Tuesday, 18 September 2012

மியன்மார்: என்று தணியும் இந்த இனவாதம்?


int burma- றவூப் ஸெய்ன் -
இன்று சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ள பர்மிய (மியன்மார்) முஸ்லிம்களின் சோகக் கதை தொடர்ந்த வண்ணம் உள்ளது. ஒன்றில் அவர்கள் தேரவாத பௌத்தத்திற்கு மதம் மாற வேண்டும் அல்லது நாட்டிலிருந்து வெளியேற வேண்டும் என்ற தீர்மானத்தில் அந்நாட்டின் இராணுவ இரும்புச் சர்வதிகாரம் ஒற்றைக் காலில் உள்ளது.
பல்லாண்டுகளாக வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுவிடுவிக்கப்பட்ட சமாதானத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜனநாயகப் போராளி’ என்று மேற்கு நாடுகளால் புகழ்மாலை சூட்டப்பட்ட ஆங்சான்சூக்கியும் இந்தத் தீர்மானத்திற்கு பகிரங்கமாக ஆதரவளித்துள்ளமையே மிகவும் ஆச்சரியமாக உள்ளது.
மியன்மார் முஸ்லிம்கள்
மியன்மாரில் மூன்று பிரதான இன முஸ்லிம்கள் வாழ்கின்றனர். மொத்த சனத்தொகையில் முஸ்லிம்கள் 6 முதல் 10 வீதம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால்இது குறித்த துல்லியமான மதிப்பீடுகள் இல்லை. சுமார் 4 மில்லியன் முஸ்லிம்கள் உள்ளதாக சில இணையங்கள் கூறுகின்றன.
பிரதான மூன்று இனக் குழுமங்கள்
1. பான்தாய் (பர்மிய பூர்வீகக் குடிகள்)
2. பஷூஷ் (சீனதாய்லாந்து பூர்வீகத்தினர்)
3. ரோஹிங்யா (இந்திய பூர்வீகத்தினர்) தற்போதைய பங்களாதேஷ் மக்களுக்கு நெருக்கமானவர்கள்.
இவர்களே இன்று இனச் சுத்திகரிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.
இதற்கு மேலே ஒருபடி சென்று அரக்கான் முஸ்லிம்கள் மியன்மாரின் வந்தேறு குடிகள்அவர்கள் உண்மையான நாட்டுப் பிரஜைகள் அல்ல என்று அப்பட்டமாகக் கூறியிருப்பது மியன்மார் முஸ்லிம்களின் தலைவிதி எல்லா சக்திகளாலும் பந்தாடப்படுகின்றது என்பதையே உணர்த்துகின்றது. இதிலுள்ள மிகவும் அவலமான விடயம் என்னவெனில்அருகிலுள்ள பங்களா தேஷ் பிரதமர் ஹஸீனா வாஜித்கொலை வெறித் தாக்குதலிலிருந்து உயிரைக் கையில் வைத்துக் கொண்டு ஓடிவரும் அகதிகளை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியிருப்பதுதான்.
உலகில் மிகப் பெரும் துன்பங்களை அனுபவிக்கும் சிறுபான்மைச் சமூகம் மியன்மார் முஸ்லிம்கள்தான் என்று அறிக்கை விட்டதோடுபான் கீ மூன் மௌனமாகி விட்டார். ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தலைவர் நவநீதம் பிள்ளைமியன்மார் படுகொலைகள் மனித இனத்திற்கு எதிரான போர்க் குற்றங்களாகக் கருதப்பட்டுமியன்மார் இராணுவ அரசாங்கம் விசாரிக்கப்பட வேண்டும் என்று கருத்து வெளியிட்டுள்ளபோதும்அது செயலுக்கு வருவதற்கான அறிகுறிகள் எதுவுமே தென்படவில்லை.
அரச பயங்கரவாதத்தின் பிரதிநிதிகளான ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர்இதுவரை 20,000பேரை பல்வேறு குரூரமான வழிகளின் மூலம் கொலை செய்துள்ளதோடுஆயிரக்கணக்கான ரோஹிங்யா முஸ்லிம் பெண்களை பாலியல் ரீதியில் வல்லுறவுக்கு ஆளாக்கியுள்ளனர். நூற்றுக்கணக்கான பள்ளிவாயல்கள்இலட்சக்கணக்கான வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளன அரகான் சாம்பல் மேடயாய் காட்சி தருகின்றன. அரசாங்கத்தின் இந்த இனச் சுத்திகரிப்பு நன்கு திட்டமிட்டே மேற்கொள்ளப்படுகின்றன.
* மியன்மார்: தென்கிழக்காசிய நாடு
* 1962 முதல் 2011 வரை நேரடி இராணுவ ஆட்சி
* தற்போது நிழல் இராணுவ ஆட்சி
* ஜனாதிபதி: தைன் ஸைன் இராணுவ ஜெனரலாகவும் விளங்குகின்றார்.
* கடும் ஊழல் நிலவும் இந்நாட்டின் மொத்த சனத்தொகை 60 மில்லியன்
* சர்வதேச நாடுகளுடனான உறவுகள் துண்டிக்கப்பட்ட மியன்மார் மனித உரிமை மீறல்களில் கடும் விமர்சனத்தை எதிர்கொண்டுள்ளது. 
* 300 இற்கும் மேற்பட்ட இனக் குழுமங்கள் வாழ்கின்றன.
* பிரதான மதம்: தேரவாத பௌத்தம்
* உள்நாட்டு விவகாரம்பாதுகாப்புஎல்லைப் புற விவகாரம் ஆகிய மூன்று பிரதான அமைச்சுப் பதவிகளையும் இராணுவ ஜெனரல்களே வகிக்கின்றனர்.
* எல்லைப் புற நாடுகள்: சீனாலாவோஸ்பங்களாதேஷ்பூட்டான்தாய்லாந்து
* பர்மிய மக்களே பிரதான இனக் குழுமத்தினர்இவர்கள் திபெத்தியசீன பூர்வீகக் குடிகள்.
* பிரதான இனச் சிறுபான்மைகள்: ரோஹிங்யாசின்கசின்ரேகின்மொன்ஷான்கரன்
* பிரதான ஏற்றுமதி: தேக்கு மரம்முத்துபவளம்மாணிக்கம்சில இடங்களில் இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலியம் உள்ளதாக நம்பப்படுகின்றது.
* ஆட்சியிலுள்ள இராணுவம் பெருமளவில் ஹெரோயின் ஏற்றுமதியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்படுகிறது.
* சீனாஇந்தியாதென்கொரியா ஆகியன இங்கு முதலீடு செய்துள்ளன.
int burma1ஆயிரம் ஆண்டுகால பூர்வீகத்தைக் கொண்ட ஒரு சமூகத்தின் மீது பௌத்த தீவிரவாத அரசாங்கம் ஒன்று மேற்கொண்டு வரும் இந்தத் தாக்குதல்களை எந்த சட்ட அடிப்படையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆயினும்இந்த இராணுவ அரசாங்கத்திற்கு எதிரான எந்தவொரு அழுத்தமும் சர்வதேச அளவில் உருவாகவில்லை. ஆகக் குறைந்தபட்சம் கண்டனக் குரல்களேனும் எழுப்பப்படவில்லை.
தேரவாத பௌத்தத்தின் தூய்மைக்கு ரோஹிங்யா இனத்தவர்கள் களங்கம் ஏற்படுத்துகின்றனர். காரணம் இவ்வினத்தவர் மிகத் தாழ்ந்த,தூய்மையற்ற குழுமத்தினர் என்றும் அவர்கள் புனித பூமியில் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள் என்றும் அந்நாட்டின் மதகுருக்கள் உள்ளிட்டு எதிர்க்கட்சித் தலைவியாக வீற்றிருக்கும் ஆன்சான் சூக்கியும் மதத் துவேஷத்தை அணிந்துகொண்டுள்ளமை மிகவும் ஆபத்தான குறிகாட்டியாகும்.
இவ்வாறு முஸ்லிம்கள் குறிவைத்துக் கொல்லப்படுவதும்அவர்களது பெண்களும் குழந்தைகளும் குரூரமான கொலைவெறிக்கு ஆளாக்கப்படுவதும் மதத்தின் பெயரால் நியாயப்படுத்தப்படுகின்றது.
நாகரிகமும் அறிவியலும் வளர்ச்சியடைந்துள்ள இக்காலகட்டத்திலும் மதம்இனம் ஆகிய எல்லைகளுக்கு அப்பால்மனிதர்களை மனிதர்களாக மதிக்கின்ற மனப்பாங்கை மியன்மாரில் ஒரு மதம் வளர்க்கவில்லை. சர்வதேச சக்திகளும் அழிக்கப்படுவது முஸ்லிம்கள் என்ற ஒரே காரணித்தினால்தான் இதுகுறித்து மௌனம் காக்கின்றது.
மனித உரிமைகள் குறித்து வாய் கிழியக் கத்தும் இன்றைய யுகத்தில் குறைந்தபட்சம் உயிர் வாழ்வதற்கான உரிமை கூட மியன்மார் முஸ்லிம்களுக்கு மறுக்கப்படுகின்றது. பாகிஸ்தான்,எகிப்துகட்டார்சவூதி அறேபியா ஆகிய அரசாங்கங்கள் மாத்திரம் இக்கொலை வெறியை வன்மையாகக் கண்டித்துள்ளன.
இந்த நிகழ்வுகள் குறித்து ஒரு காரசாரமான அறிக்கையை பல வாரங்களுக்குப் பின்னரேனும் பாகிஸ்தான் பாராளுமன்றம் வெளியிட்டது. ஆனால்பங்களாதேஷ்இந்தியாபாகிஸ்தான் ஆகிய அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இப்பிரச்சினையைக் கையாள வேண்டிய கடமைப்பாட்டைக் கொண்டுள்ளன. இந்தியாவுக்கு இதில் முக்கிய பொறுப்புள்ளது. ரோஹிங்யா மக்கள் அடிப்படையில் இந்தியப் பூர்வீகத்தைக் கொண்டவர்கள். அவர்களின் மூதாதையர்கள் அங்கிருந்தே பலநூறு ஆண்டுகளுக்கு முன்பாக இங்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த வகையில் இந்தியாவும் இவ்விடயத்தில் காத்து வரும் மௌனம் சந்தேகத்திற்குரியது.
இன்று மியன்மார் தீப்பற்றி எரிகின்றது. ரோஹிங்யா மக்கள் வாழும் அரக்கானில் நன்கு திட்டமிடப்பட்ட வன்முறைகள்பாலியல் வன்முறைகள்சொத்துக்களை சூறையாடுதல்பள்ளி வாயல்களை அழித்தல்குழந்தைகளை அச்சுறுத்தி உளரீதியான பாதிப்புக்களை ஏற்படுத்தல்,கொள்ளை என விதம் விதமான கொடுமைகள் நிகழ்த்தப்படுகின்றன.
இத்தனை ஆயிரம் மக்கள் துப்பாக்கிகளால் சுடப்பட்டும்தீ மூட்டப்பட்டும் ஆயுதங்களால் அடித்தும் கதறக் கதற கொல்லப்பட்டுள்ளனர். ஆனால்இதற்குப் பொறுப்பானவர்கள் யார்?அவர்களுக்குப் பின்னணியில் உள்ள உண்மையான ஊக்கம் என்னஉலகின் பல்வேறு சிறுபான்மை நாடுகளில் தலைதூக்கியுள்ள சியோனிஸ சூழ்ச்சித் திட்டத்தின் ஒரு பகுதிதான் இன்று மியன்மாரிலும் அரங்கேறுகின்றதா?
அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் காத்து வரும் மௌனத்தில் அர்த்தம் என்னஇந்த பத்து இலட்சம் மக்களின் உயிருக்கும் 
உடமைகளுக்கும் உத்தரவாதமளிப்பது யார்சர்வதேச மன்னிப்புச் சபைஆசிய மனித உரிமை கண்காணிப்பகம் என்பனவும் உருப்படியாக செயல்படாமல் இருப்பதேன்?
இதுபோன்ற கேள்விகள் மியன்மார் முஸ்லிம்களின் எதிர்காலத் தலைவிதி குறித்த தீவிர அச்சத்தையும் ஐயத்தையும் எழுப்புகின்றது. அங்குள்ள ஏனைய இனச் சிறுபான்மை முஸ்லிம்களுடன் உறவாட முடியாத மொழித் தடையும் ரோஹிங்யா முஸ்லிம்களின் பேரவலத்திற்கு மற்றொரு காரணமாகும்.
int burma2பர்மாவில் இன்று இராணுவ மத அடிப்படையிலான அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாடுகளை சில இஸ்லாமிய ஊடகங்கள் எரிக்கும் அரசியல் (Burning Politics) என வர்ணித்துள்ளன. முஸ்லிம்களின் பூர்வீக நிலங்களில் உள்ள வீடுகள்,சொத்துக்கள்கடைகள்கலாச்சார நிலையங்கள்பள்ளிவாயல்கள் என்பவற்றை எரிப்பதில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது. அதனூடே முஸ்லிம்களின் எதிர்கால இருப்பை கேள்விக்குள்ளாக்கி,அவர்களை அரக்கானிலிருந்தே வெளியேற்றுவதற்கு முனைகின்றது.
வரலாற்று ஆதாரங்களின்படி மேற்கிலுள்ள அரக்கான் மாநிலம் ஒரு காலத்தில் சுதந்திரக் குடியரசாக செயற்பட்டு வந்துள்ளது. இஸ்லாம் மியன்மாரில் அறிமுகமான காலகட்டங்களில் அரக்கான் ஒரு சுதந்திர முஸ்லிம் குடியரசாகவே இருந்தது. ஆனால்இது பிற்பட்ட காலங்களிலேயே பர்மாவுடன் (மியன்மார்) இணைக்கப்பட்டுதீவிர பௌத்த மதப் பிரச்சாரம் முஸ்லிம்களுக்கு மத்தியில் மேற்கொள்ளப்பட்டது.
வரலாறு தொட்டு தன்மீது திணிக்கப்பட்ட பௌத்த மதமாற்றுச் செயற்பாடுகளை முஸ்லிம்கள் எதிர்த்து வந்தனர். அந்த எதிர்ப்பின் விளைவு பலமுறை முஸ்லிம்களுக்கு எதிரான அரச பயங்கரவாதமாகவும் வன்முறையாகவும் வெடித்தன.
2012 ஜூலை 20 இல் சர்வதேச மன்னிப்புச் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் பௌத்த மதகுருக்கள் பர்மாவில் இழைத்துள்ள பாலியல் மற்றும் வன்முறைச் சம்பவங்கள் மனித உரிமைக்கு விடுக்கப்பட்ட மிகப் பெரும் அச்சுறுத்தல்ஆயிரக்கணக்கான பெண்கள் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர். அதேவேளைஅவர்களின் மொத்த சொத்துக்களும் பள்ளிவாயல்களும் அழிக்கப்பட்டுள்ளன என்பதற்கான ஆதாரம் தன்னிடமுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னரும் இதுபோன்ற வன்முறைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஆனால்இதுவே மிகவும் பயங்கரமானது என அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. தற்போது ஒரு இலட்சம் பர்மிய முஸ்லிம்கள் சவூதி அறேபியாவில் வாழ்கின்றனர். அவர்கள் சவூதி அறேபிய பிரஜைகளாகவே கணிக்கப்படுகின்றனர். பாகிஸ்தானின் கராச்சி நகரிலும் பல ஆண்டுகளுக்கு முன்னர் குடிபெயர்ந்த 
பல்லாயிரம் பர்மிய முஸ்லிம்கள் பாகிஸ்தான் பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர். ஆப்கான்,மலேசியா போன்ற நாடுகளிலும் இவர்கள் தேசிய பிரஜைகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளனர்.
