Wednesday, 4 January 2012

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது?


வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது?



Unhcr-logoவடக்கில் மீள்குடியேற்றப்படும் மக்களை பழைய அகதிகள் என்றும் புதிய அகதிகள் என்றும் பிரித்து தனது சேவையை செய்கின்றது. அதில்முஸ்லிம்களை பழைய அகதிகள் என்று கூறியு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தினரால் எந்தவிதநிவாரணமும் முஸ்லிம்களுக்குவழங்கப்படாதுள்ளது. என அமைச்சர் றிசாத்பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது என்றும் கூறினார்.

நாம் இஹ்வான்களுக்கே வாக்களித்தோம்


நாம் இஹ்வான்களுக்கே வாக்களித்தோம், அவர்களே மிகுந்த புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையுமுடையவர்கள் - பாதிரியார் மகார் பௌசி

Father Maher Fowziஎகிப்தின் அலக்ஸாந்திரியாவைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் இஹ்வான்களின் கட்சியான சுதந்திரத்திற்கும் நீதிக்குமான கட்சியின் வேற்பாளர்களுக்கே வாக்களித்தனர். அவர்களை நாங்கள் புரிந்துணர்வும் சகிப்புத்தன்மையும் மிக்கவர்களாகவே காண்கின்றோம் என அலக்ஸாந்திரியா கிறிஸ்தவ ஆலயத்தின் ஆயர் பாதிரியார் மகார் பௌசி தெரிவித்துள்ளார்.
ஒரு சில விடயங்களில் நாம் அவர்களுடன் உடன்படாத போதும் நிறைய விடயங்களில் நாங்கள் அவர்களுடன் உடன்படுகின்றோம். பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கும் இயலுமை அவர்களுக்கே உள்ளது என்பதால் நாம் அவர்களுக்கே வாக்களித்தோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த நாட்டில் முஸ்லிம்களே பெரும்பான்மையானவர்கள் என்றவகையில் இஸ்லாமியவாதிகளின் செல்வாக்கு சாதாரணமானது எனத் தெரிவித்திருக்கும் அவர் கிறிஸ்தவர்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழ்ந்துவந்துள்ளனர் என்றும் முஸ்லிம்களுடன் நல்லிணக்கமாக இருத்தல் அல்லது அவர்களுடன் வாழ்தல் என்பது புதிய ஒரு விடயமல்ல என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தீவிர இஸ்லாமிய கருத்துப் போக்குக் கொண்டவர்களை மிதவாத இஸ்லாமியவாதிகளால் சமாளிக்கமுடியும் எனத் தாம் எதிர்பார்ப்பதாகவும் கிறிஸ்தவர்களின் பிரச்சினைகளுக்காக மக்கள் சபையில் கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் முஸ்லிம்களே பலமாக ஆதரித்துப் பேசக்கூடியவர்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Tuesday, 3 January 2012

வரலாற்றின் வேர்கள்


வரலாற்றின் வேர்கள்!


வரலாற்றின் வேர்கள்.!
வரலாற்று பக்கங்கள்  இரண்டு நிறங்களை கொண்டதாகும் முதலாவதானது கருப்பு அது அறிவு ஜீவிகளின் பேனா மை இரண்டாவதானது சிகப்பு அது தியாக செம்மல்களின் செங்குருதி இப்படியான இரண்டு மைகளையும் உள்ளடக்கியது தான் முஸ்லிம்களின்  கடந்த கால வரலாறு.
முஸ்லிம்கள் எட்டு திக்கிலும் வீறு கொண்டு வெற்றி முரசு கொட்டிய காலத்தை நாம் உற்று நோக்கினால் நமக்கு புலப்படுவது இஸ்லாமிய அறிவியலின் முதிர்ச்சியும் முஸ்லிம்  அறிஞர்களின் அறிவு ஞானமும் தான். அந்த அளவிற்கு  மருத்துவம், கணிதம், புவியியல், உயிரியல், வானசாஸ்திரம் என எல்லா துறைகளிலும் முஸ்லிம்களின் ஆதிக்கம் இருந்தது. ஏன் இன்றைய அறிவியலின் அறிவு பெட்டகமாக விளங்கும் ஐரோப்பாவிற்கே அறிவியலை தந்தது முஸ்லிம்கள்  தான் என்றால் அது மிகையாகது.

ஏன் இந்த கொல வெறி?


இடஒதுக்கீடு: ஏன் இந்த கொல வெறி?


இடஒதுக்கீடு ஏன் இந்த கொல வெறி
சிறுபான்மை சமூகத்தினருக்கு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (ஒ.பி.சி) இடஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை மத்திய அரசு அறிவித்தது. இத்தீர்மானத்திற்கு எதிராக பாரதீய ஜனதா கட்சியும், சங்க்பரிவார அமைப்புகளும் தீவிரமாக களமிறங்கியுள்ளன.
மதத்தின் அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாதாம் தேவைப்பட்டால் இடஒதுக்கீட்டிற்கு எதிராக உள்நாட்டு போருக்கும் பா.ஜ.க தயாராகுமாம்!
மத்தியில் ஆளும் காங்கிரஸ் கட்சி இம்முறை உ.பி உள்ளிட்ட ஐந்து மாநில சட்ட பேரவை தேர்தல்களில் நோட்டமிட்டு இடஒதுக்கீடு அறிவிப்பை வெளியிட்டிருந்தாலும், பாராட்டத்தக்கதொரு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பதை மறுக்க முடியாது.
மத அடிப்படையிலான இடஒதுக்கீடு அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என பா.ஜ.க தலைவர்கள் தங்களது எதிர்ப்பை நியாயப்படுத்த சுட்டிக் காட்டுகின்றனர். அரசியல் சட்டத்துடனும், சிறுபான்மையின மக்களுடனும் பா.ஜ.கவிற்கும், சங்க்பரிவாரத்திற்கும் அணு அளவேனும் மதிப்பிருந்தால் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறி வரலாற்றுச் சின்னமான பாப்ரி மஸ்ஜிதை இடித்து தள்ளியிருப்பார்களா? அரசியல் சட்டத்தையும், நீதிபீடத்தையும் சிறிதளவேனும் மதித்திருந்தால் சிறுபான்மை வகுப்பினரான முஸ்லிம்களை முற்றிலும் ஒழித்துக்கட்ட இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்ட நரேந்திர மோடியை தலையில் தூக்கி வைத்து ஆடியிருப்பார்களா? சுருக்கமாக கூறினால், பாரதீய ஜனதா கட்சி மற்றும் சங்க்பரிவார அமைப்புகளின் எதிர்ப்பின் பின்னணியில் இருப்பது வகுப்புவாதமும், முஸ்லிம்கள் மீதான தீராத பகையுமாகும். இவற்றை விட வேறு எந்த அஜண்டாவும் அவர்களுக்கு இல்லை.
இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு கிடைத்தே தீரவேண்டும் என்றால் அவர்கள் இந்துமதத்தின் தாழ்த்தப்பட்ட ஜாதிகளில் அபயம் தேடிக்கொள்ளலாம் என்ற தொகாடியாவின் வகுப்பு வெறியை உமிழும் விஷம் தோய்ந்த வார்த்தைகளில் இருந்து சங்க்பரிவாரத்தின் இடஒதுக்கீட்டின் மீதான வெறுப்பை நாம் விளங்கிக் கொள்ளலாம்.
சிறுபான்மையின வகுப்பினர் என்றால் முஸ்லிம்கள் மட்டுமல்ல கிறிஸ்தவர்கள், பார்ஸிகள் ஆகியோரும் அடங்குவர். ஆனாலும், ‘முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு’ என்ற கார்ப்பரேட் ப்ரேக்கிங் நியூஸ்கள் வந்த உடனேயே தளர்ந்துகிடந்த பா.ஜ.க தலைவர்கள் துள்ளி எழுந்து தங்களை அலங்கரித்துக் கொண்டு தொலைக்காட்சியில் வாதம் புரிய கேமராவுக்கு முன்னால் போஸ் கொடுக்க அணிவகுத்தனர். மதசார்பின்மையும், தேசப்பாதுகாப்பும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக தொலைக்காட்சி விவாதங்களில் வெதும்பினர்.
பல தசாப்தங்களாக இந்தியாவில் பாரபட்சம் மற்றும் சமூக சூழல்களின் பலி ஆடுகளான முஸ்லிம்களுக்கு இந்த குறைந்தளவு இட ஒதுக்கீடாவது ஆறுதல் அளிக்கட்டும் என்ற கருத்து எந்த சேனல்களின் விவாதத்திலும் இடம்பெறவில்லை. மாறாக லோக்பால் என்ற ஊழல் எதிர்ப்புக் குழுவில் கூட அச்சமூகத்திற்கு இடம் அளிக்கக்கூடாது என்ற கூக்குரல்தான் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் கேட்டது.
தினமணி என்ற பார்ப்பன நாளேடு பழத்தில் ஊசியை அல்ல விஷ ஊசியை ஏற்றும் கைங்கர்யத்தை தலையங்கம் என்ற பெயரில் வெளியிட்டுள்ளது. மேலோட்டமாக படித்தால் நன்றாகத்தான் இருக்கும் அதன் பின்னணியில் இருக்கும் மேல்ஜாதி திமிரும், காழ்ப்புணர்வும் அதனை சற்று ஆழ்ந்து கவனித்தால் புரியவரும்.
பா.ஜ.கவின் அதே இனவெறியைத்தான் சேனல்களில் நடந்த விவாதங்களிலும் காணமுடிந்தது. ‘அரசியல் சட்ட விரோதம்’ என்ற போர்டை மாட்டி வைத்துவிட்டு ஆக்ரோஷமடைந்தார்கள். மகளிர் இடஒதுக்கீடு மசோதா வரும் வேளையில் அரசியல் சட்டவிரோதம் என்ற குரல் எழும்பவில்லை. அரசியல் சட்டத்தின் எந்த இடத்திலும் 50 சதவீத இடங்களை மகளிருக்கு ஒதுக்கவேண்டும் என்று கூறவில்லை. ஆனாலும், உள்ளாட்சிகளில் 50 சதவீத இடங்களும் மகளிருக்கு மனதார வழங்கப்பட்டுள்ளது. அரசியல் சட்டம் என்பது கடைசி வார்த்தை அல்ல. நூற்றுக்கும் மேற்பட்ட திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதை அறியாமல் இந்த மற்போர் நடக்கவில்லை. அரசு தீர்மானம் வந்தால் அதன் தடைகள் ஒவ்வொன்றாக அகலும். முஸ்லிம்கள் அத்தகைய சலுகைகளுக்கு எல்லாம் தகுதியானவர்கள் அல்லர் என்பது தான் உண்மையான பின்னணி.
1956-ஆம் ஆண்டு சீக்கிய மதப் பிரிவினரையும், 1990-ஆம் ஆண்டு புத்த மதத்தை சார்ந்தவர்களையும் எஸ்.சி/எஸ்.டி பட்டியலில் சேர்த்த வேளையில் யாரும் அதனை எதிர்க்கவில்லை. இடஒதுக்கீட்டின் பலனை முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் அடங்கிய சிறுபான்மையினர் அனுபவித்து விடக்கூடாது என்ற மேல்ஜாதி ஆதிக்க மனப்பாண்மைதான் தேசிய நீரோட்டத்தில் காணப்படுகிறது.
இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய தலித்துகளுக்கு கூட  இடஒதுக்கீட்டின் பலன் கிடைக்கக் கூடாது என மேல்ஜாதி வர்க்கம் பாடுபடுகிறது.
சிறுபான்மை சமூகத்தினருக்கு அவர்களின் தனித்தன்மையை இழக்காத வகையிலான நலத் திட்டங்களுக்கு உறுதியான நடவடிக்கைகள் தேவை என அரசியல் சட்டம் கூறுகிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினரின் முன்னேற்றத்திற்காக இடஒதுக்கீடும், உறுதியான நடவடிக்கைகளும் தொடர வேண்டியது வரலாற்று ரீதியான ஒரு அத்தியாவசியமும் ஆகும். ஆனால், சுதந்திரம் கிடைத்து 60 ஆண்டுகளுக்கு பிறகும் மத சிறுபான்மையினரின் நிலை என்ன? கல்வி, அரசு பணி, தனியார் துறை, மீடியா – என அனைத்துத் துறைகளிலும் அவர்களின் பிரதிநிதித்துவம் எவ்வளவு? வருமானம், சுகாதாரம், தொழில் துறை ஆகியவற்றில் நாடு அடைந்த முன்னேற்றத்தில் ஒடுக்கப்பட்ட சமூகம் அடைந்த பலன் என்ன? இக்கேள்விகளுக்கு எல்லாம் எதிர்மறையான பதில்களே கிடைக்கும்!
வி.பி.சிங் மண்டல் கமிஷன் பரிந்துரையை நடைமுறைப்படுத்திய வேளையில் ஊடகங்களும், கார்ப்பரேட்டுகளும், தேசிய அரசியல் கட்சிகளும் வீதிகளில் கட்டவிழ்த்துவிட்ட வெறுப்பின் ஆக்ரோஷ பிரகடனத்தை மறக்க இயலாது. இறுதியில் தலித்-பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களின் அரசியல் உணர்வை அங்கீகரிக்க வேண்டிய சூழலுக்கு தேசிய கட்சிகள் தள்ளப்பட்டன. இடஒதுக்கீட்டின் அளவை அந்தந்த மாநிலங்கள் தீர்மானிக்கலாம் என மண்டல் கமிஷன் சிபாரிசு செய்த போதிலும் முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகம் அனைத்து மாநிலங்களிலும் புறக்கணிக்கப்பட்டனர். இந்தியாவில் முஸ்லிம்களை ஒ.பி.சி பிரிவில் உட்படுத்தி இடஒதுக்கீட்டின் பலன் கிடைப்பதற்கு அரசியல் சட்டம் தடையாக இருக்கவில்லை. ஆனால், அதற்கான அரசியல் ரீதியான துணிச்சல் எவருக்கும் இருக்கவில்லை.
தென்னிந்திய மாநிலங்கள்தாம் இதில் முன்மாதிரியாக திகழ்ந்தன. கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா ஆகிய மாநிலங்கள் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீட்டை அமுல்படுத்தின. தமிழகத்தில் 3.5 சதவீதமும், கர்நாடகாவில் 4 சதவீதமும் இடஒதுக்கீடு வழங்கிய பொழுது அதன் பெயரால் சச்சரவுகள் எழவில்லை. கேரளா மாநிலத்தில் அரசு பணிகளில் 12 சதவீத இடஒதுக்கீடு முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாட்டின் மிகப்பெரும் சிறுபான்மை முஸ்லிம்களை ஒ.பி.சியில் உட்படுத்தி இதர மாநிலங்களும் இடஒதுக்கீட்டை அமுல்படுத்தி இருக்கலாம். 19 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் உ.பியில் மண்டல் கமிஷன் பரிந்துரையின் பலன் குறைந்த அளவே முஸ்லிம்களுக்கு கிடைத்தது. 32 ஆண்டுகள் இடதுசாரிகளால் ஆளப்பட்ட மேற்கு வங்காள மாநிலத்தில் முஸ்லிம்களின் சதவீதம் 24 சதவீதம் ஆகும். ஆனால் இடதுசாரிகள் ஆட்சியிலிருந்து விலகுவதற்கு சற்று முன்புதான் ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் பரிந்துரையான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாக அறிவித்தனர்.
வட இந்தியாவில் தலித், பிற்படுத்தப்பட்ட அரசியல் வலுப்பெற்ற போதிலும் முஸ்லிம்கள் வெறும் பார்வையாளர்களாகவே இருந்தனர். தற்பொழுது அடித்தளத்திலிருந்து சில அசைவுகள் முஸ்லிம் சமூகத்திடம் தென்படுகிறது. மே.வங்கத்தில் இதுவரை இடதுசாரிகளுக்கு அளித்து வந்த ஆதரவை முஸ்லிம்கள் மமதாவிற்கு அளித்தனர். அஸ்ஸாமில் முஸ்லிம்கள் காங்கிரஸிற்கு வாக்களிக்காமல்  மவ்லானா அஜ்மலின் கட்சிக்கு வாக்களித்து எதிர்கட்சி அந்தஸ்தை வழங்கியுள்ளனர். தொப்பி அணிந்தும், அஜ்மீர் தர்காவிற்கு நன்கொடை அளித்தும் முஸ்லிம்களை நம்மோடு நிறுத்தலாம் என கருதிய லாலுவின் திட்டமும் பீகாரில் செல்லுபடியாகவில்லை. உ.பியில் மாயாவதியும், முலாயமும் முஸ்லிம்களின் அசைவுகளை அடையாளம் காண்கின்றனர்.
