Showing posts with label islamic articles. Show all posts
Showing posts with label islamic articles. Show all posts

Friday, 11 May 2012

மாவீரன் திப்புசுல்தான் நினைவு நாள்


மாவீரன் திப்புசுல்தான்

இன்று மாவீரன் திப்பு சுல்தான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கெதிராக தனது இன்னுயிரை தியாகம் செய்த நாள்.

1799 ஆம் மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவுக்கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவுக்கூறுவதற்கு சமமாகும்.
“ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் வாழ்ந்து பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”
எதிரிகளுடன் தீரமுடன் போரிட்டு குண்டு காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடந்த திப்புவிடம் அவரது பணியாள், “அரசே! யாரேனும் ஒரு ஆங்கிலேயே அதிகாரியை அழைக்கட்டுமா? சரணடைந்து விடலாம்” என பதறியவாறு கூறிய வேளையில் திப்பு உதிர்த்த உன்னத வார்த்தைகள் தாம் மேலே கண்டவை.
இந்திய வரலாறு பல மாவீரர்களை கண்டிருந்தாலும் திப்பு சுல்தானுக்கு இணையான ஒரு விடுதலை வீரனை யாரோடும் ஒப்பிட முடியாது.

Monday, 5 March 2012

நிம்மதி எனும் மகிழ்ச்சி...


நிம்மதி எனும் மகிழ்ச்சி...

  

'சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.'எங்கோ வாசித்த இந்த வரிகளின் ஆழத்தில் நிம்மதியும் சந்தோஷமும் மறைந்திருந்து தம் பொருளை உணர்த்தி நிற்கின்றன.

உலக வாழ்க்கையின் அலங்காரங்கத்தில் சந்தோஷமே நிரந்தரக் குறியீடாக இருக்கின்றது.ஒரு ஒற்றைச் சந்தோஷத்திற்காக மனிதன் என்னென்ன வெல்லாமோ செய்து விடுகின்றான்.தன் சிந்தனையின் எல்லாத் தொலை வுகளிலும் அது பற்றிய நினைவுகளையே வேலிகளாக போட்டு வைத்தி ருக்கிறான்.

இந்த உலக வாழ்க்கையை வெளிப்பார்வையில் பார்க்கும் ஒருவன் அதனைப் பிரமாண்டமாகவே கண்டு கொள்கிறான்.அதன் வளைவை, தொய்வை, நிச்சய மின்மையை அவன் காணத்தவறிவிடுகிறான்.

வாழக்கை பற்றிய புரிதலற்றவன் சந்தோஷமாக இருக்கிறான்.வாழ்க்கையை சரியாகப் புரிந்தவன் நிம்மதியாக இருக்கிறான்.வாழ்க்கை பற்றிய புரிதலி னடியாகவே நிம்மதியும் சந்தோஷமும் தோன்றுவதாகத் தெரிகிறது.

சந்தோஷம் நீடித்து நிலைப்பதில்லை.அது கணப் பொழுது வாழ்க்கை போலத்தான்.வருவதும் போவதும்,திடீரெனத் தோன்றி மறைவதும்தான் அதன் இயல்பு.மேக உருமாற்றம் போல அது தன்னை எப்போதும் மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.

நிம்மதி என்பது ஆளற்ற தனித் தீவு மாதிரி.பாரிய அலைகளை உண்டாக்கும் கடல்களுக்கு மத்தியிலும் தன் தனித்தன்மையுடன் அது நிற்கின்றது.எந்த சப்தமும் அதன் நிசப்தத்தை கலைத்து வடுவதில்லை.

மனிதன் நிம்மதியை முற்படுத்தாமல் சந்தோஷத்தை முற்படுத்தியதே அவன் கவலையைப் பெற்றுக் கொள்ளக் காரணமாகியது.அவ்வப்போதைய சந்தோ ஷங்களுக்காக மனிதன் நெடுநாள் நிம்மதியை தொலைத்துக் கொள்கி றான்.பின்னர் ஏமாற்றங்களைச் சந்தித்தபின் எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக்  கொள்கிறான்.

நிம்மதியென்பது சந்தோஷத்தினடியாக மட்டும் வருவதல்ல.ஒரு நியாயமான கவலையும் நிம்மதியைக் கொண்டு வந்து தர முடியும்.நிம்மதி என்பது எப்போதும் இருப்பது.மகிழ்ச்சியும் கவலையும் வந்து போகக் கூடியது. இதனைத்தான் நபியவர்கள் “ஒரு முஃமின் நிலை ஆச்சரியத்திற்கு ரியது...மகிழ்ச்சியான ஏதும் நடந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து கிறான்.துன்பங்கள் ஏதும் நடந்தால் பொறுமையாக இருக்கிறான்“(முஸ்லிம்) எனக் கூறினார்கள்.

மனிதன் உலகிற்கு வந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து கொள்ளும் போதுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் மிகச் சரியாகப் அறிந்து கொள்கிறான். இதனையே அல்லாஹ் ;அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன' என்கிறான்

உள்ளமே உயர்ந்திடு


உள்ளமே உயர்ந்திடு




வாழ்க்கைச் சூழல்கள் ஒட்டி நிற்கின்ற எட்டு காரியங்களை ஒரே வசனத்தில் பொதிந்து, இறைவன் மனிதனின் விருப்பங்களை இதோ இவ்வாறு கேட்கின்றான்:
(நபியே) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (சூரா அத்தவ்பா9:24)
தந்தைமார்கள், பிள்ளைகள், சகோதரர்கள், மனைவிமார்கள், குடும்பத்தார்கள், செல்வம், வியாபாரம், வீடு – இவை ஒரு மனிதனின் சிந்தனையில் எப்பொழுதும் நிறைந்திருப்பவை.
இந்த அம்சங்கள் ஒன்று சேர்ந்து மனிதனை ஒரு வளையத்திற்குள் மாட்டி விட்டுள்ளன.
இந்த வளையத்திற்கு வெளியே அந்த அம்சங்களுக்கு ஆதரவான சில விஷயங்களும் உள்ளன. அவை சடங்குகளும், சம்பிரதாயங்களும் அடங்கிய உலகம்.
இந்த இரண்டு கூடுகளுக்கிடையில் வேலிகள் இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மனிதன் விருப்பப்பட்ட பொழுதெல்லாம் மாறிக்கொள்கின்றான்.
இந்தக் கூடுகளுக்கு அப்பாற்பட்டு யதார்த்தங்களைக் கொண்ட இன்னொரு உலகம் உண்டு. அங்கேதான் சரியும், தவறும் – நன்மையும், தீமையும் வேறு பிரிந்து நிற்கின்றன.
சமுதாயத்தில் இருக்கவேண்டியது நன்மையா, தீமையா என்பது அங்கேதான் தீர்மானிக்கப்படுகிறது. மேலாதிக்கம் செலுத்துவதற்கான போராட்டங்கள் அங்கேதான் அரங்கேறுகின்றன. சண்டை, சச்சரவுகள் சதா நடக்கின்றன.
வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் இந்த விஷயங்கள் குறித்து மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் இவ்வாறு போதிக்கின்றான்:
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் – அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (சூரா அத்தவ்பா9:19)
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், சடங்குகளுக்கும் அப்பால் ஈமான் கொண்ட விசுவாசிகளுக்காக அல்லாஹ் நிர்ணயித்து வைத்ததுதான் வாழ்க்கையின் இந்த மூன்றாவது பகுதி.

Tuesday, 21 February 2012

நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வபாத்தும்


நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வபாத்தும்



இப்னு மஸாஹிரா
நபியவர்களின் வபாத் எல்லோர் மனதையும் அதிரவைக்கும் ஒரு சம்பவமாகும். இதனைப்பற்றி பேசும் போதே எமது மனது அதிர்ச்சியில் ஆழ்கிறது.
தனது கணவனும் சகோதரனும் போராட்டத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டனர் என்று கூறியதையும் பொருட்படுத்தாது, றஸூல் (ஸல்) அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள், றஸூல் (ஸல்) அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள் என கூறிய ஸஹாபிய பெண்ணுக்கு அல்லாஹ் அருள்பாளிக்கட்டும். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களை நேரடியாக கண்ட பின்னரே அமைதியடைந்தாள். அவள்: "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முன்னால் எந்த சோதனையும் கால் தூசுக்கு சமன்" என்று கூறினாள். இவ்வாறே ஸஹாபாக்களின் உறவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தது.
ஏன் இப்படியான உறவு இருந்தது? என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அதுதான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸஹாபாக்கள் வைத்த அன்பாக இருக்கிறது. நபியவர்களின் பண்பாட்டால் கவரப்பட்ட பலர் இவ்வாறான உறவை வைத்திருந்ததை நாம் அறிவோம். ஆனால், எம்மில் சிலரிடம் நல்ல பண்புகள் அரிதாகிக்கொண்டே போகின்றன. ஒருமுறை ஒருவரிடம் குறிப்பிட்டதொரு பரீட்சை எழுதப்போகிறேன் எனக்கூறினேன். (இது பரீட்சை எழுதப்போகும் தினத்தில் நடைபெற்றது). அதற்கு அவர் "இந்த பரீட்சையையா எழுதப்போறீங்கசு என இழிவான தொனியில் குறிப்பிட்டார். ஆனால், நான் இதே விடயத்தை ஒரு சகோதர இனத்தவரிடம் குறிப்பிட்டபோது அவர் என்னைப் பாராட்டி, உட்சாக வார்த்தைகளைக் கூறி அனுப்பினார். நாம் எம்மை மாற்றாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்.

சமூக வலைத்தளங்க​ளும் – இஸ்லா​மிய அடிப்படை வாதங்களும்


சமூக வலைத்தளங்க​ளும் – இஸ்லா​மிய அடிப்படை வாதங்களும்

imagesCAIKARW6
பல நாடுகளில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் சமூக பிணைப்புகளை ஏற்படுத்தவில்லை, அது வெறும் அரட்டையடிப்பதற்கான இணைய வசதி மட்டும் தான் என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் மத்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக அதன் செயல்பாடுகளில் தலையிடுவதற்கும், தேசிய நலத்திற்கு எதிரான செயல்களை கண்காணித்து தணிக்கை செய்வதற்குமான முயற்சியில் சட்ட வரைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் எனது தமிழ் முகநூல் facebook  நண்பர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக ஒரு குறிப்பிட்ட விடயத்தை பற்றிய தீவிர விமர்சனங்கள், பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. அது போன்ற கடுமையான பின்னோட்டங்கள் comments கள் , அணுமின் எதிர்ப்புகளுக்கோ அல்லது மூவர் தூக்கு தண்டனை எதிர்ப்பிற்கோ, முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கோ கூட எழுந்தது இல்லை.
அது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் கடையநல்லூரில் வாழும் “இஸ்லாமிய நாத்திகர்” ஒருவரின் வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவரை காப்பாற்ற உடனடியாக உதவி தேவை என்றொரு அவசர செய்தியை நண்பர் தனது முகநூலில் வெளியிட்டது தான் தாமதம்… கொட்டி தீர்த்துவிட்டனர்..
இஸ்லாமியர்கள் மதவாதிகள், அவர்கள் தாலிபான்கள், காட்டுமிராண்டிகள், கருத்து சுதந்திரத்திற்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள், அவர்கள் வாழ வேண்டியது ஆஃப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோதான் இந்தியாவில் இல்லை…. இன்னும் ஏராளமான கமெண்ட்கள்…
இதுவரை இந்துத்துவவாதிகளால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட சொல்லாடல்கள் பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருந்தும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், பொதுவுடமை பேசுபவர்கள் என்ற பெயர்களில் வெறுப்பு வார்த்தைகள் முக நூலில் கொட்டப்பட்டுள்ளது…….
ஆழ் மனதிலிருந்து தெரித்துவிழுந்த வெறுப்புணர்வு….. இஸ்லாமியர்கள் பொதுவெளியில் என்னதான் நட்புடனும் சகோதரத்துடனும் பழகினாலும் .. நெருக்கடி நிலையில் அவர்கள் தனிமை படுத்தப்படுவார்கள், குஜராத்தில் மோடியின் நரவேட்டையிலும் அப்படித்தானே நடந்திருக்கும், பக்கத்துவீட்டு காரர், நெருங்கி பழகிய நண்பர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், நெருக்கடி நேரம் என்று வரும் பொழுது அவன் முஸ்லிம்..

