- இடைக்கால அரச படைக்கும் கேனல் கடாபியின் ஆதரவாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில்தான் கடாபி கொல்லப்பட்டார். இடைக்கால அரச படை கடாபியை கழிவு நீர்க் குழாய் ஒன்றிலிருந்து கண்டுபிடித்தனர். அவர் வெளியே எடுக்கப்பட்ட போது எந்த எதிர்ப்பையும் அவர் காட்டவில்லை. அவர் வாகனத்தை நோக்கி கொண்டு செல்லப்படும் போது அவரது வலது கையை ஒரு துப்பாக்கிக் குண்டு தாக்கியது. அவரை வாகனத்தில் ஏற்றும் போது இந்தக் காயம் மாத்திரம்தான் இருந்தது.
வாகனம் நகர்ந்துகொண்டிருந்த போது கடாபியின் படையினருக்கும் இடைக்கால அரச படையினருக்கும் இடையான மோதலில் கடாபி சிக்கிக்கொண்டார். அப்போதுதான் அவரது தலையை துப்பாக்கிச் சூடு தாக்கியது. தடயவியல் மருத்துவரால் அந்தத் துப்பாக்கிச் சூடு எந்தப் படையிலிருந்து வந்தது என்று தெளிவாகச் சொல்ல முடியவில்லை. கடாபி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில்தான் உயிரிழந்தார்.
லிபிய சர்வதிகாரி இறந்துவிட்;டார் என்ற செய்தி கிடைத்த சந்தோசத்தில் போராளிகள் அந்த நேரத்தில் எடுத்த புகைப்படங்களை உலகெங்கும் விநியோகித்துவிட்டார்கள். அவரது கொலை தொடர்பாக இன்னும் சில சந்தேகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், அவரது வாழ்வின் கடைசித் தருனங்களில் நடந்த நிகழ்வுகள் இதை உறுதிப்படுத்துவதாக அமைகின்றன.
கடாபி பிடிபடும்;போது உயிரோடுதான் இருந்துள்ளர். உலகெங்கும் ஒலிபரப்பான வீடியோவில் அவர் பிடிபட்டு வாகனம் ஒன்றின் பக்கமாக இழுத்துச்செல்லப்படுகிறார். அவரது தலைமுடி பிடித்து இழுக்கப்படுகிறது. அவரை உயிரோடு பிடியுங்கள். என்ற சத்தம் கேட்கிறது. துப்பாக்கிச்சூட்டு சத்தம் கேட்கிறது. கெமரா அசைந்து திசை திரும்புகிறது. இவை கடாபியின் கடைசி நேர நிகழ்வுகளாகும்.
லிபிய இடைக்கால அரசாங்கத்தின் தகவல்படி அவர் இரு பிரிவினருக்கும் இடையிலான மோதலின் போதுதான் உயிரிழந்துள்ளார். அவரைக் கொலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை.
தனது 42 வருட கால ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக கிளர்ந்த போராளிகளை கடாபி எலிகள் என சொல்லி வந்தார். கடைசியில் அவரோ அசுத்தமான கழிவு நிர்க்குழாயிலிருந்துதான் கண்டெடுக்கப்பட்டார் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment