Monday, 5 March 2012

நிம்மதி எனும் மகிழ்ச்சி...


நிம்மதி எனும் மகிழ்ச்சி...

  

'சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே. நிம்மதியாக வாழ முயற்சி செய். உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்.'எங்கோ வாசித்த இந்த வரிகளின் ஆழத்தில் நிம்மதியும் சந்தோஷமும் மறைந்திருந்து தம் பொருளை உணர்த்தி நிற்கின்றன.

உலக வாழ்க்கையின் அலங்காரங்கத்தில் சந்தோஷமே நிரந்தரக் குறியீடாக இருக்கின்றது.ஒரு ஒற்றைச் சந்தோஷத்திற்காக மனிதன் என்னென்ன வெல்லாமோ செய்து விடுகின்றான்.தன் சிந்தனையின் எல்லாத் தொலை வுகளிலும் அது பற்றிய நினைவுகளையே வேலிகளாக போட்டு வைத்தி ருக்கிறான்.

இந்த உலக வாழ்க்கையை வெளிப்பார்வையில் பார்க்கும் ஒருவன் அதனைப் பிரமாண்டமாகவே கண்டு கொள்கிறான்.அதன் வளைவை, தொய்வை, நிச்சய மின்மையை அவன் காணத்தவறிவிடுகிறான்.

வாழக்கை பற்றிய புரிதலற்றவன் சந்தோஷமாக இருக்கிறான்.வாழ்க்கையை சரியாகப் புரிந்தவன் நிம்மதியாக இருக்கிறான்.வாழ்க்கை பற்றிய புரிதலி னடியாகவே நிம்மதியும் சந்தோஷமும் தோன்றுவதாகத் தெரிகிறது.

சந்தோஷம் நீடித்து நிலைப்பதில்லை.அது கணப் பொழுது வாழ்க்கை போலத்தான்.வருவதும் போவதும்,திடீரெனத் தோன்றி மறைவதும்தான் அதன் இயல்பு.மேக உருமாற்றம் போல அது தன்னை எப்போதும் மாற்றிக் கொண்டுதான் இருக்கின்றது.

நிம்மதி என்பது ஆளற்ற தனித் தீவு மாதிரி.பாரிய அலைகளை உண்டாக்கும் கடல்களுக்கு மத்தியிலும் தன் தனித்தன்மையுடன் அது நிற்கின்றது.எந்த சப்தமும் அதன் நிசப்தத்தை கலைத்து வடுவதில்லை.

மனிதன் நிம்மதியை முற்படுத்தாமல் சந்தோஷத்தை முற்படுத்தியதே அவன் கவலையைப் பெற்றுக் கொள்ளக் காரணமாகியது.அவ்வப்போதைய சந்தோ ஷங்களுக்காக மனிதன் நெடுநாள் நிம்மதியை தொலைத்துக் கொள்கி றான்.பின்னர் ஏமாற்றங்களைச் சந்தித்தபின் எதிர்பார்ப்பில்லாமல் வாழக் கற்றுக்  கொள்கிறான்.

நிம்மதியென்பது சந்தோஷத்தினடியாக மட்டும் வருவதல்ல.ஒரு நியாயமான கவலையும் நிம்மதியைக் கொண்டு வந்து தர முடியும்.நிம்மதி என்பது எப்போதும் இருப்பது.மகிழ்ச்சியும் கவலையும் வந்து போகக் கூடியது. இதனைத்தான் நபியவர்கள் “ஒரு முஃமின் நிலை ஆச்சரியத்திற்கு ரியது...மகிழ்ச்சியான ஏதும் நடந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்து கிறான்.துன்பங்கள் ஏதும் நடந்தால் பொறுமையாக இருக்கிறான்“(முஸ்லிம்) எனக் கூறினார்கள்.

மனிதன் உலகிற்கு வந்த நோக்கத்தை புரிந்து உணர்ந்து கொள்ளும் போதுதான் சந்தோஷத்தையும் நிம்மதியையும் மிகச் சரியாகப் அறிந்து கொள்கிறான். இதனையே அல்லாஹ் ;அல்லாஹ்வை நினைவுபடுத்துவதன் மூலம் உள்ளங்கள் அமைதியடைகின்றன' என்கிறான்

உள்ளமே உயர்ந்திடு


உள்ளமே உயர்ந்திடு




வாழ்க்கைச் சூழல்கள் ஒட்டி நிற்கின்ற எட்டு காரியங்களை ஒரே வசனத்தில் பொதிந்து, இறைவன் மனிதனின் விருப்பங்களை இதோ இவ்வாறு கேட்கின்றான்:
(நபியே) நீர் கூறும்: உங்களுடைய தந்தைமார்களும், உங்களுடைய பிள்ளைகளும், உங்களுடைய சகோதரர்களும், உங்களுடைய மனைவிமார்களும், உங்களுடைய குடும்பத்தார்களும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டம் (எங்கே) ஏற்பட்டு விடுமோ என்று நீங்கள் அஞ்சுகின்ற (உங்கள்) வியாபாரமும், நீங்கள் விருப்பத்துடன் வசிக்கும் வீடுகளும், அல்லாஹ்வையும் அவன் தூதரையும் அவனுடைய வழியில் அறப்போர் புரிவதையும் விட உங்களுக்கு பிரியமானவையாக இருக்குமானால், அல்லாஹ் அவனுடைய கட்டளையை (வேதனையை)க் கொண்டு வருவதை எதிர்பார்த்து இருங்கள் – அல்லாஹ் பாவிகளை நேர்வழியில் செலுத்துவதில்லை. (சூரா அத்தவ்பா9:24)
தந்தைமார்கள், பிள்ளைகள், சகோதரர்கள், மனைவிமார்கள், குடும்பத்தார்கள், செல்வம், வியாபாரம், வீடு – இவை ஒரு மனிதனின் சிந்தனையில் எப்பொழுதும் நிறைந்திருப்பவை.
இந்த அம்சங்கள் ஒன்று சேர்ந்து மனிதனை ஒரு வளையத்திற்குள் மாட்டி விட்டுள்ளன.
இந்த வளையத்திற்கு வெளியே அந்த அம்சங்களுக்கு ஆதரவான சில விஷயங்களும் உள்ளன. அவை சடங்குகளும், சம்பிரதாயங்களும் அடங்கிய உலகம்.
இந்த இரண்டு கூடுகளுக்கிடையில் வேலிகள் இல்லை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு மனிதன் விருப்பப்பட்ட பொழுதெல்லாம் மாறிக்கொள்கின்றான்.
இந்தக் கூடுகளுக்கு அப்பாற்பட்டு யதார்த்தங்களைக் கொண்ட இன்னொரு உலகம் உண்டு. அங்கேதான் சரியும், தவறும் – நன்மையும், தீமையும் வேறு பிரிந்து நிற்கின்றன.
சமுதாயத்தில் இருக்கவேண்டியது நன்மையா, தீமையா என்பது அங்கேதான் தீர்மானிக்கப்படுகிறது. மேலாதிக்கம் செலுத்துவதற்கான போராட்டங்கள் அங்கேதான் அரங்கேறுகின்றன. சண்டை, சச்சரவுகள் சதா நடக்கின்றன.
வாழ்க்கையில் அன்றாடம் நடக்கும் இந்த விஷயங்கள் குறித்து மக்காவிலுள்ள குறைஷிகளுக்கு அல்லாஹ் கீழ்க்கண்ட வசனத்தில் இவ்வாறு போதிக்கின்றான்:
(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாஹ்வை (புனிதப் பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் – அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான். (சூரா அத்தவ்பா9:19)
தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கும், சடங்குகளுக்கும் அப்பால் ஈமான் கொண்ட விசுவாசிகளுக்காக அல்லாஹ் நிர்ணயித்து வைத்ததுதான் வாழ்க்கையின் இந்த மூன்றாவது பகுதி.

பிரிட்டனில் குறையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை!


பிரிட்டனில் குறையும் கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை!