1994 இல் பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்த ரோஹிங்யா முஸ்லிம்கள் காலிதாஸியாவின் அரசாங்கத்தில் குறிப்பிட்ட காலத்திற்கு முகாம்களில் வாழ்வதற்கு அனுமதிக்கப்பட்டனர். கலாச்சாரம்பாரம்பரியம்சமயம்வழக்காறுகள் போன்ற பல்வேறு விடயங்களில் பங்களாதேஷ் முஸ்லிம்களுக்கும் பர்மிய ரோஹிங்யா முஸ்லிம்களுக்கும் இடையில் நெருக்கமான தொடர்புகளும் உறவுகளும் ஒற்றுமைகளும் உள்ளன.
ஆனால்பங்களாதேஷ் அரசாங்கம் அவர்களை அகதிகளாக ஏற்க முடியாது என்று கூறி வருவது ஆச்சரியத்துக்குரியதல்ல. ஏனெனில்ஹஸீனா வாஜிதின் மதச்சார்பற்ற அரசாங்கம் இந்திய திட்டங்களுக்கு அடிபணிகின்ற ஒன்றாக மாறிவிட்டது.
இந்திய அரசாங்கம் இம்முஸ்லிம்கள் குறித்துக் கொண்டுள்ள எதிர்மறையான நிலைப்பாடுகளுக்கு ஹஸீனா வாஜிதின் அரசாங்கமும் மறைமுகமாக ஆதரவளிக்கின்றது. பர்மாவின் இராணுவ அரசாங்கத்தோடு இந்திய உளவு நிறுவனங்களும் பாரதீய ஜனதா கட்சி அங்கத்தவர்களும் நெருங்கிய உறவுகளைக் கொண்டுள்ளனர். இதேவேளைஇந்துத்துவ பா.ஜ.க. இஸ்ரேலிய அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்புகளைப் பேணுகின்றது.
int burma-book
ரோஹிங்யா முஸ்லிம்கள் ஏன் வஞ்சிக்கப்படுகின்றனர்
Glass Palace chronicle எனப்படும் மியன்மாரின் தேசிய வரலாற்று கையேடு இந்தியாவிலிருந்து 10 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இடம்பெயர்ந்த ரோஹிங்யா இன முஸ்லிம்கள் மியன்மாரை சூரையாடுகின்றவர்கள் எனவும் உள்ளூர் மக்களை ஏமாற்றுகின்றவர்கள் எனவும் குறிப்பிடுகின்றது.
அவர்கள் மிகத் தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் எனவும்பௌத்தத்தின் தூய்மைக்கு களங்கம் ஏற்படுத்தக் கூடியவர்கள் எனவும் எழுதிவைக்கப்பட்டுள்ளது. இந்த வரலாற்றுப் புனைவே (Historical Myth) முஸ்லிம்களுக் கெதிரான பரந்துபட்ட சமூகக் காழ்ப்புணர்வை உருவாக்கி விட்டுள்ளதாக நம்பப்படுகிறது.
மன்னர் ஷாஜஹானின் மகன் ஷா சுஜா மியன்மாரில் குடியேறியபோது அவரிடமிருந்த சொத்துக்களை மியன்மார் மன்னன் வேண்டினான். அது மறுக்கப்பட்ட பின்னரே இந்த வரலாற்றுப் புனைவு உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
* ரோஹிங்யா இன முஸ்லிம்கள் வாழும் அரக்கான் மாநிலத்தில் இயற்கை எரிவாயு இருப்பதாக ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது. தற்போது இப்பிராந்தியத்தில் அமெரிக்கக் கம்பனிகள் முதலீடு செய்வதற்கு முயற்சித்து வருகின்றன. அமெரிக்கா இராணுவ அரசாங்கத்தின் மீது பொருளாதாரத் தடை விதித்துள்ளபோதும்தற்போது எரிவாயு அகழ்வில் தீவிர ஆர்வம் காட்டுகின்றது.