Wednesday, 4 January 2012

அரசியல் மாற்றங்களும் இஸ்லாமியவாதிகளும் புரட்சிக்குப் பிந்திய உணர்வலைகள்


அரசியல் மாற்றங்களும் இஸ்லாமியவாதிகளும் புரட்சிக்குப் பிந்திய உணர்வலைகள்



Islamic Worldமக்கி மன்ஸூர்
1924 இல் துருக்கியில் இஸ்லாமிய கிலாபத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகம் தலைமைத்துவமற்ற சமூகமாகமாறியது. ஏனெனில், றஸூல் (ஸல்) அவர்கள் மதீனாவில் நிலவிய இஸ்லாமிய கிலாபத் 1924 ஆம் ஆண்டு வரை ஏதோ ஒரு வடிவில் உயிர் வாழ்ந்து கொண்டிருந்தது.
மதச்சார்பற்ற, சியோனிஸ ஏஜன்ட் முஸ்தபா கமால் இஸ்லாமிய கிலாபத்தை இரத்துச் செய்து, துருக்கியை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்தினான். இதன் எதிரொலியாக ஈமானிய உள்ளங்கள் வெகுண்டெழுந்தன. உலகின் நாலா பக்கங்களிலும் முஸ்லிம்கள் தனிநபர்களாகவும் இயக்கங்களாகவும் செயற்படத்துவங்கினர். தாம் இழந்த கிலாபத்தை, கௌரவத்தை, தனித்துவ அடையாளத்தை மீளப் பெற்றுக் கொள்வதில் முனைப்பாக செயற்பட்டனர்.
அந்த வகையில் இந்திய உபகண்டத்தில் ஜமாஅதே இஸ்லாமி, ஜமாஅத் தப்லீக் மற்றும் அறபுலகில் எகிப்தைத் தளமாகக் கொண்ட அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் போன்ற இயக்கங்கள் செயற்படத் துவங்கின. இவை முஸ்லிம்களின் ஈமானிய உணர்வைப் பாதுகாப்பதிலும்,இழந்துபோன இஸ்லாமிய தலைமைத்துவத்தை மீளப் பெறுவதிலும் உழைத்தன. ஜாஹிலிய்ய,மதச்சார்பற்ற மேற்கத்திய சக்திகளுடன் தொடர்ந்தும் போராடின.
இவற்றுள் 90 க்கும் அதிகமான நாடுகளில் ஸ்தாபிக்கப்பட்டு, மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு செலுத்தும் அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பு குறிப்பிடத்தக்கது. இவர்களின் பணியை மழுங்கடிக்கச் செய்யவும், தடுத்து நிறுத்தவும் இஸ்லாமிய விரோத சக்திகள் கைகோர்த்து செயற்பட்டன. நடுநிலைமையான, சீர்திருத்த சிந்தனைகளைக் கொண்ட இந்த இஸ்லாமியவாதிகள் பலர் தூக்கிலிடப்பட்டனர். பல்லாயிரம் பேர் சிறைவாசம் சென்றனர். இன்னும் பலர் நாடு கடத்தப்பட்டனர். அல்-இஹ்வானுல் முஸ்லிமூன் ஸ்தாபகர் இமாம் ஹஸனுல் பன்னா கெய்ரோ வீதியில் ஆட்சியிலிருந்த அரசாங்க ஏஜன்டுகளால் 1949 இல் படுகொலை செய்யப்பட்டமை இதற்கு நல்ல உதாரணமாகும்.
மாபெரும் சிந்தனையாளர் ஷஹீத் செய்யித் குத்ப் மற்றும் பலர் தூக்கிலிடப்பட்டனர். அஷ்ஷெய்க் யூஸுப் அல் கர்ளாவி, தூனிஸிய இஹ்வானிய (நஹ்ழா) தலைவர் அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி, லிபிய இஹ்வானிய தலைவர் Dr. அப்துல் காதர் ஸுலைமான் எனப் பலர் நாடு கடத்தப்பட்டனர். அல்லது அரச கெடுபிடியிலிருந்து தப்பி வெளிநாடுகளில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வந்தனர்.
