Tuesday, 18 September 2012

ஒவ்வொரு தெருவிலும் மரணம் எங்களைக் காத்திருக்கின்றது


Myanmarறவூப் ஸெய்ன்
ஜூன் 10 இல் கட்டவிழ்க்கப் பட்ட படுகொலையும் இனச் சுத்திகரிப்பும் இன்னும் முற்றாகத் தணியாத மியன்மாரில்,ஏற்பட்டுள்ள வெள்ள அனர்த்தம் தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை பெரும் நெருக்கடியில் தள்ளியிருக்கின்றது. கரையோர மாநிலமான ரேக்கினில் உள்ள பான்துபா அகதி முகாமில் அடைபட்டுக் கிடக்கும் பல்லாயிரக் கணக்கான அகதிகளின் நிலை மிகவும் கவலைக்கிடமாக மாறி யுள்ளது.
65 முஸ்லிம் பெரும்பான்மை நாடுகளையும் 150 கோடி மக்களையும் கொண்ட இஸ்லாமிய உலகு மியன்மாரின் ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து இதுவரை எவ்வித உருப்படியான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. பாகிஸ்தான், கட்டார், எகிப்து, துருக்கி, சவூதி அறேபியா ஆகியன மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் காட்டுமிராண்டித்தனத்தை வன்மையாகக் கண்டித்துள்ளன.
இந்தோனேஷியாவில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்ட வீதி ஆர்ப்பாட்டங்கள் நடந்தேறியுள்ளன. அறபுநாடு என்று பார்க்கும்போது கெய்ரோவில் மியன்மாரின் தூதுவராலயத்திற்கு முன்பாகத் திரண்ட மக்கள் வெள்ளம், அந்நாட்டின் கொடியை எரித்ததோடு,படுகொலைகளை நிறுத்துமாறும் வேண்டியது.
இராஜதந்திர ரீதியில் துருக்கி மாத்திரமே இதுவரை மியன்மாருக்கு நேரடி விஜயம் செய்த ஒரே நாடாகும். துருக்கியின் வெளிவிவகார அமைச்சர் அஹ்மத் தாவூத் ஒக்லூ, பிரதமரின் மனைவி இமைன் அர்தூகான் ஆகியோர் கடந்த மாதம் பான்துபா அகதி முகாமைத் தரிசித்ததோடு,மில்லியன் டொலர் பெறுமதியான நிவாரண உதவிப் பொருட்களையும் வழங்கினர்.
Myanmar2இஸ்லாமிய சகோதரத்துவத்தின் அடிப்படையிலேயே துருக்கியின் இந்த ராஜதந்திர விஜயம் அமைந்திருந்ததை அங்கு நடை பெற்ற காட்சிகள் உணர்த்தின. தென்கிழக்காசியாவில் மூடுண்டு வாழும் மியன்மார் சமூகத்தில்,குறிப்பாக முஸ்லிம்கள் மத்தியில் தாவூத் ஒக்லூவின் விஜயம் ஒரு முக்கிய திருப்பமாகும். சில மியன்மார் முஸ்லிம்கள் துருக்கியிலிருந்து சென்ற இத்தூதுக் குழுவை மலக்குகள் என்று வர்ணித்துள்ளனர்.
பெரும்பாலும் பிற சமூகங்களோடும் நாடுகளோடும் எவ்விதத் தொடர்புமற்று அரக்கானின் எல்லைக்குள் அடைக்கப்பட்டிருந்த ரோஹிங்யா இன முஸ்லிம்கள் ஐரோப்பாவிலும் வெள்ளை இன முஸ்லிம்கள் உள்ளனர் என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. மாதாந்தம் பல மில்லியன் திர்ஹம், தீனார், ரியால்களை வீண்விரயம் செய்து வரும் அறபு நாடுகள், துருக்கியிடமிருந்து கற்பதற்கு நிறையவே உள்ளது. மியன்மார் போன்று வறுமையில் வாடும் முஸ்லிம் சமூகத்திற்கு வளம் கொழிக்கும் அறபு நாடுகள் ஏராளமாக உதவலாம். ஆனால், இப்பாரிய வன்முறைகளும் படுகொலைகளும் நிகழ்ந்ததற்குப் பின்பே மியன்மாரிலும் முஸ்லிம் கள் 4 மில்லியன் பேர் வாழ்வது அறபு நாட்டுத் தலைவர்களுக்குத் தெரியவந்திருக்கின்றது.