கல்வி, வேலைவாய்ப்பு என கண்ணியமான வாழ்க்கையை தேடிய முஸ்லிம்கள் துவக்கியுள்ள போராட்டத்தின் ஒரு பகுதிதான் இடஒதுக்கீட்டிற்கான கோரிக்கை.
பிரிவினைக்கு பிறகும் இந்தியாவில் வாழ தீர்மானித்த ஒரு சமூகத்திற்கு இந்தியாவை ஆண்ட ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் இழைத்த அநீதியின் சுட்டெரிக்கும் உண்மைகளைத்தான் சச்சாரும், ரங்கநாத் மிஸ்ராவும் தங்களது ஆய்வில் வெளிக்கொணர்ந்தனர். தலித்துகளை விட மோசமான நிலையில் முஸ்லிம்கள் வாழ்வதாக சச்சார் கூறுகிறார். முஸ்லிம் சமுதாயம் தங்களது நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதிச்செய்ய 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என நீதிபதி ரங்கநாத் மிஷ்ரா கமிஷன் பரிந்துரைச் செய்தது. கிராமங்களில் வாழும் முஸ்லிம்களின் 41.6 சதவீதம் பேருக்கு  மாத வருமானம் 825/ ரூபாய் மட்டுமே என்ற உண்மையை ஆக்ஷன் எய்டும், இந்தியன் சோஷியல் இன்ஸ்ட்யூட்டும் நடத்திய புதிய ஆய்வு அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், அப்துல் கலாம் இந்தியாவின் குடியரசு தலைவரானதும், ஹமீத் அன்ஸாரி துணை குடியரசு தலைவராக தொடர்வதும், குரைஷி தேர்தல் கமிஷனராக நியமிக்கப்பட்டதும், ஷாருக்கான், சல்மான் கான் போன்ற கான் வகையறாக்கள் பாலிவுட்டில் பிரபலமானதையும் சுட்டிக்காட்டி ஒரு மேதாவித்தனமான கேள்வியை எழுப்புகிறார்கள் – இவர்கள் எல்லாம் உயர் பதவிகளை எட்டியதற்கு இடஒதுக்கீடுதான் காரணமா? என்பதுதான் அக்கேள்வி.
அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் முஸ்லிம்களை தேசிய நீரோட்டத்திலிருந்தும், அதிகாரத்திலிருந்தும் அகற்றுவதற்கு திட்டமிட்டு முயற்சிகள் நடைபெறும் வேளையில் இத்தகைய முட்டாள்தனமான கேள்விகளை எழுப்பி முஸ்லிம்களை சமாதானப்படுத்தலாம் என எவரும் கருதவேண்டாம். இந்தியாவில் ஜனநாயகம் மற்றும் மதசார்பின்மையின் அடித்தளமே சிறுபான்மை மக்களுக்கு கிடைக்கும் பிரதிநிதித்துவமும், உரிமைகளுமாகும். அவர்களை புறந்தள்ளிவிட்டு எந்த சமூகமும் முன்னேற முடியாது.
ஆதலால் காங்கிரஸும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும் செய்யவேண்டியது என்னவெனில் முஸ்லிம்களுக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை அமுல்படுத்துவதாகும். முஸ்லிம் வேடம்பூண்ட  ஷாநவாஸ் ஹுஸைன், முக்தா அப்பாஸ் நக்வி போன்ற எட்டப்பர்களை விலைக்கொடுத்து வாங்கிவிட்டு அவர்கள் மூலமாக ஊளையிடும் பா.ஜ.க, சங்க்பரிவார்களின் அச்சுறுத்தலுக்கு மத்திய அரசு பணிந்துவிடக் கூடாது. 

பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் – ஊடகங்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை


பரபரப்புக்கு முக்கியத்துவம் அளிக்காதீர்கள் – ஊடகங்களுக்கு மன்மோகன் சிங் அறிவுரை



pm manmohan
புதுடெல்லி:ஊடகங்கள் மீது வெளியே இருந்து எவ்வித கட்டுப்பாடும் உருவாகாது என பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.
‘தைனிக் ஜாக்ரண்’ என்ற ஹிந்தி நாளிதழின் நிறுவனர், ஆசிரியருமான பூரண சந்திர குப்தாவின் நினைவாக சிறப்பு அஞ்சல் தலையை டெல்லியில் நேற்று (திங்கள்கிழமை) வெளியிட்டு உரை நிகழ்த்துகையில் இந்தக் கருத்தை அவர்
தெரிவித்தார். அதேவேளையில் வாசகர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதற்காக பரபரப்புக்கு மட்டும் முக்கியத்துவம் தருவதை கட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று ஊடகங்களை அறிவுறுத்தினார் மன்மோகன்.

கம்யூனிச ராஜவம்ச ஆட்சி

கொரியாவின் கம்யூனிச ராஜவம்ச ஆட்சி!

கொரியாவின் கம்யூனிச ராஜவம்ச ஆட்சி!
முன்பு சோவியத் குறித்த கதை ஒன்று உலாவியது:ஒரு நாள் இரண்டு திருடர்கள் ரஷ்யாவின் க்ரம்ளின் மாளிகையில் நுழைந்தனர். சோசியலிச நாடு என்பதால் மாளிகை முழுவதும் தேடிய பொழுதும் திருடர்கள் இருவருக்கும் கையில் ஒன்றும் கிடைக்கவில்லை. நிராசையுடன் சோர்ந்துபோய் மாளிகையை விட்டு வெளியே வரும் வேளையில் அவர்களின் பார்வையில் இரண்டு தகரப்பெட்டிகள் தென்பட்டன. கிடைத்ததே மிச்சம் என கருதி இரண்டு தகரப் பெட்டிகளையும் தூக்கி தங்கள் இருப்பிடத்திற்கு கொண்டு சென்றனர். அப்பெட்டிகளை இரண்டையும் ஆர்வத்துடன் திறந்தபொழுது அவற்றில் சில காகிதங்கள் இருந்தன. அக்காகிதங்களில் அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தேர்தலின் முடிவுகள் முன்கூட்டியே எழுதிவைக்கப்பட்டிருந்தன.
கம்யூனிச சுவர்க்கங்களில் நடைமுறைப்படுத்தும் ஜனநாயகத்தின் அவல நிலையை இக்கதையே விளக்கும். இதனை கூற காரணம் வடகொரியாவிலிருந்து வரும் செய்திகளாகும்.
கம்யூனிச இரும்புக் கோட்டையான வடகொரியாவில் வாழ்நாள் அதிபராக பதவி வகித்த கிம் ஜோங் இல் கடந்த டிசம்பர் 17-ஆம் தேதி மரணமடைந்தார். ஆனால் 19-ஆம் தேதி அன்றுதான் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனமான கொரியன் சென்ட்ரல் நியூஸ் ஏஜன்சி(கெ.சி.என்.எ) கிம் ஜோங் இல்லின் மரணச்செய்தியை வெளியிட்டது. புதன்கிழமை கிம் ஜோங் இல்லின் இறுதிச்சடங்குகள் தலைநகரில் நடந்து முடிந்தன. புதிய அதிபராக கிம் ஜோங் இல்லின் 28-வயது மகன் கிம் ஜோங் உன் பதவியேற்றுள்ளார்.
ஜனநாயகத்தை குறித்தும், கருத்து சுதந்திரத்தை குறித்தும் அனைவரையும் வசீகரிக்கும் வகையில் கட்டுரைகளை எழுதுவதிலும், உரைகளை நிகழ்த்துவதிலும் நமது நாட்டின் இடதுசாரி முற்போக்குவாதிகள் திறமைசாலிகள். ஆனால், சிந்தனையும், நாகரீகமும், தொழில்நுட்பமும் மிகவும் வளர்ச்சியடைந்த இந்த நூற்றாண்டில் கூட பிற்போக்குத்தனமான ஆட்சிமுறையையும், சமூக கட்டமைப்பையும் கொண்ட தேசமாக வடகொரியா திகழ்கிறது.
விசித்திரமான, முட்டாள்த்தனமான வழிகள் மூலமாக அந்த நாட்டையும், அங்கு வாழும் மக்களையும் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிபுரிந்து வருகிறது. வெட்க கேடான தனிநபர் வழிபாடும், வீரப்புருஷ ஆராதனையும் அதன் ஒரு பகுதியாகும். கிம் ஜோங் இல்லின் மரண செய்தியை அறிவித்த கே.சி.என்.எவின் செய்திக்குறிப்பில் ரசிக்கத்தக்க வகையில் வர்ணனை இடம் பெற்றிருந்தது. அது இவ்வாறு: ‘அன்பிற்குரிய தலைவரின் மரணத்தினால் வலுவானதொரு குளிர்காற்று ஸ்தம்பித்து நின்றது. பரிசுத்தமான பைக்த் மலைகள் மீது வானம் கடும் சிகப்பு நிறமானது. தடாகத்தில் பனிக்கட்டிகள் வெடித்தது. வானமும், பூமியில் ஒரேபோல குலுங்கின.’
வடகொரியா மட்டுமல்ல, கம்யூனிஸ்டுகள் எங்கே எல்லாம் ஆட்சி புரிகின்றார்களோ அங்கே ஏகாதிபத்தியமும், குடும்ப ஆட்சியும், தனிநபர் வழிபாடும் உள்ளிட்ட பிற்போக்குத்தனமான கொள்கைகளின் விசித்திரங்களை மக்கள் மீது வலுக்கட்டாயமாக திணிக்கும் போக்கை காண இயலும்.
அல்பேனியாவின் அன்வர் ஹோஜா, சீனாவின் மாவோ, கம்போடியாவின் போல்போட், ரஷ்யாவின் ஸ்டாலின், ருமேனியாவின் செஷஸ்க்யூ என கம்யூனிச ஆட்சியாளர்களின் பட்டியல் நீளுகிறது.
சோசியலிச கம்யூனிஸ்ட் சுவர்க்கத்தை கட்டியெழுப்ப இவர்கள் கொன்றொழித்த மக்களின் எண்ணிக்கை பல லட்சங்களை தாண்டும். முற்போக்கு சிந்தனையில் ஊறிப் போனவராக கருதப்படும் கியூபாவின் ஃபிடல் காஸ்ட்ரோ கூட இதில் விதி விலக்கல்ல. தனது சொந்த சகோதரனை தனது வாரிசாக நியமித்துள்ளார். ஜனநாயகத்தின் சிறியதொரு அசைவை கூட இவர்கள் அனுமதிப்பதில்லை. ஒரு பெண்ணை ஆட்சியில் அமர்த்துவதற்கு ஒரு கம்யூனிச நாடு கூட இதுவரை தயாராகவில்லை.
சோசியலிச-மதசார்பின்மையின் பெயரால் அரபு நாடுகளில் ஆட்சியில் அமர்ந்த சர்வாதிகாரிகளை அந்நாடுகளில் வாழும் இளைஞர்கள் கிளர்ந்தெழுந்து அதிகார நாற்காலியில் இருந்து பிடித்து கீழே தள்ளும் இக்காலக்கட்டத்தில் வடகொரியாவை குறித்து சிந்திப்பது முக்கியமாகும்.
அரபு நாடுகளின் மதசார்பற்ற சோசியலிச சர்வாதிகார ஆட்சி முடிவுக்கு வந்து சுதந்திரமாக தேர்தல்கள் நடைபெற்ற வேளையில் மக்கள் இஸ்லாமிய இயக்கங்களை வெற்றிப் பெறச் செய்துள்ளனர். இஸ்லாமிய கட்சிகள் ஜனநாயக ரீதியாக நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெறும் வேளையில் ஜனநாயகம் தகர்ந்து போவதாக பிரச்சாரம் செய்கின்றனர் நமது நாட்டின் மதசார்பற்ற அறிவுஜீவிகள்!
கம்போடியா முதல் கொரியா வரையிலான அனுபவங்கள் மனித வரலாற்றில் கறுப்பு அடையாளங்களாகும். தமது கொள்கையை எந்த நாடுகளில் எல்லாம் பரிசோதனை செய்தார்களோ அங்கெல்லாம் பிற்போக்குத்தனமான அணுகுமுறைகளை தாம் கம்யூனிஸ்டுகள் கையாண்டனர். கிம் ஜோங் அத்தகையதொரு பிற்போக்குத்தனமான முன்மாதிரியாக வரலாற்றில் இடம் பெறுவார்!

பாலியல் கொடுமைகளுக்கு காரணம் கண்ணியமற்ற ஆடையே


பாலியல் கொடுமைகளுக்கு காரணம் கண்ணியமற்ற ஆடையே -கர்நாடகா அமைச்சர்

Due to sexual abuse indecent dressing1
பெங்களூர்:கண்ணியமான ஆடையை அணிவது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான கொடுமைகளில் இருந்து ஓரளவாவது காப்பாற்றும் என கர்நாடகா குழந்தைகள்-மகளிர் நலதுறைஅமைச்சர் சி.சி.பாட்டீல் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியிருப்பதாவது:
“பிறரை கவர்ந்து இழுக்கும் ஆடையை பெண்கள் அணிவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் எதிரானவன். பெண்கள் தாங்கள் அணியும் ஆடையைக் குறித்து பூரண விழிப்புணர்வு உடையவர்களாக இருத்தல் அவசியம். பெண்களுடன் ஆண்களுடன் சேர்ந்து அவர்களுடைய வேலைகளை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது.

தொடரும் அநீதி


தொடரும் அநீதி:அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு தள்ளுபடி

அப்துல் நாஸர் மஃதனி
புதுடெல்லி:பெங்களூர் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக அநியாயமாக கைது செய்யப்பட்டு பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கேரள மாநில பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனியின் ஜாமீன் மனு உச்சநீதிமன்றத்தில்
தள்ளுபடிச் செய்யப்பட்டது.
கர்நாடகா மாநில உயர்நீதிமன்றம் ஜாமீன் மனுவை தள்ளுபடிச் செய்தததை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தை அணுகினார் மஃதனி.

மின்சாரம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு


கஷ்மீர்:மின்சாரம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு – ஒருவர் பலி

கஷ்மீர் மின்சாரம் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிசூடு ஒருவர் பலி
ஸ்ரீநகர்:கஷ்மீரில் கடும் குளிர் நிலவுவதுடன் மின்தடையும் நீடிப்பதால் மக்களின் மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கஷ்மீரில் பாராமுல்லா மாவட்டத்தில் போனியார் பகுதியை சார்ந்த மக்கள் மின்சாரம் கோரி மின்நிலையத்தின் முன்னால் போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்கள் மீது சி.ஐ.எஸ்.எஃப் என்ற மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நடத்திய அராஜக துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணமடைந்தார். இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக ஐந்து பாதுகாப்பு படையினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.