகியன பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதில் முக்கிய காரணிகள் ஆகும்.
இரவில் பயண வசதிகள் இல்லாமல் மிகவும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாவது தலைநகர் டெல்லியில் ஆகும். மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன.
சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்(21 சதவீதம்) மிகவும் மனோரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மத்திய தர நிறுவனங்களில் இது 14 சதவீதம் ஆகும். பெரும் நிறுவனங்களில் 8 சதவீதம்.
பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும். பால் ரீதியான பாரபட்சம் பொருளாதாரத் துறையை மெதுவாக நொடியச் செய்யும் என ஆய்வு கூறுகிறது. நிறுவனங்களில் டிரைவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்யும் பொழுது போலீஸ் பரிசோதனை நடத்துதல், புகார்களுக்கு தீர்வு காண்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.

Sunday, 8 January 2012

தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

muslims2


முஸ்லிம் இளைஞர்களின் சட்ட விரோத கைது குறித்து விசாரிக்க தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு

புதுடெல்லி:சட்ட விரோதமாக முஸ்லிம் இளைஞர்களை கடந்த ஆண்டு நவம்பர் இறுதியில் டெல்லி சிறப்பு காவல்துறை கைது செய்தது குறித்து விசாரணை நடத்தி நான்கு வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய டெல்லி காவல்துறைக்கு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நோட்டீஸ் விவகாரம் டெல்லி காவல்துறைக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. கைது குறித்து தேசிய மனித உரிமை ஆணையம்  டெல்லி காவல்துறை துணை ஆணையர் சரிதா விஹாரின்க்கு கடந்த 2011-ம் ஆண்டு டிசம்பர்-22  ஆம் தேதியிட்டு நான்கு வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மேலும் டெல்லி காவல்துறை அறிக்கை தாக்கல் செய்த பிறகு மனித உரிமை ஆணையம் நடவடிக்கையை மேற்கொள்ளும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அறிக்கையின் நகல் ஒன்றை டெல்லி காவல்துறை விஜிலன்சின் துணை ஆணையருக்கும் அனுப்ப வேண்டும் என்றும் அந்த நோட்டிஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பைசல் கான் என்னும் சமூக ஆர்வலர் டெல்லி சிறப்பு காவல்துறையின் மீது தேசிய மனித உரிமை ஆணையத்திடம் புகார் அளித்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிகிறது. கௌஹர் அஜீஸ் மற்றும் முஹம்மத் இர்ஷாத் கான் ஆகிய இருவரையும் இந்தியன் முஜாஹிதீன் என்று கூறி கைது செய்தனர் என்றும் மேலும் அவர்களின் கைது பற்றி அவர்களின் குடும்பத்திற்கு பல நாட்கள் வரை தெரிவிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தார். கைது செய்யப்பட்ட 12  மணி நேரத்திற்குள் அவர்களின் உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்று கூறும் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலுக்கு இது எதிரானது என்றும் தன்னுடைய புகாரில் கான் தெரிவித்துள்ளார்.
மேலும் தீவிர வாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக தேசிய மனித உரிமை ஆணையம் முதன் முறையாக நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் டெல்லி போலீசால் நடத்தப்பட்ட இந்த மனித உரிமை மீறலை விசாரிக்கும் பொறுப்பை டெல்லி காவல்துறையினரிடம் 

இந்தியாவில் பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை


இந்தியாவில் பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை – உச்சநீதிமன்ற நீதிபதி

National Conference of the All India Federation of Women Lawyers in Chennai on Saturday
சென்னை:இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் கழிந்த பிறகும், பெண்களுக்கு இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பி.தேசாய் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பெண் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் தேசிய மாநாடு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நீதிபதி ரஞ்சனா பேசியதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும், பெண்களின் நிலையில் இப்போதும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. நாட்டின் மிகப் பெரும்பாலான பெண்கள் மனிதத் தன்மையோடு நடத்தப்படவில்லை.
உடல் மற்றும் மன ரீதியான வன்முறை பெண்களை மிகவும் பாதிக்கச் செய்கிறது. பெண்கள் மீதான இந்த வன்முறை என்பது பாகுபடின்றி எல்லா மதங்கள், இனங்கள், ஜாதிகளிலும் நிலவுகிறது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில், பெண்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில் பெண் வழக்குரைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை பெண் வழக்குரைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் ரஞ்சனா.
இம்மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் துவக்கி வைத்தார்.
மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியதாவது:  “பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதும், சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் அவர்களுக்கு கொஞ்சம் பிரநிதித்துவம் அளிப்பதும் மட்டும் பெண்களுக்கான அதிகாரங்களை தந்து விடாது. மாறாக, பெண்கள் அனைவருக்கும் அவர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்கள் சார்ந்த துறைகளிலும் சம வாய்ப்பு கிடைக்கச்