அறபு இஸ்லாமிய உலகின் நிறுவனங்கள் மற்றும் பிராந்தியக் கூட்டமைப்புகள் என்று நோக்கும்போது, மியன்மார் அரசுக்கெதிரான பொருளாதாரத் தடையை எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் அமைப்பு ˆOPEC அமுல் படுத்தியிருக்கலாம். ஆனால்அது குறித்து அவ்வமைப்பு குறைந்தபட்சம் சிந்திக்கவுமில்லை.
55 உறுப்பு நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் அமையம் ˆOIC ஓகஸ்ட் 14> 15 ஆகிய இரு தினங்களில் அவசரக் கூட்டமொன்றை நடத்தியது. அதில் சிரியாவின் நெருக்கடி மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்கள் குறித்து ஆராயப்பட்டன. ஆயினும்OIC யின் மேட்டுக்குடித் தலைவர்களது ஆடம்பரமான ஒன்றுகூடலாகவும் கூடிக் கலைவாகவுமே அது இருந்தது. மியன்மார் அரசாங்கத்தை அழுத்தும் எவ்வித முடிவும் அதில் எடுக்கப்படவில்லை.
Myanmar3ஈரானும் அல்ஜீரியாவும் எதிர்த்து வாக்களித்த நிலையில்இஸ்லாமிய நாடுகளின் அமைப்பிலிருந்து சிரியாவின் அங்கத்துவம் நீக்கப்பட்டது. அதற்கு அப்பால் எவ்வித நடவடிக்கையையும் அது மேற்கொள்ளவில்லை. ஒன்றுக்கும் இயலாத சபை என்று அதன் பெயரை மாற்றிக் கொள்ளும் அளவுக்கு அதன் இயக்கம் முடங்கியுள்ளது.
25 உறுப்பு நாடுகளைக் கொண்டுள்ள அறப் லீக்>மியன்மார் அரசாங்கம் குறித்து எவ்வித நிலைப்பாட்டையும் இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன்மியன்மார் அரசாங்கம் நியமித்துள்ள ஆணைக்குழு தொடர்பாகதான் திருப்திகொள்வதாகக் கூறியுள்ளமை மிகுந்த கேலிக்கிடமானது. எந்த அரசாங்கம் திட்டமிட்டு இனச் சுத்திகரிப்பை கட்ட விழ்த்ததோ அதே அரசாங்கத்தின் பிரதிநிதிகள் 11 பேரை உள்ளடக்கிய ஆணைக்குழுவொன்றை மியன்மார் அரசு நியமித்துள்ளது.
ரோஹிங்யா முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெற்றுள்ள வன்முறைகளின் சூத்திரதாரிகள் யார் என்பதைக் கண்டறிவது இவ்வாணைக்குழுவின் பொறுப்பு என்றும் அரசாங்கம் அறிவித்துள்ளது. சர்வதேச மனித உரிமை நிறுவனங்களின் தொடர்ச்சியான அழுத்தங்கள் மற்றும் போர்க்குற்ற விசாரணைகளிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மியன்மார் இராணுவ ஜெனரல்கள் மேற்கொள்ளும் இக்கண்துடைப்பு நடவடிக்கையை அறபு இஸ்லாமிய நாடுகள் புறக்கணிக்க வேண்டும். நடுநிலையான சர்வதேச விசாரணைக் குழுவொன்றை நியமிப்பதற்கு ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.
இன்றைய படுகொலைகளின் சூத்திரதாரிகள் யார் என்பது எல்லோருக்கும் தெரிந்த உண்மையே. அது கண்டுபிடிப்புக்குரிய தல்ல. இன்றைய உடனடித் தேவை மியன்மார் முஸ்லிம்களின் இரத்துச் செய்யப்பட்ட குடியுரிமையை மீள் உத்தரவாதம் செய்வதே. அதற்குரிய சர்வதே மனித உரிமை சட்டங்களையும் ஏற்பாடுகளையும் அமுல்நடத்துவதற்கு ஐ.நா. முன்வர வேண்டும்.
1945 இல் சுதந்தரம் பெற்ற மியன்மாரில் ஜனநாயகத் தேர்தல் ஒன்றின் மூலம் 1962 இல் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கத்திற்கு எதிராக நூவின் ‡(Nu Win) மேற்கொண்ட இராணுவ சதிப் புரட்சி மூலம் இராணுவ ஆட்சியொன்று உருவாக்கப்பட்டது. கடந்த 50 ஆண்டுகளாக மியன்மாரில் தொடரும் இந்த இராணுவச் சர்வதிகாரம் ரோஹிங்யா முஸ்லிம்களின் சாவுமணியாகவே பார்க்கப்படுகின்றது.
1000 ஆண்டுகளாக இந்நாட்டில் வசித்து வரும் ரோஹிங்யா முஸ்லிம்களின் குடியுரிமை 1982இல் இராணுவ அரசாங்கத்தினால் ரத்துச் செய்யப்பட்டது. அன்றிலிருந்து முஸ்லிம்கள் மீதான இனச் சுத்திகரிப்பும் அடக்கு முறையும் ஆரம்பித்தது. முஸ்லிம்களின் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நடமாடும் சதந்திரம் தடுக்கப்பட்டது. கல்விக்கான உரிமை மறுக்கப்பட்டது. வணிக நடவடிக்கைகளில் ஈடுபடுவதும் தடுக்கப்பட்டது.
Myanmar1மொத்தத்தில் ஒரு சராசரிப் பிரஜைக்கு உள்ள உரிமை மறுக்கப்பட்டதோடுமியன்மாரின் ஐந்தரைக் கோடி தேரவாத பௌத்தர்களின் எதிரிகளாக முஸ்லிம்கள் கட்டமைக்கப்பட்டனர். இதனால்தான் இன்று இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டுதேரவாத பௌத்த பிக்குகளும் முஸ்லிம்களுக்கு எதிரான கொலை வெறித் தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாலியல் வல்லுறவுசொத்துக்களை சூறையாடல்விரட்டியடிப்பு போன்ற நடவடிக்கைகளுக்கு நாட்டின் பிரபலமான மத குருவான அஷின் ஹித்தவரா தலைமை தாங்குகின்றார். படுகொலைகள் தணிந்துள்ளபோதும் மனிதப் பேரவலம் தொடர்கின்றது. அகதி முகாம்களில் தங்கியிருப்போர் அச்சத்தில் உறைந்து போயுள்ளனர். வெளியில் நடமாடுவதற்கு அஞ்சுகின்றனர். அவர்களுக்கு மத்தியில் ஓர் உளப் பீதி உருவாகிவிட்டது.
நாம் வெளியே செல்ல அஞ்சுகின்றோம். ஏனெனில்மரணம் எங்களை ஒவ்வொரு தெருவிலும் காத்திருக்கிறது என்கிறார் 64 வயதுப் பெண் ஒருவர்.
அரக்கான் மாநிலத்திலிருந்து முஸ்லிம்களைத் துடைத்தழிப்பதில் மியன்மார் இராணுவ அரசும் அமெரிக்க சியோனிஸ கூட்டு சக்திகளும் களத்தில் இறங்கியுள்ளன. இம்மாநிலத்திலுள்ள இயற்கை எரிவாயு மீது அமெரிக்க கம்பனியொன்று முதலீடு செய்யவுள்ளதால் முஸ்லிம்கள் வசிக்கும் நிலம் அதற்கு அவசியமாகியுள்ளது.
இந்தக் கூட்டுச் சதி முயற்சியின் விளைவாகவே முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளும் படுகொலைகளும் அரங்கேறி வருகின்றன. Human Rights Watch தனது 56 பக்க அறிக்கையில்>பாலியல் வல்லுறவு மற்றும் கொலைகளில் ஈடுபடுகின்றவர்களில் பெரும்பாலானோர் அரச படைகளே என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது. இதனால் பெண்கள் உடல் ரீதியிலும் உள ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஒரு சிறுபான்மை முஸ்லிம் சமூகம் இராணுவ அரசினால் குறிவைத்துக் கொள்ளப்படுகின்றது. ஆனால்அறபு இஸ்லாமிய உலகோ நீண்ட உறக்கத்தில் ஆழ்ந்திருக்கின்றது.

No comments:

Post a Comment