britain
லண்டன்:மதசார்பற்றவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் வேளையில் 2030-ஆம் ஆண்டிற்குள் பிரிட்டன் கிறிஸ்தவ நாடு என்ற பதவியை இழந்துவிடும் என்று ஆய்வறிக்கை கூறுகிறது.
கிறிஸ்தவ மதத்தில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஐந்து லட்சம் பேர் வெளியேறுகின்றனர். அதேவேளையில் மதத்தை மறுப்பவர்கள், மதசார்பற்றவர்கள் ஆகியோரின் எண்ணிக்கை ஆண்டு தோறும் ஏழு லட்சத்திற்கும் அதிகமாக அதிகரித்து வருகிறது. இவ்வறிக்கையை டெய்லி மெயில் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
2030-ஆம் ஆண்டில் மதசார்பற்றவர்கள் கிறிஸ்தவர்களை விட அதிகமாக மாறுவார்கள் என்று லேபர் ஃபோர்ஸ் சர்வே கூறுகிறது.
அதேவேளையில் கிறிஸ்தவம் தளர்ச்சியை சந்தித்த போதும் முஸ்லிம்களும், ஹிந்துக்கள், புத்த மதத்தினர் ஆகியோரின் எண்ணிக்கை மிகச்சிறந்த வளர்ச்சியை அடைவதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

மோடிக்கு எதிராக அமெரிக்க இந்திய சமூகம்!


மோடிக்கு எதிராக அமெரிக்க இந்திய சமூகம்!

'We want Gandhi's Gujarat, not Modi's Gujarat'
வாஷிங்டன்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை நிகழ்ந்து 10-வது ஆண்டு நிறைவுறும் வேளையில் அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தின் தலைமையில் நரேந்திர மோடியை எதிர்த்து கண்டன போராட்டம் நடைபெற்றது.
40-க்கும் மேற்பட்ட அமைப்புகளின் சார்பாக நடந்த போராட்டத்தில் மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நூற்றுக்கணக்கானோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
மன்ஹாட்டனில் காந்தி சிலைக்கு அருகே திரண்ட இந்தியர்கள் குஜராத் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்றும், குற்றவாளிகள் சட்டத்தின் முன்னால் நிறுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

பாலியல் அத்துமீறல்: புகார் அளித்த ஆசிரியை நீக்கம்!


பாலியல் அத்துமீறல்: புகார் அளித்த ஆசிரியை நீக்கம்!

அஹ்மதாபாத்:குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள நேசனல் இன்ஸ்ட்யூட் ஆஃப் டிசைன்(என்.ஐ.டி) வளாகத்தில் பாலியல் அத்துமீறல் குறித்து புகார் அளித்த ஆசிரியை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான தீபா சல்கா என்பவர் 2 வருட ஒப்பந்தத்தின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் ஆசிரியையாக என்.ஐ.டியில் நியமிக்கப்பட்டார். இவரது நியமனம் தொடர்பாக வருடாந்திர மதிப்பீடு நடைபெறும் என்றும், வேலையில் திருப்தி இல்லாவிட்டால் ஒரு மாத நோட்டீஸ் வழங்கி பணியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார் என்றும் நியமன உத்தரவில் கூறப்பட்டிருந்தது.

Tuesday, 21 February 2012

நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வபாத்தும்


நபி (ஸல்) அவர்களின் வாழ்வும் வபாத்தும்



இப்னு மஸாஹிரா
நபியவர்களின் வபாத் எல்லோர் மனதையும் அதிரவைக்கும் ஒரு சம்பவமாகும். இதனைப்பற்றி பேசும் போதே எமது மனது அதிர்ச்சியில் ஆழ்கிறது.
தனது கணவனும் சகோதரனும் போராட்டத்தில் ஷஹீதாக்கப்பட்டு விட்டனர் என்று கூறியதையும் பொருட்படுத்தாதுறஸூல் (ஸல்) அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள்றஸூல் (ஸல்) அவர்கள் எவ்வாறிருக்கிறார்கள் என கூறிய ஸஹாபிய பெண்ணுக்கு அல்லாஹ் அருள்பாளிக்கட்டும். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களை நேரடியாக கண்ட பின்னரே அமைதியடைந்தாள். அவள்: "அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு முன்னால் எந்த சோதனையும் கால் தூசுக்கு சமன்" என்று கூறினாள். இவ்வாறே ஸஹாபாக்களின் உறவு நபி (ஸல்) அவர்களோடு இருந்தது.
ஏன் இப்படியான உறவு இருந்ததுஎன்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. அதுதான் நபி (ஸல்) அவர்கள் மீது ஸஹாபாக்கள் வைத்த அன்பாக இருக்கிறது. நபியவர்களின் பண்பாட்டால் கவரப்பட்ட பலர் இவ்வாறான உறவை வைத்திருந்ததை நாம் அறிவோம். ஆனால்எம்மில் சிலரிடம் நல்ல பண்புகள் அரிதாகிக்கொண்டே போகின்றன. ஒருமுறை ஒருவரிடம் குறிப்பிட்டதொரு பரீட்சை எழுதப்போகிறேன் எனக்கூறினேன். (இது பரீட்சை எழுதப்போகும் தினத்தில் நடைபெற்றது). அதற்கு அவர் "இந்த பரீட்சையையா எழுதப்போறீங்கசு என இழிவான தொனியில் குறிப்பிட்டார். ஆனால்நான் இதே விடயத்தை ஒரு சகோதர இனத்தவரிடம் குறிப்பிட்டபோது அவர் என்னைப் பாராட்டிஉட்சாக வார்த்தைகளைக் கூறி அனுப்பினார். நாம் எம்மை மாற்றாதவரை அல்லாஹ் மாற்றமாட்டான்.

மோடியும் ஹிட்லரும் எவ்வித வித்தியாசமுமில்லாத தலைவர்கள்


மோடியும் ஹிட்லரும் எவ்வித வித்தியாசமுமில்லாத தலைவர்கள்


இந்தியாவின் வளர்ச்சி பெற்ற மாநிலமான குஜராத்தை ஆட்சி செய்யும் மோடிக்கும்2 ஆம் உலக மகா யுத்தத்தின் சூத்திரதாரியும், அப்போதைய ஜெர்மனின் தலைவருமான ஹிட்லருக்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என்று நடிகை நந்திதா தாஸ் கூறியுள்ளார்.

பொலிவூட்டின் துணிச்சலான நடிகை என்று பெயரெடுத்த இவர், படத்தயாரிப்பாளரும் ஆவார். இவர் 2002 இல் குஜராத்தில் முஸ்லீம்களுக்கு எதிரான நடந்த அரச பயங்கரவாதத்தை அடிப்படையாக வைத்து பிராக்’ எனும் படமும் எடுத்துள்ளார்.
அண்மையில் இந்தியாவின் வதோதராவில் நடைபெற்ற கருந்தரங்கொன்றுக்கு விசேட பிரதிநிதியாகக் கலந்து கொண்ட நந்திதா தாஸிடம், 2002 இன் குஜராத்திற்கும் 2012 இன் குஜராத்திற்கும் உள்ள வித்தியாசம் என்ன என்பது தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போது இவ்வாறு கூறினார். 

இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு இன்னொரு ஆதாரம்!


காதர்அத்னான்:இஸ்ரேலிய பயங்கரவாதத்திற்கு இன்னொரு ஆதாரம்!

The father of Palestinian prisoner Khader Adnan holds a poster
ஃபலஸ்தீன் விடுதலை போராளி காதர் அத்னானின் சிறை உண்ணாவிரதம் 65 தினங்களை கடந்த வேளையில் இஸ்ரேலிய பயங்கரவாதத்தின் கோரமுகமும் மீண்டும் ஒரு முறை சர்வதேச சமூகத்தின் முன்னால் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
அரசு நிர்வாக ரீதியான சிறை(Administrativedetention) என்ற பெயரால் விசாரணையோ, குற்றச்சாட்டோ இன்றி இஸ்ரேல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீன் மக்களுக்காக தனி மனிதனாக போராடி வருகிறார் அத்னான். மருத்துவமனையின் படுக்கையில் மிகவும் ஆபத்தான நிலையில் படுத்திருக்கும் அத்னான், உலகின் மிகப்பெரிய க்ரிமினல் அரசை மண்டியிடச் செய்வாரா? என்பதை உலகம் உற்றுநோக்கி வருகிறது.
இஸ்ரேல் என்ற ரவுடி தேசத்தின் அடக்குமுறைகளையும், அக்கிரமங்களையும் கடந்த 45 ஆண்டுகளாக ஃபலஸ்தீன் மக்கள் அனுபவித்து வருகின்றார்கள். வதை சிறைகளும், வன்முறையும் இஸ்ரேலிய சியோனிஸ்டுகளிடமிருந்து பிரிக்கமுடியாத அம்சம் என்பது உலகிற்கு தெரிந்த சேதி. சர்வதேச சட்டங்கள் எதுவும் தனக்கு பாதகமில்லை என்ற திமிரிலும், அமெரிக்காவின் அரவணைப்பிலும் ஆட்டம் போட்டுவரும் இஸ்ரேலுக்கு அத்னான் போன்ற ஃபலஸ்தீன போராளிகள்தாம் சிம்ம சொப்பனமாக திகழ்ந்து வருகிறார்கள்.
யார் இந்த அத்னான்? – இஸ்லாமிக் ஜிஹாத் என்ற ஃபலஸ்தீன் விடுதலைப் போராட்ட அமைப்பின் உறுப்பினர் என்பதை தவிர வேறொன்றும் அவரைப் பற்றி வெளியுலகிற்கு தெரியாது. மேற்குகரையில் தனது வீட்டிலிருந்து கடந்த டிசம்பர்-17-ஆம் தேதி நள்ளிரவில் இஸ்ரேல் ராணுவம் அத்னானை கைது செய்தது. விசாரணை என்ற பெயரில் 18 தினங்கள் கொடூர சித்திரவதைகளுக்குப் பிறகு குற்றம் எதுவும் சுமத்தாமல் அரசு  நிர்வாகரீதியான சிறை என்று கூறி அத்னானை சிறையில்அடைத்தது இஸ்ரேலிய சியோனிஷ அரசு.
முன்னூறுக்கும் மேற்பட்ட ஃபலஸ்தீனர்கள் இதே குற்றம் சுமத்தப்பட்டு தற்போது இஸ்ரேலிய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கைது குறித்து எவ்வித கேள்வியும் எழுப்புவதற்கு வாய்ப்பை வழங்காமல் இந்த சட்டப்பிரிவின் அடிப்படையில் எவரையும் 6 மாதம் வரை சிறையில் தள்ளலாம். பின்னர் தேவைப்பட்டால் சிறைக்காவலை மீண்டும் ஆறுமாதத்திற்கு நீட்டிக்கலாம். இத்தகையதொரு கொடிய கறுப்புச் சட்டம் உலகில் இஸ்ரேலில் மட்டுமே அமுலில் உள்ளது.
கடந்த இரண்டு மாதங்களிடையே இரண்டு தடவை மட்டுமே அத்னான் தனது மனைவி மற்றும் பிள்ளைகளை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதுவும் அரை மணிநேரம் வீதம். பேசும் பொழுது அருகில் ஆயுதமேந்திய இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் வட்டமிடுவர். உண்ணாவிரதப் போராட்டம் காரணமாக உடல்நிலை மோசமடைந்துள்ள அத்னானை நான்கு வயதான மகளால் அடையாளம் காணமுடியவில்லை என்று அவரது மனைவி ராண்டா அத்னான் கூறுகிறார். தற்போது இரவு நேரங்களில் திடீரென விழித்து தந்தையை கேட்டு மகள் அழுவதாக ராண்டா தெரிவிக்கிறார். திருமணத்திற்கு முன்பு ஐந்து தடவையும், திருமணத்திற்கு பிறகு இரண்டு தடவையும் இஸ்ரேல் ராணுவம் அத்னானை கைது செய்துள்ளது. ஆனால், அத்னான் ஏதேனும் தாக்குதல்களில் தொடர்புடையவர் என்பதை நிரூபிக்க ஒரு முறை கூட இஸ்ரேலிய அதிகாரிகளால் இயலவில்லை.
அத்னானை குறித்து அவருடன் முன்பு அஸ்கெலடான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அபூ மரியா நினைவு கூறுகையில், ‘அத்னானுடன் இருந்த வேளையில் சிறை என்பது ஒரு பல்கலைக்கழகமாக இருந்தது. அத்னான் ஒரு பேராசிரியரைப் போல் இருந்தார்’ என்று குறிப்பிடுகிறார்.

சமூக வலைத்தளங்க​ளும் – இஸ்லா​மிய அடிப்படை வாதங்களும்


சமூக வலைத்தளங்க​ளும் – இஸ்லா​மிய அடிப்படை வாதங்களும்

imagesCAIKARW6
பல நாடுகளில் சமூகப் புரட்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் முகநூல், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் இந்தியாவில் சமூக பிணைப்புகளை ஏற்படுத்தவில்லை, அது வெறும் அரட்டையடிப்பதற்கான இணைய வசதி மட்டும் தான் என்ற சந்தேகம் இருந்தது, ஆனால் மத்திய அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக அதன் செயல்பாடுகளில் தலையிடுவதற்கும், தேசிய நலத்திற்கு எதிரான செயல்களை கண்காணித்து தணிக்கை செய்வதற்குமான முயற்சியில் சட்ட வரைவுகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
ஆனால் எனது தமிழ் முகநூல் facebook  நண்பர்களிடம் கடந்த இரண்டு நாட்களாக ஒரு குறிப்பிட்ட விடயத்தை பற்றிய தீவிர விமர்சனங்கள், பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. அது போன்ற கடுமையான பின்னோட்டங்கள் comments கள் , அணுமின் எதிர்ப்புகளுக்கோ அல்லது மூவர் தூக்கு தண்டனை எதிர்ப்பிற்கோ, முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கோ கூட எழுந்தது இல்லை.
அது இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் கடையநல்லூரில் வாழும் “இஸ்லாமிய நாத்திகர்” ஒருவரின் வாழ்க்கை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவரை காப்பாற்ற உடனடியாக உதவி தேவை என்றொரு அவசர செய்தியை நண்பர் தனது முகநூலில் வெளியிட்டது தான் தாமதம்… கொட்டி தீர்த்துவிட்டனர்..
இஸ்லாமியர்கள் மதவாதிகள், அவர்கள் தாலிபான்கள், காட்டுமிராண்டிகள், கருத்து சுதந்திரத்திற்கும், பெண் சுதந்திரத்திற்கும் எதிரானவர்கள், அவர்கள் வாழ வேண்டியது ஆஃப்கானிஸ்தானிலோ, பாகிஸ்தானிலோதான் இந்தியாவில் இல்லை…. இன்னும் ஏராளமான கமெண்ட்கள்…
இதுவரை இந்துத்துவவாதிகளால் மட்டுமே உபயோகப்படுத்தப்பட்ட சொல்லாடல்கள் பெரியாரியவாதிகள் என்று சொல்லிக் கொள்பவர்களிடம் இருந்தும் பெண்ணியவாதிகளிடமிருந்தும், பொதுவுடமை பேசுபவர்கள் என்ற பெயர்களில் வெறுப்பு வார்த்தைகள் முக நூலில் கொட்டப்பட்டுள்ளது…….
ஆழ் மனதிலிருந்து தெரித்துவிழுந்த வெறுப்புணர்வு….. இஸ்லாமியர்கள் பொதுவெளியில் என்னதான் நட்புடனும் சகோதரத்துடனும் பழகினாலும் .. நெருக்கடி நிலையில் அவர்கள் தனிமை படுத்தப்படுவார்கள், குஜராத்தில் மோடியின் நரவேட்டையிலும் அப்படித்தானே நடந்திருக்கும், பக்கத்துவீட்டு காரர், நெருங்கி பழகிய நண்பர்கள், மதச்சார்பற்ற அமைப்புகள், நெருக்கடி நேரம் என்று வரும் பொழுது அவன் முஸ்லிம்..

ஹரியானாவில் ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது!


தொடர் குண்டுவெடிப்பு:ஹரியானாவில் ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது!

Haryana blasts
பாட்டியாலா:ஹரியானா மாநிலத்தில் பல்வேறு இடங்களில் நடந்த குண்டுவெடிப்புகளுடன் தொடர்புடைய ஐந்து ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீஸ் கைது செய்துள்ளது.
சாகர் என்ற ஆசாத், ஷாம் நிவாஸ், குர்ணாம்சிங், ப்ரவீண் சர்மா, ராஜேஷ்குமார் ஆகிய ஹிந்துத்துவா தீவிரவாதிகள் மஸ்ஜிதுகள், மதரசாக்கள், இறைச்சி வெட்டுமிடங்கள் ஆகிய இடங்களில் 2009-ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்புகளை நிகழ்த்தியது தொடர்பான வழக்குகளில் போலீஸ் கைது செய்துள்ளது.
மேவாத்தில் ஸதக்பூரி கிராமத்தில் உள்ள இறைச்சி வெட்டுமிடம், மலாவ் மற்றும் ஜிந்தில் உள்ள மஸ்ஜித் ஆகிய இடங்களில் ஹிந்துத்துவா தீவிரவாதிகள் குண்டுகளை வைத்துள்ளனர். இதில் சாகர் என்ற ஆசாத் இக்குண்டுவெடிப்புகளின் முக்கிய சூத்திரதாரி ஆவான்.