இதேவேளைபிரமாண்டமான அமெரிக்கக் கம்பனிகள் இப்பிராந்தியத்தில் நிலைகொள்ள உள்ளதனால்பாரியளவிலான நிலம் அதற்குத் தேவையாக உள்ளது. யூத-சியோனிஸ ஆதரவு சக்திகளும் இயற்கை எரிவாயு அகழ்வில் முதலீடு செய்கின்றன. இதனால்ரோஹிங்யா இன முஸ்லிம்களை அங்கிருந்து வெளியேற்றுவதற்கு இக்கூட்டுச் சக்திகள் வன்முறையை ஓர் ஆயுதமாகக் கையில் எடுத்துள்ளன.
இந்த சர்வதேசபிராந்திய முஸ்லிம் எதிர்-சூழ்ச்சித் திட்டத்தின் பலிக்கடாவாக மியன்மார் முஸ்லிம்கள் மாற்றப்பட்டுள்ளனர். பங்களாதேஷில் பெருமளவிலான அகதிகளுக்கு இடமளிப்பது மியன்மார் இராணுவ அரசாங்கத்தின் மீதான அழுத்தங்களுக்கு வழிவகுக்கலாம் எனும் பின்னணியிலேயே ஹஸீனா வாஜித் அவர்களை ஏற்க மறுக்கின்றார்.
இதன் விளைவாகவே இதுவரை இராணுவ அரசாங்கத்தின் மீது எந்த அழுத்தமும் ஏற்படுத்தப் படவில்லை. பௌத்த இராணுவ தளபதிகள் இதன் காரணமாகவே ஒரு மில்லியன் மக்களை கடலில் வீசப் போவதாக பகிரங்கமாகவே கூறி வருகின்றது. இந்நிலமை பர்மாவில் தொடர்ந்தும் வன்முறைகளையும் கொலை வெறித் தாக்குதல் களையும் தொடரப் போகின்றனர் என்பதையே காட்டுகின்றது.
ராபிததுல் ஆலமில் இஸ்லாமியஇஸ்லாமிய நாடுகள் அமைப்பு பர்மிய முஸ்லிம்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளன. பர்மிய முஸ்லிம்கள் மீதான படுகொலைகளை நிறுத்துமாறு வேண்டியுள்ளன. ஆப்கான்காஷ்மீர் போன்று பர்மாவிலும் ஆயுதக் குழுக்கள் உருவாவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
1994 ஆம் ஆண்டு அப்துல் குத்தூஸ் எனப்படும் ஒரு மார்க்க அறிஞரின் தலைமையில் இஸ்லாமிய ஜிஹாத் இயக்கம் அங்கு உருவாகியது. அரக்கானை மியன்மாரிலிருந்து பிரித்து தனிக் குடியரசாக மாற்றுவதே தமது நோக்கம் என்று அவர்கள் கூறினர். ஆனால்அவ்வியக்கம் கடுமையாக ஒடுக்கப்பட்டதனால் அதன் தீவிரம் தணிந்தது. பங்களாதேஷ் போன்ற அரசாங்கங்கள் அவற்றுக்கு அடைக்கலம் கொடுக்க மறுத்தன.
ஆயினும்இதுபோன்ற ஆயுத இயக்கங்கள் அங்கு உருவாகுவது தவிர்க்க முடியாமல் போகும். எவ்வாறாயினும்ஒரு சிறுபான்மைச் சமூகத்தின் ஆயுத ரீதியான போராட்டங்கள் எந்தளவு வெற்றியளிக்கும் என்ற மிகப் பாரிய கேள்வி பர்மிய சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்கு முன்னாள் எழுந்து நிற்கின்றது.

No comments:

Post a Comment