Friday, 11 May 2012

சீதையைப் போல வாழணுமா? – அதெல்லாம் புராண காலம் – நீதிமன்றத்தில் ருசிகரம்!


A wife should be like goddess Sita- Bombay HC
மும்பை:புராணங்களை நிஜ வாழ்க்கையில் எல்லாம் அமல்படுத்த நினைத்தால் என்ன நடக்கும். இது நீதிபதிகளுக்கும் தெரிவதில்லை. ராமருடன் சீதை காட்டுக்குப் போன புராண கதையை உதாரணம் காட்டிய நீதிபதிகளுக்கு பெண்ணொருத்தி கறாராக பதிலளித்துள்ளார்.
இந்திய ஷிப்பிங் கார்ப்பரேஷனில் பணிபுரியும் கணவர் அந்தப் பெண்ணை 2000-த்தில் திருமணம் செய்துகொண்டார். அவர் கொல்கத்தாவைச் சேர்ந்தவர். அந்தப் பெண் மும்பையைச் சேர்ந்தவர். 5 ஆண்டுகள் அவர் கப்பலில் சென்று பணி செய்தார். அப்போது மனைவி மும்பையில் இருந்தார். 2005-ல் அவருக்கு போர்ட் பிளேரில் நிலத்திலேயே வேலை போட்டுக்கொடுத்தார்கள். ஆனால் மனைவி அவருடன் செல்ல மறுத்துவிட்டார். இப்போது மணவாழ்வின் பரிசாக 9 வயதில் மகள் இருக்கிறார்.
போர்ட் பிளேர் வர முடியாது என்று மனைவி பிடிவாதமாக மறுத்துவிட்டதால் கணவர் விவாகரத்து கோரி வழக்கு தொடுத்தார்.
நீதிபதிகள் இந்த வழக்கைக் கேட்டு திகைத்துப் போய், “இந்த ஒரு காரணத்துக்காகவா பிடிவாதம் பிடிப்பது? கணவர் பணிபுரியும் ஊருக்குப் போங்களம்மா” என்று அறிவுரை கூறினார்கள். ராமருடன் சீதை காட்டுக்கே போன கதையையும் கூறினார்கள்.
ஆனால் அந்த பெண்மணியோ, “அதெல்லாம் புராணத்தோடு போகட்டும், என்னால் போர்ட் பிளேர் போக முடியாது” என்று கறாராகக் கூறிவிட்டார். இதனைத் தொடர்ந்து இவ்வழக்கின் விசாரணை ஜூன் 21-ஆம் தேதிக்கு  ஒத்திவைக்கப்பட்டது.

No comments:

Post a Comment