எகிப்து, சிரியா, ஜோர்தான், லிபியா மற்றும் பல அறபு நாட்டுச் சிறைகளில் அதிகம் அடைக்கப்பட்டவர்கள் இஹ்வானிய உறுப்பினர்களும் அதன் ஆதரவாளர்களும்தான். இவர்கள் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டு இவர்கள் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள், இஸ்லாத்தை அரசியல்மயப்படுத்தி அந்நாடுகளின் அரசுகளுக்கு எதிராக சதித்திட்டம் தீட்டுகிறார்கள் என்பதுதான். மேற்கத்திய உலகும் இவர்கள் ஆட்சிக்கு வருவதனைத் தடுத்து வந்தது.
பொதுமக்களுக்கு மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்ற இவ் இஸ்லாமியவாதிகள் ஜனநாயக வழியில் மக்களின் சுதந்திரம், உரிமைகள் என்பவற்றைப் பேணி, களத்திற்கு வந்தபோது அவர்களை ஓரங்கட்டும் பணியில் மேற்குலகும், அதன் மீடியாக்களும் அந்நாடுகளின் அரசாங்கங்களுடன் கைகோர்த்து செயற்பட்டன. மேற்கத்திய சார்பு மீடியாக்கள் இவர்களை கொச்சைப்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டன. இந்த இஸ்லா மியவாதிகளை அடிப்படைவாதிகள் (Fundamentalist) தீவிரவாதிகள் (Terrorist) என்று முத்திரை குத்தி, பொது மக்களின் உள்ளங்களில் பெரும் அச்சத்தை ஏற்படுத்த முனைந்தன.
இதற்கு சிறந்த உதாரணம் ஐக்கிய அமெரிக்காவிலிருந்து இயங்கும் ABC 24 தொலைக்காட்சி கூட்டுத்தாபனம். 28.11.2011இல் அல்-ஜஸீராவின் முன்னை நாள் நிறைவேற்று அதிகாரி வழ்ழாஹ் கான்பரை அறபுலகில் நடக்கும் மாற்றங்கள் சம்பந்தமாக பேட்டி கண்டிருந்தது. அதில் எகிப்தில் இஹ்வான்களின் தேர்தல் வெற்றி சம்பந்தமாக கேட்கப்பட்டபோது அல்-காயிதா தலைவர் அய்மன் அல்- ஸவாஹிரியை இஹ்வானிய உறுப்பினர் என்றும் எனவே, இவர்களும் தீவிர சிந்தனைப் பாரம்பரியத்தை கொண்ட தீவிரவாதிகள் என்ற கருத்தில் ABC நிரூபர் மார்க் கொல்வின் கேள்வியை கேட்டார்.
அதற்குப் பதிலளித்த வழ்ழாஹ், அய்மன் இஹ்வானிய தஃவாவின் ஆரம்பத்தில், மாணவப் பருவத்தில் இணைந்தவர். இஹ்வான்கள் மிகவும் நடுநிலையான போக்கைக் கடைப்பிடிப்பவர்கள் எனக் கூறிய அய்மன், பின்னர் இஹ்வான்களை விட்டும் விலகி, எகிப்தில் காணப்படும் தீவிர சிந்தனை கொண்ட ஜமாஆ அல்-இஸ்லாமியாவுடன் இணைந்தார். பின்பு ஆப்கானிய போரில் உஸாமா பின் லாதினுடன் தொடர்புபட்டார். அரசியல் பிரவேசத்தில் ஜனநாயக வழிமுறைகளால் சமூகத்தில் மாற்றம் ஏற்படுத்த முடியாது, ஆயுதம் ஏந்தி போராடுவதுதான் ஒரே வழி என்ற சிந்தனை கொண்டவர். அச்சிந்தனை கொண்ட நபர்களுக்கும் இஹ்வான்களுக்கும் எந்தவிதமான தொடர்புகளும் இல்லை. இஹ்வான்கள் மிகவும் கட்டுப்பாடுள்ள நடுநிலை சிந்தனை கொண்ட,வன்முறைக்கு (Violence) எதிரான சிந்தனைப் பாரம்பரியத்தைக் கொண்டவர்கள்" என பேட்டியில் குறிப்பிட்டார். (ABC 24, 28.11.2011)
தூனிஸிய அந்நஹ்ழா (இஹ்வானுல் முஸ்லிமூன் தூனிஸிய கிளை) தலைவர் அஷ்ஷெய்க் ராஷித் அல் கனூஷி 22 வருடங்களுக்குப் பின் அவரது நாட்டுக்கு இவ்வருடம் வந்திறங்கியபோது, விமான நிலையத்தில் பல்லாயிரம் பேர் கூடி அவரை வரவேற்றனர்.
விமான நிலையத்தில் மேற்கத்தேய ஊடகவியலாளர் ஒருவர் "உங்களது அந்-நஹ்ழா கட்சி ஆட்சிக்கு வந்தால், நீங்கள் ஈரானிய அரசியலமைப்பு முறையில்தான் ஆட்சி நடத்தப் போகின்றீர்களா?" எனக் கேள்வி எழுப்பியபோது பதிலளித்த அஷ்ஷெய்க் ராஷித், "எங்களிடத்தில் ஆயத்துல்லாக்கள் இல்லை. நாம் வெற்றி பெற்றால் துருக்கிய பாணியிலான (AKP Government) அரசியல் முறையை கடைப்பிடிப்போம்’ எனக் குறிப்பிட்டிருந்தார். அதாவது ஈரானிய அடிப்படையிலான தீவிர அரசியல் அமைப்பின்றி துருக்கிய முறையிலான அனைத்து பிரிவினரையும் சமூகத்தையும் தழுவிய நடுநிலை மையிலான அரசியலாக இருக்கும் என புத்திசாதுர்யமாக பதிலளித்தார்.
மேற்கத்திய அரசுகள் ஜனநாயகம், மனித உரிமை, பெண்களின் உரிமை, சமஉரிமை போன்ற சுலோகங்களை தூக்கிப்பிடித்து, இஸ்லாமியவாதிகள் இவற்றுக்கு எதிரானவர்கள் என்ற எண்ணக் கருவை மக்களுக்கு மத்தியில் பதிக்க முயற்சிக்கின்றன. ஜனநாயக காவலராக தம்மை அறிமுகப்படுத்தும் பராக் ஒபாமா ஜூன் 04.2009 இல் எகிப்திய தலைநகர் கெய்ரோவில் முஸ்லிம் உலகை நோக்கிய தனது உரையில்,
"அரசுகள் வெளிப்படைத் தன்மை கொண்ட (Transparancy) தாகவும், மக்களின் நம்பிக்கையை வென்றதாகவும் இருக்க வேண்டும். மக்களின் உரிமைகளையும், சுதந்திரத்தையும் திருடக் கூடாது. சுதந்திரமாக வாழும் உரிமை அவர்களுக்கு உத்தரவாதமளிக்கப்பட்டிருக்க வேண்டும். இவை வெறுமனே அமெரிக்காவின் சிந்தனையல்ல. இவைதான் மனித உரிமைகள். சுதந்திரம்,பாகுபாடற்ற நிருவாகம், சமஉரிமை வழங்கும் நபர்களுக்கு, அவர்கள் எங்கிருந்தாலும் அவர்களை நாம் ஆதரிக்கின்றோம். மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் அரசுகளின் இருப்புகள் மிகவும் உறுதியானதாக இருக்கும். ஆனால், மக்களை அடக்கியாள எத்தனிக்கும் அரசுகளின் இருப்புகள் நிச்சயமாக ஆட்டம் கண்டு அழிந்து போகும். ஐக்கிய அமெரிக்கா சட்டத்துக்குக் கட்டுப்பட்டு அமைதியை விரும்பும் நபர்களின் அழைப்பை மதிக்கின்றது. அவர்களுடன் (கருத்துகள்) நாம் ஒன்றுபடாவிட்டாலும், மக்களால் தெரிவுசெய்யப்பட்ட, அவர்களின் உரிமைகளை மதித்து, ஆட்சி நடாத்தும் அரசுகளை நாம் வரவேற்கிறோம்." (The New York Times 4th of June, 2009)
அதிபர் ஒபாமா இவ்வுரையை நிகழ்த்தும்போது அதற்கு தலைமை தாங்கியவர் அதிபரின் மிகவும் நேசத்திற்குரிய முன்னாள் எகிப்திய ஜனாதிபதி ஹுஸ்னி முபாரக் ஆவார்.
இஸ்லாமியவாதிகள் அரசியலில் ஈடுபடுவது புதிய ஒரு புதிய விடயமல்ல. 1920 களிலேயே அவர்கள் அரசியல் களத்தில் குதித்து விட்டனர். பெரும்பாலும் எதிர்க்கட்சியாக இருந்து செயற்பட்டதுதான் அதிகம். ஆனால் 1940 களுக்குப் பிறகு இஸ்லாமிய அமைப்புகள் மதச்சார்பற்ற சிந்தனைகள், சோசலிஸ கட்சிகள் போன்றவற்றுடன் கூட்டுச் சேர்ந்து சூடான், ஜோர்தான், யெமன்,அல் ஜீரியா போன்ற நாடுகளில் ஆட்சிக்கு வந்தது. இதற்கு சிறந்த உதாரணம் 1977 இல் சூடானில் மதச்சார்பற்ற நிமைரியின் அரசுடன் ஒன்றுபட்ட தனைக் குறிப்பிடலாம்.
இஸ்லாமியவாதிகள் ஜனநாயக தேர்தல்கள் மூலமாக ஆட்சிக்கு வருகின்றபோதெல்லாம் இஸ்லாத்தின் எதிர் சக்திகள் பல முட்டுக் கட்டைகளைப் போட்டு வந்தன. கடந்த கால வரலாற்றில் இதற்கு நிறைய உதாரணங்கள் காணப்படுகின்றன. அல் ஜீரியாவில் 1991 இல் ஜப்ஹதுல் இன்காத் அல் இஸ்லாமி என்ற இஸ்லாமிய அமைப்பு அஷ்ஷெய்க் அப்பாஸ் மதனியின் தலைமையில் பெருவாரியான விருப்பு வாக்குகளால் தெரிவு செய்யப்பட்டாலும்,இராணுவம் அக்கட்சிக்கு ஆட்சியை நடத்த விடவில்லை.
மாறாக அப்பாஸ் மதனி உட்பட பலர் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டனர். 2006 இல் ஹமாஸ் பலஸ்தீன தேர்தலில் பதாஹ் கட்சியை தோல்வியுறச் செய்து பெரு வெற்றியீட்டியது. இவ்வெற்றிக்குப் பரிசாக காஸா மீது பொருளாதாரத் தடை விதித்து திறந்த சிறையில் பொதுமக்கள் அடைக்கப்பட்டனர். ஆனால், 2002 இல் துருக்கியில் ரஜப் தையிப் அர்தூகான் தலைமையிலான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி (AKP) வெற்றி பெற்றது. அவ்வரசை கவிழ்க்க பல முயற்சிகள் மேற்கொண்டாலும், அதன் ஸ்திரத்தன்மையும் தம்மை இஸ்லாமியவாதிகளாக பிரகடனப்படுத்தாமையும் அவர்களின் இருப்பை அசைக்க முடியாதுள்ளது.
தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பெரு வெற்றி பெற்று 2023 ஆம் ஆண்டில் Great Turkey ஐ நோக்கி நகர ஆரம்பித்துள்ளது. இவ்வருட பொருளாதார வளர்ச்சி 9% ஆக அதிகரித்துள்ளது. எனினும், ஐரோப்பிய ஒன்றியத்தில் துருக்கியைச் சேர்த்துக் கொள்வதில் ஜேர்மன், பிரான்ஸ் அதிபர்கள் முட்டுக் கட்டையாக உள்ளதாக பிரதமர் அர்தூகான் ஒரு செவ்வியில் குறிப்பிட்டிருந்தார்.
28.10.2011 இல் நடந்து முடிந்த தூனிஸிய தேர்தலில் அந்நஹ்ழா இயக்கம் 217 ஆசனங்களில்90 ஆசனங்களை, அதாவது 49.44% வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றது. 10 மில்லியன் மக்களைக் கொண்ட தூனிஸியாவில் ஏறத்தாழ 90% பொது மக்கள் வாக்களித்திருந்தனர். எனினும், தம்முடன் போட்டியிட்டு 2 ஆம், 3 ஆம் இடங்களைப் பெற்ற மதச்சார்பற்ற கட்சிகளை தம்முடன் பங்காளர்களாக சேர்த்து ஆட்சியினை அமைத்துள்ளனர்.
அறபுகளின் வசந்தம் மொரோக்கோ நாட்டிலும் வீசத் துவங்கியது. ஆயுதங்களற்ற இரத்தம் சிந்தா புரட்சியாக அது கணிக்கப்படுகிறது. இவ்வெழுச்சியின் எதிரொலியாக மொரோக்கோ நாட்டின் மன்னர் 6 ஆம் முஹம்மத் அந்நாட்டின் யாப்பில் திருத்தங்களை மேற்கொண்டார். பாராளுமன்றத்துக்கு கூடுதல் அதிகாரங்களை வழங்கியுள்ளார்.
கடந்த 25.11.2011 இல் இடம்பெற்ற தேர்தலில் மொரோக்கோ இஹ்வானுல் முஸ்லிமூன் கட்சியான நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சி வரலாறு காணாத பெருவெற்றியைப் பெற்றது.13.5 மில்லியன் வாக்களர்களில் 45% வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன. 395 ஆசனங்களுக்கான தேர்தலில் இஸ்லாமியக் கட்சி 107 ஆசனங்ளைப் பெற்றது. 2 ஆம் இடத்தைப் பெற்ற இஸ்திக்லால் கட்சியுடன் கூட்டணி சேர்ந்துள்ளது. அக்கட்சி பெற்ற 60 ஆசனங்களுடன் சேர்ந்து அரசாங்கத்தை அமைப்பதற்கு நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் தலைவர் அப்துல் இலாஹிற்கு மன்னர் அழைப்பு விடுத்திருக்கின்றார்.
28.11.2011 இல் எகிப்தில் நடந்த தேர்தலிலும் எகிப்திய இஹ்வானுல் முஸ்லிமூன் அமைப்பு முன்னணியில் திகழ்கின்றது. நேர்மையான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் இஸ்லாமியவாதிகள் பெரும் வெற்றியை பெறுவர் என்ற அரசியல் ஆய்வாளர்களின் கூற்று உண்மைப்படுத்தப்பட்டுள்ளது.
இஹ்வான்களின் அரசியல் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சி (FJP) வெற்றி பெற்றால் ஜன நாயக கூட்டணியுடன் (Democratic Alliance) கூட்டுச் சேர்ந்து ஆட்சியை அமைக்கும் என இஹ்வான் வெப் இணையத்தளம் தகவல் வெளியிட்டிருந்தது.
அவ்வாறே யெமனில் நீதியான தேர்தல் நடைபெறுமாக இருந்தால் அத்தஜம்முஉ அல் யெமனிலில் இஸ்லாஹ் (யெமன் இஹ்வானுல் முஸ்லிமூன்) பெரு வெற்றி பெற வாய்ப்பிருப்பதாக வழ்ழஹ் அல் கான்பர் (அல் ஜஸ்ராவின் முன்னாள் நிறைவேற்று அதிகாரி)28.11.2001 இல் கார்டியன் பத்திரிகையில் குறிப்பிட்டிருந்தார். அதேபோல் சிரியா, லிபியா,லெபனான் மற்றும் பல நாடுகளில் இஸ்லாமியவாதிகள் ஆட்சிபீட மேறும் சாத்தியங்களே அதிகம் உள்ளன.
எனவே, ஜனநாயகம் (Democracy) மேற்குலகில் தோன்றினாலும் அதன் பல அம்சங்கள் இஸ்லாத்தின் விழுமியங்களுடன் ஒத்துப் போகின்றன.
ஷெய்க் யூஸுப் அல்-கர்ளாவி, "ஜனநாயகத்தின் பெறுமானங்களான சுதந்திரம், மனித உரிமைகள் இஸ்லாத்தின் அடிப்படை கோற்பாடுகளாகும். மேற்குலகு இதனை உரிமைகள் என்கின்றது. நாம் இதனை கடமைகள் என்கின்றோம். உரிமைகள் சிலபோது தளர்த்தப்படலாம். ஆனால் கடமைகள் கட்டாயம் நிறைவேற்றப்பட வேண்டும்" என்கிறார்.
எனவேதான், இஸ்லாமியவாதிகள் ஜனநாயகத்தை முன்னிறுத்தி தேர்தலில் குதித்தபோது வெற்றி பெற முடியுமாக இருந்தது. இன்னும் பல நாடுகளில் அவர்கள் வெற்றி பெறுவார்கள்.
இன்ஷா அல்லாஹ்.