May 2012

புதுடெல்லி:இரவில் வேலைப் பார்க்கும் பெண்களின் பாதுகாப்பிற்காக அரசும், காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் அவர்களில் பெரும்பாலோர் பாதுகாப்பற்ற நிலையிலேயே பணியாற்றுவதாக அசோசியேட் சேம்பர்ஸ் ஆஃப் காமேர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரீ ஆஃப் இந்தியா நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
இரவு ஷிஃப்டில் வேலைப் பார்க்கும் 73 சதவீத பெண்களும் பாதுகாப்பற்ற நிலையிலேயே உள்ளனர். இந்தியாவின் 10 முக்கிய நகரங்களில் 2000க்கும் அதிகமான இரவு வேலைப்பார்க்கும் பெண்களிடம் நடத்திய ஆய்வில் இந்த விபரம் தெரியவந்துள்ளது.
சிறுதொழில்-மத்தியதர-பெரும் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. பெண்களுக்கு மிகவும் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது இந்தியாவின் தலைநகரான டெல்லியில் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
பெங்களூர், ஹைதராபாத், சென்னை, மும்பை ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன. பி.பி.ஒ, ஐ.டி, மருத்துவமனை, ஊடகங்கள் ஆகிய துறைகளில் பணியாற்றும் பெண்கள்தாம் அதிகமான பாதுகாப்பற்ற சூழலை அனுபவிக்கின்றனர்.
வேலை நேரங்களிலும், அதற்கு பிறகும் இத்துறைகளில் பணியாற்றும் பெண்கள் உடல்ரீதியான, இதர தாக்குதல்களுக்கு ஆளாவதாக ஆய்வு கூறுகிறது.
வேலை முடிந்து செல்லும்பொழுது போதிய வாகன வசதிகள் இல்லாமை, பெண்களின் பாதுகாப்பை உறுதிச்செய்வதற்கு நிறுவனங்களில் போதுமான வசதிகள் இல்லாமை, சக ஊழியர்களின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள் ஆகியன பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழலை உருவாக்குவதில் முக்கிய காரணிகள் ஆகும்.
இரவில் பயண வசதிகள் இல்லாமல் மிகவும் பெண்கள் சிரமத்திற்கு ஆளாவது தலைநகர் டெல்லியில் ஆகும். மும்பை, கொல்கத்தா, சென்னை, புனே ஆகிய நகரங்கள் டெல்லிக்கு அடுத்த இடங்களை வகிக்கின்றன.
சிறுதொழில் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள்(21 சதவீதம்) மிகவும் மனோரீதியான பாதிப்புகளுக்கு ஆளாகின்றனர். மத்திய தர நிறுவனங்களில் இது 14 சதவீதம் ஆகும். பெரும் நிறுவனங்களில் 8 சதவீதம்.
பாதுகாப்பான சூழலை உருவாக்குவதன் மூலமே பெண்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்க முடியும். பால் ரீதியான பாரபட்சம் பொருளாதாரத் துறையை மெதுவாக நொடியச் செய்யும் என ஆய்வு கூறுகிறது. நிறுவனங்களில் டிரைவர்கள் மற்றும் பாதுகாப்பு பணியாளர்களை நியமனம் செய்யும் பொழுது போலீஸ் பரிசோதனை நடத்துதல், புகார்களுக்கு தீர்வு காண்பதற்கான வசதிகளை ஏற்படுத்துதல் ஆகிய பரிந்துரைகள் ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment