Saturday, 7 April 2012

சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஒரு குற்றிவாளியையேனும் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும் – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த


சிறுவர் துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் ஒரு குற்றிவாளியையேனும் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும் – அமைச்சர் திஸ்ஸ கரலியத்த



Tissaசிறுவர் துஷ்பிரயோகங்களைப் பாதுகாக்க வேண்டுமாயின் அத்தகைய குற்றங்களில் ஈடுபடும் ஒருவரையேனும் பகிரங்கமாகத் தூக்கிலிட வேண்டும், அவர்களுக்கு எந்தவொரு மன்னிப்பும் வழங்கக் கூடாது என சிறுவர் அபிவிருத்தி, மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரலியத்த தெரிவித்தார்.
கொழும்பில் நடைபெற்ற வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
புதிது புதிதாகச் சட்டங்களை உருவாக்க முன்னர் ஏற்கனவே அமுலில் உள்ள சட்டங்களை உரிய முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம், பெண்கள், சிறுவர்களை பலவந்தமாக துஷ்பிரயோகப்படுத்தல் போன்றவற்றில் ஈடுபட்டவர்களுக்கு பிணை வழங்குதலும், அவர்கள் சார்பாக நீதிமன்றங்களில் ஆஜராகுதலும் ஒழுக்கரீதியாக ஏற்றுக்கொள்ளக் கூடிய செயல்களல்ல என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment