முன்னுரை
கி,பி,1990ஆம் ஆண்டு ஏற்பட்ட சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சி ஒரு அரசின்வீழ்ச்சியல்ல. மாறாக அது உண்மையில் ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியாகும்,சர்வதேச அளவிலும் உலக அளவிலும் அந்த சித்தாந்தத்துக்கு ஏற்பட்ட முடிவாகும்,இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அமெரிக்கா தலைமையிலுள்ள மேற்கத்தியநாடுகளுக்கும் சோவியத் ரஷ்யா தலைமையிலுள்ள கீழ்திசை நாடுகளுக்கும்ஏற்பட்ட மோதல் என்னும் பனிப்போர் இரண்டு வல்லரசுகளுக்குள் ஏற்பட்ட சர்வதேசமோதல் மட்டும் அல்ல, மாறாக அது முதலாளித்துவ சித்தாந்தம் (Capitalism)கம்யூனிஸ் சித்தாந்தம் (Communism) என்கின்ற இரண்டுகொள்கைகளுக்கிடையில் ஏற்பட்ட கருத்துப்போராகும், இந்த சச்சரவின் எல்லைகள்ஐரோப்பாவுடன் நின்று விடவில்லை, முழு உலகத்தையும் வியாபித்தது, இறுதியில்கி,பி,1990 ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுற்று துண்டுகளாக சிதறியதோடுஅது முடிவுக்கு வந்தது, கார்ல் மார்க்ஸின் பொதுவுடமை தத்துவம் ஆட்சிமுறைஎன்ற விதத்திலும் அதன் மக்களிடமும் அதனை அமல்படுத்திய அதன்அரசுகளிடமும் வீழ்ச்சியுற்றது, இறுதியாக சர்வதேச அளவிலும் உலகளாவியஅளவிலும் அது மறைந்து போனது.
இயல்பாகவே சோவியத் ரஷ்யாவின் வீழ்ச்சியும் பொதுவுடமை கோட்பாட்டின்தோல்வியும். முதலாளித்துவ சித்தாந்தத்தை ஒரு கோட்பாடாகவும்.ஆட்சிமுறையாகவும். வாழ்வியல் நெறிமுறையாகவும் முன்நிறுத்தும் அமெரிக்கதலைமையிலான மேற்கத்திய நாடுகளுக்கு ஒரு வெற்றியாகவே அமைந்தது, மேலும்அவர்கள் இந்த வெற்றியை முதலாளித்துவ சித்தாந்தத்துக்கு கிடைத்தவெற்றியாகவே பறைசாற்றிக் கொண்டார்கள், ஜப்பானிய தத்துவமேதை புஹியாமா(Fukiyama) இதை ஒரு சரித்திரத்தின் முடிவு என்று வர்ணித்தார்.
சித்தாந்தங்கள் அதை கடைபிடிக்கும் அரசுகள் வீழ்ச்சியுறுவதால் அழிந்து போய்விடுவதில்லை, அந்த சிந்தாங்களை நடைமுறைபடுத்தும் அரசுகள் வீழ்ச்சியுற்றுசெல்வாக்கு இழந்து போனாலும் துண்டு துண்டுகளாக சிதறினாலும் அது முடிவுக்குவந்து விடாது, மாறாக அதை கடைபிடிக்கும் மக்கள் அதை துறந்துவிட்டு வேறொருசித்தாந்தத்தை தழுவ ஆரம்பித்து அதன்படி தங்கள் வாழ்வியலை மாற்றிக் கொண்டுஅந்த அடிப்படையில் தங்கள் விவகாரங்களுக்கு தீர்வு தேடிக் கொள்ளும்போதுதான் அந்த சித்தாந்தங்கள் அழிவை சந்திக்கின்றன, இந்த நிலைதான் கார்ல்மார்க்ஸின் பொது உடமை சித்தாந்தத்துக்கு ஏற்பட்டது, அதை கடைபிடித்து வந்தஅனைத்து கீழ்திசை நாடுகளும் அதன் மக்களும் அதை புறக்கணித்துவிட்டுதழுவிக் கொண்டு அதன் அடிப்படையிலேயே தங்கள் வாழ்க்கை முறைகளைஅமைத்துக் கொண்டார்கள்.
இஸ்லாத்தை பொறுத்தவரை கி,பி,1924ஆம் ஆண்டு உதுமானிய கிலாபத் என்றஅதனுடைய அரசு வீழ்த்தப்பட்ட பிறகும் அதனுடைய சித்தாந்தம் உலகெங்கிலும்நிலைபெற்று வருகிறது, காரணம் அதனை பின்பற்றும் பல்வேறு வகையான மக்கள் அது ஆட்சி கட்டிலிலிருந்து அகற்றப்பட்டாலும் அன்றாட மக்கள் வாழ்வியல்விவகாரங்களில் தலையிடுவதை விட்டும் அது தடுக்கப்பட்டாலும். சர்வதேசஅரங்கத்தில் அது செயல்படுவதை விட்டும் முடக்கப்பட்டாலும் தொடர்ந்து மக்கள்அதனை தழுவிக் கொண்டுதான் இருக்கிறார்கள், வெறும் சித்தாந்தம் என்ற அளவில்அது சிதைக்கப்பட்டாலும் அதன் கொள்கைகளை நிலைநிறுத்தவும் உயர்த்திப்பிடிக்கவும் அரசு இல்லாத போதும் அதன் செல்வாக்கு உலக மக்களிடையேஉயர்ந்து கொண்டுதான் இருக்கிறது. ஒரு சித்தாந்தம் அதனை பின்பற்றும் மக்கள் இருக்கும் காலமெல்லாம் இருந்து கொண்டேதான் இருக்கும், அதன் கொள்கைகள்ஒரு அரசின் மூலம் நிலை நிறுத்தப்படாவிட்டாலும் சரியே, எனினும் சர்வதேசஅளவில் அதன் கொள்கைகள் தொடர்ந்து நிலைநிறுத்தப்படுவதற்கு ஒரு அரசுஇல்லையெனில் அது வீழ்ச்சியுற்றே தீரவேண்டும், இவ்வாறே இறைதூதர்(ஸல்)அவர்கள் ஹிஜ்ரத் செய்து மதினாவில் இஸ்லாமிய அரசை நிறுவிய காலத்திலிருந்தேஇஸ்லாம் எனும் சித்தாந்தம் இருந்து வருகிறது.
இருபதாம் நூற்றாண்டின்துவக்கத்தில் அதன் அரசான உஸ்மானிய கிலாபத் எதிரிகளால் வீழ்த்தப்படும்வரை அது சர்வதேச அரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்திக் கொண்டுதான்இருந்தது,சோசலிசம் என்னும் பொதுவுடமை சித்தாந்தம் பத்தொன்பதாம் நூற்றாண்டின்இறுதியில் ஐரோப்பாவில் மக்கள் ஆதரவை பெற்ற போது செல்வாக்கு பெற்றது,ரஷ்யாவிலும் அதன் அண்டை நாடுகளிலும் கி,பி,1917ஆம் ஆண்டு அதன் அரசுஅமைக்கப் பட்டபோது சர்வதேச அரங்கில் அது ஆதிக்கம் பெற்றது, இந்தஅரசுதான் பிற்காலத்தில் சோவியத் யூனியன் என்று அழைக்கப்பட்டது.
1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சி அடையும் வரை அது சர்வதேசஅரசியல் அரங்கில் ஆதிக்கம் செலுத்தி வந்தது, சோவியத் அரசு வீழ்ச்சியுற்றதும்அதன் மக்கள் பொதுஉடமை சித்தாந்தத்தை புறக்கணிக்க ஆரம்பித்தார்கள்,முடிவாக மார்க்ஸின் பொதுஉடமை சித்தாந்தம் சர்வதேச அளவிலும் உலகளாவியஅளவிலும் முற்றிலுமாக கைவிடப்பட்டது, முதலாளித்துவ சித்தாந்தம் தொடர்ந்து சர்வதேச அளவில் கொள்கைகளையும்முடிவுகளையும் மேற்கொள்ள போட்டியாக வேறு எந்த சித்தாந்தமும் இப்போதுஉலகில் இல்லை என்ற காரணம்தான்.
.
உலகளாவிய அளவில் இன்று இரண்டு சித்தாந்தங்கள் இருக்கின்றன, ஒன்றுஇஸ்லாம் மற்றொன்று முதலாளித்துவ கோட்பாடு என்ற காபிடலிஸம் இந்த கோட்ôபடு சர்வதேச அளவில் செல்வாக்கு பெற்ற காரணத்தால் ஒரு புதியஉலக நாடுகள் அமைப்பு இப்போது உருவாகி வருகிறது, இந்த கண்ணோட்டத்துடன்பார்க்கும்போது புதிய உலக அமைப்பு The New World Oder என்ற கருத்துசரியானதே. ஆகவே அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் புதிய உலக அமைப்புஉருவாகிவிட்டது என்று அறிவித்தது இயல்பான ஒன்றுதான், ஏனெனில்அமெரிக்காதான் முதலாளித்துவ நாடுகளின் தலைவராக இருந்து கொண்டு அந்தசித்தாந்தத்தை பரப்புவதற்கும் அதை நிலைநிறுத்துவதற்கும் நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது.
ஒரு காலனி ஆதிக்க நாடாக நடவடிக்கை மேற்கொண்ட போதே உலகில் அதுஇந்த கோட்பாட்டை பரப்பும் வேலையை ஆரம்பித்துவிட்டது, ஏனெனில் காலனிஆதிக்கம் என்பது அதன் பழைய மற்றும் புதிய வடிவத்தில் முதலாளித்துவசித்தாந்தத்தை பரப்புவதற்குரிய ஒரு வழிமுறையாகும், எனினும் இன்றையசூழ்நிலை என்னவென்றால் இந்த கோட்பாடு சர்வதேச அரங்கில் செல்வாக்குபெற்றிருப்பதால் அதனைப் பரப்பவும் அதனை உலகநாடுகளில்நடைமுறைப்படுத்தவும் அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது, இதே வழிமுறையின்படிதனது தோழமை நாடுகளின் உதவியோடு இந்தக் கோட்பாட்டின்கொள்கையாக்குவதில் அமெரிக்கா வெற்றி பெற்றுவிட்டது, இப்போது அமெரிக்காஇந்த கோட்பாட்டை அனைத்துலக மக்களின் வாழ்வியல் நெறிமுறைகளாகஆக்குவதை விரும்புகிறது, இதன் அடிப்படையில் மக்கள் இந்த கோட்பாட்டைஆட்சிமுறையாக மட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அதனை நடைமுறைப்படுத்துவதைமட்டும் ஏற்றுக் கொள்ளாமல் அதன் சட்டங்களையும் அடிப்படைகளையும்.அளவுகோள்களையும். நம்பிக்கைகளையும் மற்றும் அதன் அனைத்து நெறிமுறைகளையும் வாழ்வின் அனைத்து துறைகளிலும் ஏற்றுக் கொள்ளவேண்டும் என்று அமெரிக்க உலக மக்கள் அனைவரையும் வற்புறுத்துகிறது.
இந்த கோட்பாட்டை சர்வதேச உறவுகளிலும் மரபுகளிலும் சட்டங்களிலும்அடிப்படையாக்க அமெரிக்கா கடும் முயற்சி செய்து வருகிறது, ஐக்கிய நாடுகள் சபைஎன்ற சர்வதேச அமைப்பை உருவாக்கி. அதன் அஸ்திவாரமாக முதலாளித்துவகோட்பாட்டின் கொள்கைகளை அமைத்த நாட்களிலிருந்தே இந்த முயற்சிகள்தொடர்ந்து நடந்து வருகின்றன, என்றாலும் சோவியத் யூனியன் கீழ்திசை நாடுகளில்செல்வாக்குடன் இருந்த கால கட்டத்தில் அது பொதுஉடமை கோட்பாட்டை சர்வதேசஅரங்கில் செயல்படுத்திய காரணத்தால் அமெரிக்காவின் இந்த முயற்சிக்கு வெற்றிகிட்டவில்லை, இந்த காலகட்டத்தில் மேற்கத்திய காலனி ஆதிக்கத்தால்அடிமைத்தனத்திலும் வறுமையிலும் சீரழிந்த நாடுகளின் துன்ப நிலையினைபயன்படுத்தி மாஸ்கோ அமெரிக்காவின் ஆதிக்கமும் முதலாளித்துவ கோட்பாட்டின்உத்வேகமும் உயர்ந்து விடாமல் பார்த்துக் கொண்டது, காலனி ஆதிக்கத்தின்பேராசை. அச்சுறுத்தல். அநீதி. சுயநலம் ஆகிய அதன் கோர முகங்களை மக்களுக்குஎடுத்துக்கூறி மாஸ்கோ பிரச்சாரம் செய்து வந்தது, இதற்காக அது உலகம்முழுவதிலும் ஒரு கடுமையான பிரச்சார நடவடிக்கை மேற்கொண்டது, அந்தபிரச்சாரத்தில் காலனி ஆதிக்கத்தின் உண்மையான கொடி இயல்புகளை வெட்டவெளிச்சமாக்கி வந்தது, முதலாளித்துவமும் காலனி ஆதிக்கமும் ஒரு நாணயத்தின்இரண்டு பக்கங்கள்தான் என்பதையும். உண்மையில் விடுதலை என்பது பொதுஉடமை புரட்சியின் மூலமாகத்தான் கிடைக்கும் என்றும் பிரச்சாரம் செய்து வந்தது,இந்த பிரச்சாரம் பெரிய அளவில் வெற்றி பெற்றது, இதனால் ஈர்க்கப்பட்டபலநாடுகள் பொதுஉடமை கோட்பாட்டின் பக்கம் சாய்ந்தன, காலனிஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்ற நாடுகள் பொது உடமை கோட்பாட்டைகோஷமிட ஆரம்பித்தன.
இந்நிலையில் முதலாளித்துவ சித்தாந்தத்தை அதன் அடிப்படை கொள்கையாககொண்டுள்ள மேற்கத்திய வல்லரசுகளுக்கு காலனி ஆதிக்கம் என்ற பழயமுகம்ஆபத்தானது என்பதை அமெரிக்கா உணர்ந்தது, ஆகவே அது தந்திரமாகசெயலாற்ற ஆரம்பித்தது, பொது உடமை கோட்பாட்டின் பக்கம் சாயும்நாடுகளையும் அதன் மக்களையும் கவர்வதற்கு அவைகளுக்கு பொருளாதாரஉதவிகள் செய்வது என்று அமெரிக்கா தீர்மானித்தது, பழய காலனி ஆதிக்கத்தின்துயரங்களிலிருந்து அவைகளை மீட்பது போல பாசாங்கு செய்தது, பல பொருளாதாரசலுகைகளுக்கிடையில் அவைகளின் விடுதலை அம்சங்களில் மறைமுகமாக பலகட்டுப்பாடுகளை கொண்டுவந்தது, புதிய வடிவில் காலனி ஆதிக்கத்தைமறைமுகமாக திணிக்கும் விஷமத் தனத்தை அமெரிக்கா மேற்கண்டது,பொருளாதாரம். அரசியல் மற்றும் கலாச்சாரம் ஆகிய துறைகளிலும் ராணுவஒப்பந்தம். இருதரப்பு உறவு. இருதரப்பு பாதுகாப்பு. ஒப்பந்தம் பொருளாதாரம்மற்றும் நிதியுதவி திட்டம். கலாச்சார நிகழ்ச்சிகள் ஆகிய நடவடிக்கைகள் மூலமும்தனது ஆதிக்கத்தை ஏற்படுத்திக் கொண்டது, இவ்வாறுதான் சுதந்திரம் மற்றும்விடுதலை போன்ற பகட்டான முகமூடிகளை அணிந்து கொண்டு பல நாடுகளில்புதிய காலனி ஆதிக்கத்தை அமெரிக்கா கொண்டு வந்தது, இந்நிலையில்கி,பி,1991ஆம் ஆண்டு சோவியத் ரஷ்யா வீழ்ச்சியுற்று சிற்றுண்ட பிறகு.பொதுஉடமை கோட்பாடு அதன் சர்வதேச செல்வாக்கையும் ஆதிக்கத்தையும்இழந்துவிட்டபோது. சர்வதேச எல்லைகள் அமெரிக்காவிற்கு திறந்து விடப்பட்டது,இப்போது அமெரிக்காவின் ஆதிக்கத்தையும் அதன் முதலாளித்துவ சித்தாந்தத்தைபிரச்சாரம் செய்யும் நடவடிக்கைகளையும் ஒடுக்குவதற்கு சரியானபோட்டியில்லாமல் போய் விட்டது.
ஐக்கிய நாடுகள் சபை கி,பி,1940வரை சோவியத் ரஷ்யாவின் விட்டோஅதிகாரத்தின் காரணமாக எந்தவித அதிகாரமும் இல்லாத ஏட்டுச்சுரக்காய்வடிவமாகவே இருந்து வந்தது, அதன் நடவடிக்கையெல்லாம் சில சொற்பொழிவுகள்சில சம்பிரதாய நடவடிக்கைகள் என்பதற்குள் சுருண்டு கிடந்தது, ஆனால் இன்றுஅது மிகப்பெரிய சர்வதேச அமைப்பாகவும். அதிகாரம் பெற்ற அமைப்பாகவும்இருக்கிறது, அது இப்போது ஒரு பக்கம் அமெரிக்காவின் ஆதிக்கத்தைநிலைநிறுத்தும் முக்கிய கருவியாகவும் மறுபக்கம் சர்வதேச அளவில்அமெரிக்காவிற்கு உதவி செய்யும் அமைப்பாகவும். முதலாளித்துவ மரபுகளைவலுப்படுத்துவதற்கு அமெரிக்காவோடு ஒத்துழைக்கும் தோழனாகவும் இயங்கிவருகிறது.
முதலாளித்துவ கோட்பாடடை உலக மக்கள் அனைவரும் ஒரு வாழ்வியல்நெறியாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அமெரிக்காவின் திட்டமிட்டநடவடிக்கைகளுக்கு இஸ்லாமிய நாடுகள் தவிர வேறு எங்கும் அவ்வளவுஎதிர்ப்புகள் காணப்படவில்லை, ஏனென்றால் முதலாளித்துவ கோட்பாடடைஅமெரிக்க மக்கள் ஏற்றுக் கொண்டதை பின்பற்றி மேற்கு ஐரோப்பாவும் அவர்கள்வழிநடக்கும் கனடா. ஆஸ்திரேலியா. நியுஸிலாந்து மற்றும் ரஷ்யாவும் கிழக்கு திசைநாடுகள் என்று ஒரு காலத்தில் அழைக்கப்பட்ட பொதுஉடமை கோட்பாட்டைதுறந்து விட்டு முதலாளித்துவ கோட்பாட்டை தங்களது கொள்கை யாகமாற்றிக்கொண்ட நாடுகளும் இதில் அடங்கும், எனினும் சீனா. வடகொரியா.வியட்நாம். கியூபா போன்ற நாடுகள் பொது உடமை கோட்பாட்டை இன்னும்கோஷமிட்டுக் கொண்டுதான் இருக்கின்றன, உண்மையில் அவைகள் இந்தகோட்பாட்டை நம்புவது இல்லை, சிறிது சிறிதாக அவைகள் வெளிப்படையானஅறிவிப்பு இல்லாமல் இந்த கோட்பாட்டை நோக்கி நகர்ந்த வண்ணம் இருக்கின்றன,மற்ற நாடுகளான லத்தீன் அமெரிக்கா. தூரகிழக்கு நாடுகள் தென் கிழக்கு ஆசியநாடுகள் மற்றும் ஆப்பிரிக்காவின் சில பழங்குடி இன நாடுகள் ஆகியவைகளுக்குஎந்தவித சித்தாந்தமும் கலாச்சாரமும் இல்லை, ஆகவே கொள்கை ரீதியாகமுதலாளித்துவ கோட்பாட்டிற்கு எதிர்ப்பு வருவதற்கு அங்கு வாய்ப்புகள் இல்லை,ஆகவே சித்தாந்த ரீதியாக இஸ்லாமிய சமூகமே முதலாளித்துவ கோட்பாட்டைஏற்றுக் கொள்ளாத நாடுகளாக இருந்து வருகின்றன.
இந்த சமூகம் தன்வசம்இஸ்லாம் என்ற சித்தாந்தத்தை வைத்துக் கொண்டுள்ளது, எனினும் இந்தசித்தாந்தத்தின் கொள்கைகள் அடிப்படையில் அந்த சமூகம் வாழ்வதுமில்லை,சர்வதேச அரங்கில் அதன் கொள்கைகளை நிலைநிறுத்தி உலகுக்கு அதை எடுத்துச்சொல்லி பிரச்சாரம் செய்வதுமில்லை, ஆகவே இயக்க வேண்டும் என்றஅமெரிக்காவின் அபிலாசை இஸ்லாமிய சமூகத்தில் மட்டும் தான் கடுமையாகஎதிர்க்கப்படுகிறது,இப்போதுள்ள இஸ்லாமிய நாடுகளில் அதன் அரசுகள் இஸ்லாத்தைநடைமுறைபடுத்துவதாக கூறிக் கொண்டாலும் அவைகள் உண்மையில் அவ்வாறுசெய்வது இல்லை, மாறாக முதலாளித்துவ கோட்பாட்டின் கொள்கைகளை அதன்மாறுபட்ட வடிவத்தில் அவைகள் நடைமுறைப்படுத்தி வருகின்றன, இஸ்லாமியசமூகம் கிலாöபத் அழிக்கப்பட்ட போதிலும் அழிந்து விடவில்லை, இந்த சமூகம்அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு தனது மறுமலர்ச்சி பாதையை கண்டுபிடித்துஅதில் நடைபோட ஆரம்பித்திருக்கிறது, ஆம்! கடந்த 1950 ஆண்டின் துவக்கத்தில்கிலாபத்தை நிறுவும் அரும்பணியினை இந்த சமூகம் இனம் கண்டு கொண்டது,இந்த நோக்கத்தின் அடிப்படையிலேயே தனது வாழ்வை வடிவமைத்துக்கொண்டது, கிலாöபத்தின் வீழ்ச்சிக்குப் பிறகு குöப்பார்கள் அதில் பலபிரிவினைகளையும் கருத்து வேறுபாடுகளையும் ஏற்படுத்தியிருந்த போதிலும் அந்தசமூகம் தன்னால்தான் மனித சமுதாயத்தை காப்பாற்ற முடியும் என்று நம்புகிறது.
அதனுடைய ஆட்சியாளர்கள் குöப்பார்களின் கங்காணிகளாக இருந்த போதிலும்அவர்கள் மேற்கத்திய குöப்பார்கள் இஸ்லாமிய நாடுகளில் ஏற்படுத்திய குப்ர்ஆட்சியை நிலை நிறுவுவதற்கு பாடுபட்டபோதிலும். இந்த சமூகம் இஸ்லாத்தின்மறுமலர்ச்சியை நோக்கி உறுதியாகவே நடைபோடுகிறது, இந்த இஸ்லாமியநாடுகளின் முஸ்லிம் ஆட்சியாளர்கள் குöப்பார்களின் நலன்கள்பாதுகாப்பவர்களாகவும். அவர்களின் செல்வாக்கை பலப்படுத்துகிறவர்களாகவும்தங்களது உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை மேற்கத்திய எஜமானர்களின்கட்டளைப்படியும் அவர்களின் வழிகாட்டுதல் படியும் அமைத்துக்கொள்பவர்களாகவும் இருக்கின்றார்கள்.
இந்த சமூகத்தின் மறுமலர்ச்சி இன்னும் முழுமை அடையவில்லை, ஆனால்இந்த மாபெரும் பணியினை தங்கள் வாழ்வின் லட்சியமாக கொண்டு உழைக்கும்முஸ்லிம்கள் மீது அடக்குமுறைகளையும். கொடுமைகளையும். அச்சுறுத்தல்களையும் மேற்கத்தியர்களின் அடிவருடிகளான இந்த முஸ்லிம்ஆட்சியாளர்கள் ஏவி விடுவதால் மறுமலர்ச்சி மிதமாகவே நடந்து கொண்டிருக்கிறது,குöப்பார்களின் திட்டப்படி செயல்பட்டு முஸ்லிம்களின் மீது தாக்குதலையும். கடும்தண்டனையையும் தம் சொந்த மக்காள் மீது குöப்பார்களின் அடிமை தனத்தின்அடையாளமான நுகத்தடியையும் சுமத்துவதற்கு இந்த ஆட்சியாளர்கள் சித்தமாகஇருக்கிறார்கள்.
இருந்த போதிலும் அமெரிக்காவின் தலைமையிலுள்ள மேற்கத்தியகுöப்பார்கள் இந்த சமூகத்தின் மறுமலர்ச்óசிக் குறித்து அச்சம் அடைந்தேஇருக்கிறார்கள், தனது மறுமலர்ச்சிக்குப் பிறகு அது முழுபலத்துடன் எழுந்துநிற்கும். மற்ற சமூகங்களிலிருந்து முற்றிலும் தனித்தன்மை உடையதாக ஒரேசமூகமாக கிலாöபத் என்ற ஒரே தலைமையோடு கூடிய அல்லாஹ்(சுபு)வின்ஆட்சியை இந்த புவியில் நிறுவும், பிறகு மேற்கத்திய குöப்பார்களினால் ஏற்பட்டசீரழிவிலிருந்தும். குழப்பத்திலிருந்தும். ஒழுக்கக்கேட்டிலிருந்தும் உலக மக்களைகாப்பதற்காக இஸ்லாமிய செய்தி எனும் சங்க நாதத்தை முழு உலகிற்கும் எடுத்துச்செல்லும் சந்தர்ப்ப வாதமும். சுயநலமும் பேராசையும் கொண்ட மேற்கத்தியகுöப்பார்களின் ஆதிக்கத்தால் உலகின் அமைதி சீர்குழைந்தது, பாதுகாப்பற்ற ஒருவனாந்திரத்தைப் போன்று இந்த உலகம் ஆகிவிட்டது.
அவர்களது சுயநலதிட்டங்களினால் மனித சமூகத்திற்கு அல்லாஹ்(சுபு) அருட்கொடையாக அளித்தவிஞ்ஞானமும் தொழில் நுட்பமும் பலன் தராது நெருக்கடியை ஏற்படுத்தி விட்டன,ஆகவே கடந்தகால சரித்திரத்தின் காட்சிகளை மனக்கண்ணில் நினைவு கூர்ந்தவண்ணம் இந்த குöப்பார்கள் அச்சத்தில் உறைந்து போய் இருக்கிறார்கள், நாடோடிகூட்டங்களாக சரித்திரத்தின் மூலையில் நின்றுகொண்டிருந்த அரபு இன மக்களை.இஸ்லாம் எவ்வாறு பண்பு நிறைந்தவர்களாகவும். தனித்தன்மை உடையசமூகமாகவும். உலகிற்கு சத்திய ஒளியை எடுத்துச் சென்றவர்களாகவும்உருவாக்கியது என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள், இறைத்தூதர் முஹம்மது(ஸல்) அவர்களின் தோழர்களாகிய அந்த முஸ்லிம்கள் சொற்ப காலத்தில் உலகதலைவர்களாக உருப்பெற்றார்கள், அந்த பெருமக்களின் தலைமைத் துவம் பலநூற்றாண்டுகளை கடந்து நின்றது, அவர்களது ஆட்சிக்காலத்தில் நீதியும்.நேர்மையும். பாதுகாப்பும். உயர் பண்புகளும் உலகில் செழித்து வளர்ந்தது.
ஆகவே முஸ்லிம் சமூகம் மறுபிரவேசம் செய்து கிலாöபத்தை நிறுவி.தங்களுடைய நலன்களை அவர்கள் நாட்டிலும் உலகின் மற்ற இடங்களிலும்அழித்துவிடும் என்று குöப்பார்கள் அஞ்சிக் கொண்டிருக்கிறார்கள்,இவ்வுண்மையை அமெரிக்காவும். ஐரோப்பாவும் உணர்ந்துள்ள நிலையில்இஸ்லாத்தை வீழ்த்துவதற்காக அவர்களது திட்டமிட்ட நடவடிக்கைகளையும்பிரச்சாரங்களையும் உலகம் முழுவதும் முடுக்கிவிட்டிருக்கின்றார்கள்.
இந்தத் திட்டங்களின் பின்னனியில் வேறு நோக்கங்களும் அடங்கியிருக்கின்றன,அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் தங்களுக்கே உரிய பாரம்பரிய பேராசையில்இஸ்லாமிய நாடுகளின் செல்வ வளங்களில் இச்சை கொள்கின்றன, அதன் பூகோளரீதியான மற்றும் போர் முக்கியத்துவம் வாய்ந்த நிலங்களின் மீதும். அதன் கனிமவளங்களின் மீதும். தங்களுடைய உற்பத்தி பொருட்களுக்கு அந்த நாடுகள் சிறந்தசந்தையாக இருக்கும் காரணத்தாலும். தங்களுடைய ஆலைகளுக்கு தேவையான கச்சாப் பொருட்கள் ஏராளமாக இருக்கின்றன என்றுநினைப்பதாலும் எல்லாவற்றிற்கும் மேலாக தங்களுடைய வாழ்க்கைக்கு மிகஅவசியமான அதனுடைய எண்ணெய் வளங்களுக்காகவும் அந்த நிலங்களைஆக்கிரமிப்பு செய்ய பேராவல் கொள்கின்றன.
அவர்களது முக்கியமான நோக்கம்இஸ்லாத்தின் மறுமலர்ச்சியை தடுத்து நிறுத்துவதுதான், எனினும் முஸ்லிம் சமூகம்மறுமலர்ச்சி பெற்று உலக மக்கள் அனைவரிடமும் இஸ்லாமிய செய்திசென்றடைந்தால். அவர்கள் அஞ்சிக் கொண்டிருக்கும் இந்த அழிவு அவர்களைஅடைந்தே தீரும்,
அமெரிக்க பிரச்சார நடவடிக்கையின் தூண்கள்
இஸ்லாத்திற்கெதிரான அமெரிக்காவின் திட்டங்கள் பல தூண்கள் மீதுஅமைக்கப்பட்டுள்ளன.
முதல் தூண்
அதனுடைய சர்வதேச ஆற்றலும். செல்வாக்கும். உறவுகளும் இஸ்லாமியநாடுகளில் உறுதிபெற்று இருக்கின்றன, குறிப்பாக இரண்டாவது வளைகுடாபோருக்குப் பிறகு அதனுடைய செல்வாக்கு இஸ்லாமிய நாடுகளில்வலுவடைந்திருக்கிறது, இந்த ஆற்றல் மற்றும் செல்வாக்கின் காரணமாகஇப்போதுள்ள இஸ்லாமிய நாடுகள் அமெரிக்காவின் அச்சுறுத்தல்களுக்கு பணிந்து.அதனுடன் இணங்கி போக ஆரம்பித்து விட்டன, முதலாளித்துவ கொள்கைகோட்பாடுகளை முஸ்லிம்கள் தழுவுவதின் மூலமாக இஸ்லாத்தை வீழ்த்தும் தனதுதிட்டத்தை நிறைவேற்றிக் கொள்ளும் நோக்கத்தோடு அமெரிக்கா அந்த நாடுகளுக்குமிகுந்த நெருக்கடி கொடுத்து வருகிறது.
இரண்டாவது தூண்
முதலாளித்துவ நாடுகளுக்கு அமெரிக்கா தலைமை ஏற்று இருந்தாலும். இந்தநடவடிக்கைகளில் தனது தோழமை நாடுகளும் பங்கெடுத்துக் கொள்ளும்வண்ணமாக அது செயல்படுகிறது, அந்த நாடுகளின் செல்வாக்கையும்.ஒத்துழைப்பையும் அது பயன்படுத்திக் கொள்கிறது, இஸ்லாமிய நாடுகளிலுள்ளஅவர்களின் கங்காணிகள் (Agents) இந்த திட்டத்தின் வெற்றிக்கு உத்திரவாதம்தருகிறார்கள், ஏனெனில் இஸ்லாத்தின் விஷயத்திலும் அதன் அச்சுறுத்தல்விஷயத்திலும் அதன் எழுச்சியினால் தங்கள் நலன்களும் செல்வாக்கும் பாதிப்புஅடையும் என்ற விஷயத்திலும் இவர்கள் அமெரிக்காவுடன் வேறுபடுவதில்லை.
மூன்றாவது தூண்
சர்வதேச விதிகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்ற கருவி. அமெரிக்காவின்தனித்தன்மை அதனுடைய திட்டங்களை செயல்படுத்தவும் சர்வதேச விதிகளுடன்ஒத்துப்போகும் விதத்தில் காரியங்களை அமைத்துக் கொள்ளவும் ஒத்துழைக்கும்அதனுடைய பல சர்வதேச அமைப்புகள். துணை அமைப்புகள் மற்றும் சர்வதேசநிறுவனங்கள் ஆகியவைகள், மேலும் அரசியல் நடவடிக்கைகள். பொருளாதாரமற்றும் இராணுவ நடவடிக்கைகள் இவைகளில் எது எப்போது தேவை என்றுகருதுகிறதோ அத்தகைய திட்டமிட்ட நடவடிக்கைகள் இவையாவும் அதனுடையமூன்றாவது தூணாக அமைந்துள்ளன.
நான்காவது தூண்
அமெரிக்கா மற்றும் அதன் சர்வதேச நாடுகளின் ஆதிக்கத்தில் இயங்கிக்கொண்டிருக்கும் செய்தி ஊடகங்கள் (News Media) இந்த செய்தி ஊடகங்கள் ஒருபயங்கர ஆயுதமாக அமெரிக்கா அதன் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்திக்கொள்கிறது, அவைகள் மூலமாக தனது கோஷங்களை உலகெங்கும் பிரச்சாரம்செய்கிறது, இந்த ஊடகங்கள் இஸ்லாத்தின் கொள்கைகளையும் அதனைபின்பற்றும் முஸ்லிம் மக்களையும் ஒரு தவறான கண்ணோட்டத்துடன் பார்க்கும்படிபொய்யான தகவல்களை பரப்பி விடுவதில் கைத்தேர்ந்தவை, இஸ்லாத்தைஅடிப்படை வாதம் என்றும் பயங்கரவாதிகள் என்றும் சித்தரிப்பதை முழு மூச்சாகக்கொண்டு இவைகள் இயங்கி வருகின்றன.அமெரிக்காவின் இந்த கொடிய ஆயுதத்தை நாம் குறைவாக எடை போட்டுவிடக் கூடாது, தொலைதொடர்புதுறையில் கடந்த நூற்றாண்டின் மத்தியில் ஏற்பட்ட முன்னேற்றம் உலகத்தை ஒருகிராமத்துக்குள் அடக்கி விட்டது, இப்போது வரி வடிவத்திலும். ஒலி வடிவத்திலும்.ஒளி வடிவத்திலும் இந்த ஊடகங்களின் பிரச்சாரம் உலகத்தின் ஒவ்வொரு மூலைமுடுக்கிலும் ஒவ்வொரு குடியிருப்பு இல்லங்களிலும் சென்றடைந்துகொண்டிருக்கின்றன.
ஐந்தாவது தூண்
இதுதான் அனேகமாக அமெரிக்காவின் கோரம் நிறைந்த அதனுடைய ஆபத்தானதூணாகும், இஸ்லாமிய நாடுகளிலிருக்கும் அதன் கைபாவையான ஆட்சியாளர்கள்அதனுடைய கங்காணிகள். ஆட்சியாளர்களோடு கைகோர்த்து நிற்கும் நயவஞ்சகமுஸ்லிம்கள். சந்தர்ப்பவாதிகள். ஐந்தாம் படை வேலை செய்யும் எடுபிடிகள்.பணத்திற்காகவும். புகழுக்காகவும் பல்லிளிக்கும் உலக ஆதாய வாதிகள். மற்றும்குöப்பார்களின் கலாச்சாரத்தில் மோகம் கொண்ட போலிகள்,இவர்களெல்லாம் இஸ்லாமிய சமூகத்தின் அங்கங்களாகத்தான் இருக்கிறார்கள்என்பது வேதனைக்குரிய விஷயமாகும், இவர்களில் அனேகர் குöப்பார்களின்இழிவான கலாச்சாரத்தில் மோகம் கொண்டவர்களாக இருக்கும் நிலையில்இஸ்லாத்தின் மீது பற்றுள்ளவர்களைப் போல பாசாங்கு செய்பவர்கள், இவர்களில்சிலர் தங்களை அரசியல் அறிஞர்கள் என்று பறைசாற்றிக் கொள்பவர்கள், இன்னும்சிலர் சில இஸ்லாமிய(?) அமைப்புகளை வைத்துக் கொண்டு தங்களை பெரியமேதைகளாகவும் இஸ்லாமிய அறிவு பெற்றவர்களாகவும் இஸ்லாத்தில் தங்களுக்குநம்பிக்கை உண்டு என்று காட்டிக் கொள்பவர்களாகவும் இருக்கிறார்கள், இவர்கள்அனைவரும் உண்மையில் உலக ஆதாய வாதிகள், முஸ்லிம்கள் தங்கள்வாழ்வியல் விவகாரங்களிலிருந்து மார்க்கத்தை பிரிக்க வேண்டும் என்று கோரும்மதசார்ப்பின்மை கொள்கை (Secularism) உடையவர்கள்.
இவைகள் அனைத்தும் இஸ்லாத்தை வீழ்த்துவதற்காக திட்டமிட்டநடவடிக்கைகள் மேற்கொள்ளும் அமெரிக்காவும் உபகரணங்களாகும், இதன்படிமுஸ்−ம்களை அவர்களுடைய மார்க்கத்தி−ருந்து பிரித்து முதலாளித்துவகோட்பாட்டின்படி வாழ வைக்க திட்டமிடப்படுகிறது, அந்த நோக்கத்தைநிறைவேற்றுவதற்கு செய்தி ஊடகங்கள் மூலமாக தவறான கருத்துக்களையும்செய்திகளையும் பரப்புதல். இஸ்லாத்தின் சட்டங்களையும் நெறிமுறைகளையும்திரித்துக் கூறுதல், இஸ்லாம் அல்லாத குöப்ர் சட்டங்களை முஸ்−ம்கள் மீதுதிணித்தல். இந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்த அவ்வப்போது பல சட்டங்களைக்கொண்டு வருதல் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன, மேலும் இஸ்லாமியநாடுகளையும் அதன் மக்களையும் அடிமைப்படுத்த ஒப்பந்தங்கள் என்ற பெயரிலும்உடன்படிக்கைகள் என்ற பெயரிலும் தொடர்ந்து அவர்களை குöப்பார்களின்ஆதிக்கத்தில் வைப்பதற்கு பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன,இதன்மூலம் அவர்களை ஏழ்மைப்படுத்தவும் அவர்களின் உயர் மாண்புகளைஅழிக்கவும். சதித்திட்டம் தீட்டப்படுகின்றன, அச்சத்தினையும் அச்சுறுத்தும் அத்துமீறல்களையும் அவர்கள் மீது ஏவிவிட்டு விழித்துக் கொண்ட இஸ்லாத்தின்வீரப்புதல்வர்களை அச்சம் கொள்ளச் செய்ய அவர்கள் மீது தாக்குதல்நடத்தப்படுகிறது, இதன்மூலம் அவர்கள் செயல்படாமல் மௌனமாகிவிட கவனமாகதிட்டம் தீட்டப்படுகிறது, இதனால் முஸ்−ம்கள் எவரும் இஸ்லாத்திற்காகஉண்மைக்காக குரல் எழுப்ப முடியாமல் போகும் என்று இந்த குöப்பார்கள்மனப்பால் குடிக்கிறார்கள், குöப்ருக்கும் குöப்பார்களுக்கும் பணிந்து போகும் படிஇஸ்லாமிய சமூகத்துக்கு அமெரிக்கா கட்டளையிடுகிறது.
இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் வீழ்த்திடவும் அவர்களை குöப்ர்சட்டங்களுக்கு அடிபணிய வைக்கவும் அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்டநடவடிக்கைகளின் அனைத்து அம்சங்களையும் இது வரையில் கண்டோம்,இத்திட்டத்தின் ஒரு பகுதியான முதலாளித்துவ சித்தாந்தத்தின் பிரச்சாரம் நான்குவகையான கோஷங்களில் வெளிப்படுகின்றன,இந்த கோஷங்கள் இந்த சித்தாந்தத்தின் கருப்பொருளாகும்,
அவையாவன.
1. ஜனநாயகம் (DEMOCRACY)
2. பன்மை வாதம் (PLURALISM)
3. மனித உரிமை (HUMAN RIGHTS)
4. தாராள வர்த்தக கொள்கை (FREE MARKET POLICIES) ஆகியவைகளாகும்.
இந்த நான்கு கோஷங்களைப்பற்றியும் அடிப்படைகள் பற்றியும் பேசுவதற்குமுன்பு அவைகள் தவறான அடிப்படைகளில் உருவாகி இருக்கின்றன என்பதைவிளக்குவது அவசியமாகும்,இந்த கோஷங்களின் அடிப்படை முதலாளித்துவ சித்தாந்தமாகும், அதாவதுவாழ்வியல் விவகாரங்களிலிருந்து மதத்தை பிரிப்பது என்ற கொள்கையாகும், இந்தக்கொள்கை அறிவார்ந்த முறையிலோ அல்லது தர்க்க ரீதியாகவோ உருவாகவில்லை,மாறாக இருமுரண்பட்ட கருத்துக்களுக்குமிடையில் ஏற்பட்ட சமாதான பேரமாகும்,அதன் ஒரு கருத்தாவது. இது வரலாற்றின் இடைப்பட்ட காலத்தில் (Medieval Age) ஐரோப்பாவில் கிருஸ்தவ தேவ ஆலயங்களின் மதாச்சாரியார்களிடம் இருந்துவந்த கருத்து, இதன்படி வாழ்வின் அனைத்து விவகாரங்களும் மதத்தின்கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும், அதாவது கிருஸ்தவ மதத்தின் கட்டுப்பாட்டில்-இதன்மூலம் மக்களின் அனைத்து விவகாரங்களிலும் தலையிடும் அதிகாரம்கிருஸ்தவ ஆலயங்களின் மதாச்சாரியார்கள் கையில் இருந்தது,
இரண்டாவதுகருத்து, ஐரோப்பாவில் இருந்த சிந்தனைவாதிகள். தத்துவ மேதைகள் அரசியல்அறிஞர்கள். விஞ்ஞானிகள் ஆகியோரின் கருத்து, இதன்படி இந்த பிரபஞ்சத்துக்குசிருஷ்டி கர்த்தா என்ற படைப்பாளன் ஒருவன் இல்லை, எல்லா நிகழ்வுகளும்இயற்கையாகவே சுயமாக நடைபெறுகிறது என்பதாகும், அதாவது இறைநம்பிக்கையை நிராகரிக்கும் கொள்கை, இவ்விரு சாரர்களுக்குமிடையில் ஏற்பட்டசமாதான பேரமே முதலாளித்துவ சித்தாந்தம் என்பதாகும், அதாவது மனிதனின்வாழ்வியல் விவகாரங்களில் மதம் எந்த தலையீடு செய்யாமல் அதனை பிரித்துவிடுவது என்ற கொள்கையாகும்,இரண்டு உடன்பாடான கருத்துக்களுக்கிடையில் அவைகளில் சில வேறுபாடுஇருந்தாலும் சமாதானம் ஏற்படுவது என்பது நாம் புரிந்து கொள்ளக்கூடியது,
ஆனால் முற்றிலும் முரண்பட்ட இரண்டு கருத்துக்களுக்கிடையில் உடன்பாடுஏற்படுவதென்பது எவ்விதத்திலும் ஏற்றுக்கொள்ளக் முடியாததும். புரிந்து கொள்ளமுடியாததும் அறிவுக்கு பொருத்தம் இல்லாததும் ஆகும், ஒன்று இறைவன் ஒருவன்இருக்கின்றான் அவனே மனித இனத்தையும். அனைத்து உயிர்களையும்பிரபஞ்சத்தினையும் படைத்தான் என்றும் அவன்தான் மனிதன் வாழ்வுக்குவழிகாட்டுவதற்காக சட்டங்களையும் நெறிமுறைகளையும் வகுத்து தந்துள்ளான்என்றும் அவனே மரணத்துக்குப் பின்பு இந்த நெறிமுறைகளின்படி மனிதன்வாழ்ந்தானா? என்று விசாரணை செய்வான் என்றும் விவாதம் சொல்ல வேண்டும்அல்லது இறைவன் ஒருவன் இல்லை ஆகவே மனிதனுக்கு இறைநம்பிக்கையைபோதிக்கும் மதம் தேவையில்லை. மனிதனின் வாழ்வியல் விவகாரங்கள்அனைத்தி−ருந்தும் மதம் கற்பிக்கும் நம்பிக்கைகள் அகற்றப்படுவதற்கு ஏதுவாக இறை நம்பிக்கை என்ற ஆன்மீக சிந்தனையே மனிதனிடமிருந்து அகற்றப்படவேண்டும் என்றும் விவாதம் சொல்ல வேண்டும்,
அரசிய−ருந்து மதத்தை பிரிப்பது அல்லது மனிதன் வாழ்வியல்விவகாரங்களி−ருந்து மதத்தை பிரிப்பது என்பது எவ்வகையிலும் அறிவுக்குஒவ்வாத கருத்தாகும்,இறைவனைப் பற்றிய சிந்தனையும் அவன் இருக்கின்றானா அல்லது இல்லையாஎன்ற விவாதமும் முக்கியமான விஷயமில்லை என்ற முதலாளித்துவ வாதிகளின்மனித உள்ளம் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்தாகும், எனவே இறைவன்இருக்கின்றான் என்ற நம்பிக்கை உடையவர்களும் இறைவன் இல்லை என்றகருத்து உடையவர்களும் ஒருபோதும் ஒரே பாதையில் செல்ல முடியாது,
இந்தஇருசாரரும் முதலாளித்துவ சித்தாந்தத்தை அறிவுப்பூர்வமாக ஏற்றுக் கொள்ளவேமுடியாது,மனிதன் வாழ்வு மரணம் பிரபஞ்சம் ஆகியவைகளைப்பற்றி ஆழ்ந்து சிந்தனைசெய்யும் ஒரு மனிதன் அறிவார்ந்த பல ஆதாரங்களின் அடிப்படையில் இறைவன்என்ற படைப்பாளன் இருக்கின்றான் என்றும். அவனே அனைத்தையும்படைத்துள்ளான் என்றும். அவனே மனிதனுக்கு தேவையான வாழ்வியல்சட்டநெறிமுறைகளையும் வழிகாட்டுதலையும் வழங்கியுள்ளான் என்றும்.மரணத்திற்கு பின்பு அவனே விசாரனை செய்வான் என்றும் உறுதியானநம்பிக்கைக்கு வந்தே ஆக வேண்டும் என்றும் இப்போது நமது விவாதம் இறைவன்இருக்கிறானா அல்லது இல்லையா என்பது பற்றியோ அவன் மனிதனுக்குவழிகாட்ட சட்டங்களை வழங்கியிருக்கிறானோ என்பது பற்றியோ அல்ல, மாறாகநாம் முதலாளித்துவ சித்தாந்தம் பற்றியும் அதன் தவறான அடிப்படையை வெளிக்கொணர்வது குறித்தும் விவாதித்துக் கொண்டிருக்கிறோம்.
இந்த சித்தாந்தம்இருமுரண்பட்ட வெவ்வேறு இரண்டு கருத்துக்களின் கலவை என்பதையும் இதில்உண்மையின் அடிப்படை இல்லை என்பதையும் நாம் உணர வேண்டும்.
முதலாளித்துவ சித்தாந்தம் தவறு என்று நாம் நிரூபணம் செய்துள்ளது,அதன்மீது கட்டமைக்கப்பட்டுள்ள அனைத்து கொள்கைகளையும்நெறிமுறைகளையும் தவறு என்று நிரூபிக்க போதுமானதாகும், இதன் அடிப்படைஅம்சங்களை ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் நமக்கு இல்லை, ஆனால்இதன் கருத்துக்கள் உலகம் முழுவதும் பரப்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில்.இவற்றின் சில அம்சங்களை முஸ்−ம்கள் ஏற்றுக் கொள்ள தயாராகிவிட்டார்கள்என்ற சூழ−ல். இந்த கோஷங்களிலும் இதை நடைமுறைப்படுத்த செய்யப்படும்அமெரிக்காவின் திட்டமிட்ட நடவடிக்கைகளிலும் இஸ்லாத்தையும் அதன்மக்களையும் நெறியற்ற முறையில் நசுக்குவதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டிருப்பதால்.இதைப்பற்றி இங்கு விவாதிப்பது நமக்கு அவசியமாகிறது, அவைகளின் தவறானஅடிப்படையையும் அவை முற்றிலும் இஸ்லாத்திற்கு முரண்பட்டவை என்பதையும்நாம் எடுத்துக்காட்ட கடமைப்பட்டுள்ளோம், எனவே முஸ்−ம்கள் இந்தகோட்பாட்டையும் அதனின்று பிறந்த அனைத்து கொள்கைகளையும்.நெறிமுறைகளையும். வழிமுறைகளையும் முற்றாக நிராகரிக்க வேண்டும், அவற்றைகடைபிடித்து இஸ்லாத்தில் தடை கோட்பாடுகளை பிரச்சாரம் செய்வதையும் அதைசெயல்படுத்தும் நோக்கத்தோடு செய்யப்படும் அனைத்து நடவடிக்கைகளையும் முஸ்லிம்கள் முழுபலம் கொண்டு எதிர்க்க வேண்டும்.
இஸ்லாத்தை வீழ்த்த அமெரிக்கா மேற்கொள்ளும் திட்டமிட்ட நடவடிக்கைகள் என்ற ஆங்கில நூலிலிருந்து- பகுதி 03
பன்மைவாதம் (Pluralism)
மனித சமூக அமைப்பு பற்றி முதலாளித்துவவாதிகளின் சிந்தனையில் எழுந்தகருத்துதான் பன்வாதமாகும், அவர்கள் பார்வையில் சமூகம் என்பது பல்வேறுநம்பிக்கைகள். கருத்துக்கள். விருப்பங்கள். தேவைகள் மற்றும் சமூக பின்னணிஆகிய பல அடிப்படைகளிலுள்ள பல தனி நபர்களின் தொகுப்புதான் சமூகமாகஇருக்கிறது, இதன் காரணமாக சமூகத்தில் பல்வேறு வகுப்பார்கள் இருப்பது தவிர்க்கமுடியாதது, அவர்கள் ஒவ்வொருவரும் தத்தமது குறிக்கோள்களின் அடிப்படையில்ஒரு கட்சியையோ. இயக்கத்தையோ அல்லது அமைப்பையோ சார்ந்தவராகஇருப்பார்கள், இந்த பிரிவினர் அனைவரும் அங்கீகரிக்கப் பட்டு அரசிய−ல் பங்குகொள்ள அவர்கள் அனுமதிக்கப்பட வேண்டும், ஆகவே ஒரே கட்சி அமைப்புஅல்லது ஒரே சமூகம் என்பதை பன்மைவாதத்துக்கு முரண்பாடானது என்றுஅவர்கள் எண்ணுகிறார்கள், எனினும் இந்த பன்மைவாதம் முதலாளித்துவசித்தாந்தத்திற்குள்தான் இருக்கிறது.
அந்த ஆட்சிமுறையில்தான்அமல்படுத்தப்படுகிறது, இந்த சித்தாந்தத்தையும் ஆட்சி அமைப்பையும் நம்பாதஒரு குழுவோ அல்லது அதன் வளர்ச்சிக்கு குந்தகம் விளைவிக்கும் ஒரு பிரிவோஇந்த சமூகத்தில் இருப்பதற்கு உரிமையில்லை என்பது நிறுவப்பட்ட உண்மை,பன்மைவாதத்தை விளக்கமாக சொல்வதென்றால். ஒரு ஆட்சி அமைப்பிலும் அதன்வடிவத்திற்குள்ளும் ஒரே கோட்பாட்டின் கீழ் அல்லது ஒரே அடிப்படையில்பல்வேறு பிரிவினர் இயங்கிக் கொள்ளலாம்,இஸ்லாமும் இத்தகைய பன்முக தன்மை கொண்டதுதான், ஆனால் அதன்அமைப்பும் தனித்தன்மையும் முதலாளித்துவ கோட்பாட்டிலிருந்து முற்றிலும்வேறுபட்டது, இஸ்லாத்திற்குள் பல்வேறு குழுக்களும் இயக்கங்களும் உண்டு,அவைகள் யாவும் இஸ்லாமிய கோட்பாட்டின் அடிப்படையில் நிறுவப்பட்டவை,அவைகளின் கருத்துக்களும் சிந்தனைகளும் அபிப்ராயங்களும் இஸ்லாமாகஇருக்கும் வரை அதாவது இஸ்லாமிய ஷரியத் படியோ அல்லது அதன்அடிப்படையிலோ இருக்கும் வரை அவைகள் இஸ்லாமிய ஆட்சி அமைப்புக்குகுந்தகம் விளைவிக்க மாட்டா.
இருந்த போதிலும். இஸ்லாத்தில் கருத்துக்கள் அடிப்படையில் பல பிரிவுகள்இருப்பதற்கு அனுமதி உண்டு, இது அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கோரும்முதலாளித்துவ கோட்பாட்டின் அடிப்படையில் உள்ள பன்மைவாதம் அல்ல,முதலாளித்துவ பன்மைவாதம் என்பது அதன் சித்தாந்தமான வாழ்விலிருந்துமதத்தை பிரிப்பது என்ற அடிப்படையிலிருந்து உருவானது, எனவே முதலாளித்துவபன்மைவாத அடிப்படையில் கட்சி அல்லது ஒரு இயக்கத்தை ஏற்படுத்திக்கொண்டு.வாழ்வியலிருந்து மதத்தை பிரிப்பது என்ற குöப்ர் கோட்பாட்டை அல்லது அதுபோன்ற ஒரு கருத்தை கோருவதற்கும். இஸ்லாம் தடுத்துள்ள கொள்கைகளான தேசியவாதம். இனவாதம். குலப்பெருமை. குடிப்பெருமை. மொழிப் பெருமை.தேசப்பற்று ஆகியவைகளின் அடிப்படையில் இயங்குவதற்கும் அனுமதி உண்டு,இன்னும் அல்லாஹ்(சுபு) தடுத்தவைகளான பாலியல் வெறித்தனங்கள். விபச்சாரம்.சூதாட்டங்கள். மதுபானங்கள் அருந்துதல். கருச்சிதைவு. பெண்களை போதைபொருளாக பயன்படுத்துதல். ஆபாசம். கலப்படம் இன்னும் இதுபோன்றதீயவைகளை கோருவதற்கும் அனுமதி உண்டு.
ஆகவே அமெரிக்கா பிரச்சாரம் செய்யும் பன்மைவாதத்தை முஸ்−ம்கள்ஒருபோதும் ஏற்றுக்கொள்ள இயலாது, இதை ஏற்றுக் கொள்வது என்பதுஅல்லாஹ்(சுபு) தடுத்தவைகளை ஆகுமாக்கிக் கொள்வது என்று பொருளாகும், இதுஅல்லாஹ்(சுபு)வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் விஸ்வாசம்கொண்டுள்ள எந்த உண்மை முஸ்லிமும் ஏற்றுக்கொள்ள இயலாத ஒருவிஷயமாகும், ஏனெனில் அல்லாஹ்(சுபு) இதை அங்கீகரிப்பவரை மறுமையில்தண்டிப்பான் என்பது ஒவ்வொரு முஸ்லிமும் அறிந்த விஷயமாகும்.
மனித உரிமை (Human Rights)
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் முஸ்லிம்கள் கடைபிடிக்க வேண்டும்என்று வற்புறுத்தும் மூன்றாவது கோஷம் மனித உரிமையாகும், இஸ்லாமிய நாட்டுஆட்சியாளர்களின் அத்துமீறல். கொடுங்கோன்மை. சித்திரவதை ஆகியவற்றுக்குஇலக்காகி துன்பத்தை அனுபவிக்கும் முஸ்லிம்கள் பலரை இந்த கோஷம்கவர்ந்திருக்கிறது, முதலாளித்துவ கோட்பாட்டின் ஒரு அம்சமாக விளங்கும் இந்தசிந்தனை. மனிதனுடைய இயற்கை இயல்புகளையும் தனி நபருக்கும்சமூகத்துக்கும் உள்ள தொடர்புகளையும். சமூகத்தின் யதார்த்த நிலைகளையும்.அரசின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்கிறது,அதனுடைய இந்த ஆய்வின்படி மனிதனுடைய இயற்கை குணத்தை அதுபரிசீலிக்கிறது, மனிதன் நன்மை தீமை ஆகிய இரண்டையும் கொண்டவனாகஇருக்கிறான், மனிதன் தன்னுடைய விருப்பங்கள் தடை செய்யப்படும்போது தீமைசெய்கிறான், ஆகவே மனிதனிடமுள்ள நன்மையை வெளிக் கொணரும் அவனதுஎண்ணங்கள் தளர்த்தப்பட வேண்டும் என்று இந்த கோட்பாடு கூறுகிறது,இந்த அடிப்படையில் சுதந்திரம் என்ற கருத்து பிறந்தது, சுதந்திரம் என்ற இந்தகருத்து முதலாளித்துவ கோட்பாட்டில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது, இதன்படிதனிநபர் மற்றும் சமூகம் ஆகிய இரண்டிற்கும் உள்ள தொடர்புகள் ஒன்றுக்கொன்றுமுரண்பாடானது, ஆகவே சமூகத்திடமிருந்து தனிநபர்கள் பாதுகாக்கப்பட வேண்டும்,அவனுடைய சுதந்திரம் மீட்கப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும், அமெரிக்காவின்தனி நபர் உரிமையை விட சமூகத்தின் நலனுக்கே முன்னுரிமை கொடுக்கப்படவேண்டும் என்ற ஐரோப்பாவின் மத்திய கால (Medieval Age) பிரபுத்துவஅமைப்பு (Feudal System) கொண்ட கருத்துக்கு முரணாக உள்ளதை இங்கு நாம்கவனத்தில் கொள்ள வேண்டும்.
சமூகத்தின் பார்வையை பொறுத்தவரை பல இயல்புகளை உடைய பல்வேறுதனிநபர்கள் பலபிரிவுகளாக அதில் வாழ்கிறார்கள், ஆகவே தனி நபர்களின் நலன்பாதுகாக்கப்பட்டால் சமூக நலனும் தானாகவே பாதுகாக்கப்படும் என்றுமுதலாளித்துவவாதிகள் எண்ணுகிறார்கள்.
மனிதனுடைய இயல்பு. தனிநபர் மற்றும் சமூகம் ஆகிய இவற்றுக்குஇடையிலுள்ள தொடர்புகள். சமூகத்தின் யதார்த்த நிலை. அரசின் செயல்பாடுகள்ஆகியவற்றை குறித்த முதலாளித்துவ வாதிகளின் கருத்துக்கள் அனைத்தும்தவறானவை, இவர்கள் எண்ணுவது போல மனிதன் இயல்பு ரீதியாக நல்லவனும் அல்ல கெட்டவனும் அல்ல, தேவ ஆலயங்களின் மதாச்சாரியர்கள். முதல் மனிதர்ஆதமின் பாவத்தை மனிதர்கள் அனைவரும் மரபுரீதியாக பெற்றிருப்பதாகவும்.மனிதர்கள் பாவ மீட்சி பெற்று தனது பழய உயர்ந்த நிலைக்கு திரும்ப வேண்டும்என்றும் போதிக்கிறார்கள்.
மனிதனைப் பற்றிய சரியான கருத்து என்னவென்றால். அவனுக்கு உடல்ரீதியானதேவைகள் இருக்கிறது, அவைகளை அவன் நிறைவு செய்ய வேண்டும்,அல்லாஹ்(சுபு) அவனும் மனம் என்னும் அருட்கொடையை வழங்கியிருப்பதால்அவன் தனது இயல்பான தேவையை நிறைவு செய்து கொள்ளும் வழியை தனதுவிருப்பப்படி தேர்வு செய்து கொள்கிறான், சரியான வழியில் அவன் தனதுதேவைகளை நிறைவு செய்து கொண்டால் அவன் நன்மை செய்தவனாகிறான்,தவறான வழியிலோ அல்லது இயல்புக்கு புறம்பான வழியிலோ தனது தேவையைநிறைவு செய்து கொண்டால் அப்போது அவன் தீமை செய்தவனாகிறான், ஆகவேஇயல்பாகவே மனிதன் நன்மையோ அல்லது தீமையோ செய்யும் நிலையில்இருக்கிறான், இவை இரண்டையும் மனிதன் தன் சுய விருப்பப்படியே தேர்வு செய்துகொள்கிறான், இதுதான் இஸ்லாம் மனிதனைப் பற்றி கொண்டுள்ள கருத்து, இதைஅல்லாஹ்(சுபு) தனது வார்த்தைகளில் திருமறை குர்ஆனில் விளக்குகின்றான்.
ஆன்மாவின் மீதும் அதனை செவ்வையாக்கியவன் மீது சத்தியமாக பின்னர்அதற்கு அதன் தீமையையும் அதற்குரிய நன்மையையும் உணர்த்தினான். (91:7,8)
மேலும் இருவழிகளை அவனுக்கு நாம் காண்பித்துவிட்டோம். (குர்ஆன் 90:10)
நிச்சயமாக நாம் அவனுக்கு (நன்மை, தீமை பற்றிய) வழிகளை தெளிவுசெய்தோம். ஒன்று அவன் நன்றியுள்ளவனாக இருக்கலாம் அல்லது நன்றிகெட்டவனாக இருக்கலாம். (குர்ஆன் 76:3)
மேலும் தனிநபருக்கும் சமூகத்துக்கும் இடையிலுள்ள உறவு ஒன்றுக்கொன்றுமுரண்பாடானது, சமுதாய நலனைவிட தனி மனித நலனை பேணுவது தான்அவசியம் என்று கூறும் முதலாளித்துவ கருத்தும். தனிநபர் நலனைவிட சமூகத்தின்நலனே முன்னுரிமைக்கு தகுதியானது என்று கூறும் மத்திய கால ஐரோப்பாவின்பிரபுத்துவவாதிகளின் கருத்தும். சமூகம் என்ற சக்கரத்தின் இணைப்பு கம்பிகள்தான்தனிநபர்கள் என்ற மாக்ஸிய பொது உடமை வாதிகளின் கருத்தும் முற்றிலும்தவறானது,தனிமனிதனுக்கும் சமூகத்துக்கும் இடையிலுள்ள உறவுகள் என்பதுஒன்றோறொன்று இணக்கமாகவும். ஒவ்வொன்றும் அதன் குறிக்கோளைஅடைவதற்கேற்ப இணக்கமாகவும் இசைவாகவும் இருக்க வேண்டும் என்று ஒருசரியான உறவு முறையினை இஸ்லாம் பரிந்துரைக்கின்றது, ஒரு மனிதனின் இருகரங்களும் அவனுடைய உடலின் ஒரு பகுதியாக எவ்வாறு இருக்கிறதோ அதுபோல தனி நபர் ஒவ்வொருவரும் சமூகம் என்ற உடலின் பகுதிகளாக இருக்கிறார்கள்என்று இஸ்லாம் இயம்புகிறது, உடலை எவ்வாறு கரங்களி−ருந்து பிரிக்கமுடியாதோ அது போல உடலிலிருந்து கரங்கள் பிரிக்கப்பட்டு விட்டால் அதுபயனற்றுப் போகும்.
இஸ்லாம் தனி நபருக்கும் சமூகத்துக்கும் அதனை தன் உரிமைகளைவகுத்திருக்கிறது, இந்த உரிமைகள் இசைவானதும் முரண்பாடு இல்லாததும்.ஒன்றை மற்றொன்று நிறைவு செய்வதாயும் இருக்கிறது, மேலும் இஸ்லாம் இவைஒவ்வொன்றின் மேலும் சில கடமைகளையும் விதித்திருக்கிறது, இந்த இரண்டின்சமநிலையினை நிலைநிறுத்தவும். இவை ஒவ்வொன்றும் மற்றதின் மீது ஆதிக்கம்செலுத்தாமல் தனது கடமைகளை நிறைவேற்றி உரிமைகளை பெற்றுக் கொள்ளவும்இஸ்லாமிய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ளது.
இறைதூதர்(ஸல்) தனி மனிதனுக்கும் சமூகத்துக்கும் உள்ள உறவுகள் எந்த வகையானது என்று அழகாக விளக்கியிருக்கிறார்கள், அல்லாஹ்(சுபு)வின்வரம்புகளை பேணிக் கொள்ளாத தனிமனிதனுக்கு உதாரணமானது. ஒருகப்ப−லுள்ள மனிதர்களைப் போன்றது, சிலர் மேல் தட்டிலும். சிலர் கீழ் தட்டிலும்இருந்தார்கள், கீழ்தட்டியிலுள்ளவர்களுக்கு குடிநீர் தேவைப்படும் சமயத்தில்அவர்கள் மேல் தட்டிற்கு சென்று எடுத்து வர வேண்டும், இந்நிலையில்கீழ்தட்டியிலுள்ளவர்கள் மேல்தட்டிற்கு சென்று நீர் எடுத்து வருவதற்கு பதிலாக ஏன்கப்பலில் துவாரம் இட்டு நீர் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று கூறுகிறார்கள்,இப்போது மேல்தட்டில் உள்ளவர்கள் இவர்களை தடுக்காவிடில் அனைவரும்கடலில் மூழ்கி இறக்க வேண்டியதுதான், அதை தடுத்து விட்டாலோ அனைவரும்பிழைத்துக் கொள்ளலாம்,முதலாளித்துவவாதிகள் சமூகம் என்பது அதில் வாழும் தனி நபர்களின்கூட்டுத்தொகையே அன்றி வேறில்லை என்று கோருகிறார்கள்.
இது முற்றிலும்தவறானதாகும், சமூகம் என்பது தனிநபர்களை கொண்டிருப்பது மட்டுமல்லஅதனை உள்ளடக்கிய ஒரு வடிவமாகும், அந்த சமூகத்தில் வாழும் தனிநபர்கள்ஒவ்வொருவரின் எண்ணங்களும் கருத்துக்களும் அவர்களை வழிநடத்துகின்றஆட்சி அமைப்போடு சேர்ந்து அவர்கள் மீதே இயக்கப்படும் அல்லதுநடைமுறைப்படுத்தப்படும், சமூகம் என்பதற்கு சரியான விளக்கம் நிரந்தரஉறவுகளைக் கொண்ட தனிநபர்களின் குழு என்பதாகும், கப்ப−லோ அல்லது புகைவண்டியிலோ உள்ள பயணிகள் – அவர்கள் எண்ணிக்கை ஆயிரக் கணக்கில்இருந்தாலும் – ஒருபோதும் சமூகம் என்று சொல்லப்பட மாட்டார்கள், ஒருகிராமத்தில் வாழும் மனிதர்கள் அவர்கள் நூற்றுக்கு குறைவாக இருந்தாலும் – ஒருசமூகம் சொல்லப்படுவார்கள்.
இந்த உண்மைகளின் அடிப்படையில் சமூகம். தனி மனித இயல்புகள் மற்றும்அவற்றிற்கிடையில் உள்ள உறவுகள் பற்றி முதலாளித்துவவாதிகள் கொண்டுள்ளகருத்து தவறானதாகும், மேலும் அரசியல் பற்றியும் அரசின் கடமைகள் மற்றும்அதன் செயல்பாடுகள் பற்றியும் இவர்கள் கொண்டுள்ள கருத்தும் தவறானது, அரசுஎன்பது தனி மனிதனுக்கு உரிமைகளையும் நலன்களையும் பெற்றுக் தருவதற்கும்.அதனை பாதுகாப்பதற்கும் உரிய சாதனம் மட்டுமல்ல. மாறாக. தனிமனிதஅளவிலும் சமுதாய அளவிலும் சமூக அளவிலும் அதன் உள் விவகாரங்களிலும்குறிப்பிட்ட ஆட்சி அமைப்பு நிறுவியுள்ள பல தரப்பினரின் உரிமைகளையும்கடமைகளையும் நிலைநிறுத்தி சமநிலைப்படுத்துகின்ற ஒரு அமைப்பாகும்.
மேலும்அந்த அரசு எந்த கோட்பாட்டின் மீது கட்டமைக்கப்பட்டுள்ளதோ அதன் செய்தியைஉலகெங்கிலும் எடுத்துச் செல்லுதலும். வேறு எந்த பரிசீலனைக்கும் இடம்கொடாமல் மனித சமுதாயத்திடம் அதன் மாண்புகளுக்கேற்றவாறு அந்த செய்தியைஎடுத்துரைப்பதும் அதன் கடமையாகும்,முடிவாக மனித இயல்பு. தனிநபர். சமூகம் அவற்றிக்கு இடையிலுள்ள உறவு.தனி நபர் நலன்களை பெற்றுத் தந்து அதனை பாதுகாக்கும் அரசின் பங்களிப்புஆகியவை குறித்து முதலாளித்துவ கோட்பாட்டின் கருத்து பின்வரும் நான்குவிதமான தனிநபர் சுதந்திரத்தை கோருவதாக உள்ளது, அவையாவன.
• நம்பிக்கை சுதந்திரம்
• பேச்சு சுதந்திரம்
• சொத்துரிமை சுதந்திரம் மற்றும்
• தனிமனித சுதந்திரம் ஆகியனவாகும்,
இந்த சுதந்திரங்களின் அடிப்படையிலிருந்துதான் மனித உரிமை கோரிக்கைஉதயமாகிறது, இவைகள்தான் முதலாளித்துவ சமூகங்கள் அடைந்துள்ள பெருந்துயரங்களின் காரணிகள், இதன் விளைவாக பலமுள்ள மிருகங்கள்பலஹீனமானவைகளை பசியோடு விழுங்கும் கொடிய வனவிலங்குகளின்வசிப்பிடமான காடுகளாக அந்த சமூகம் மாறிவிட்டது, மனிதன் வனவிலங்கின் கீழ்நிலைக்கு பின் நோக்கி சென்று விட்டான், மேலும் மனிதன் தன் இயல்புகளிலும் தன்இயற்கை தேவைகளை நிறைவு செய்து கொள்ளுவதிலும் எந்தவித கட்டுப்பாடும்இல்லாத பண்பற்ற நிலைக்கு சென்றுவிட்டான், மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழும்மனிதர்கள் தங்கள் உடல் இன்பத்தை எவ்வளவு அதிகமாக அனுபவிக்கவேண்டுமோ அவ்வளவு அனுபவிப்பதில் குறியாக இருக்கிறார்கள், முதலாளித்துவசித்தாந்தம் இதை இன்பத்தின் உயர்ந்த நிலை என்று வர்ணிக்கிறது, அதன்சமுதாயத்துக்கு உண்மையான இன்பம் என்னவென்று அறியாததினால் இதைஏற்றுக் கொண்டுள்ளது, ஆனால் உண்மையில் அந்த சமூகம் கஷ்டத்திலும்.குழப்பத்திலும். முடிவில்லாத மன உளைச்சலிலும் உழன்று கொண்டிருக்கிறதுஎன்று கூறினால் அது மிகையாகாது.
நம்பிக்கை சுதந்திரம் (Freedom of Belief)
முதலாளித்துவ கோட்பாட்டின்படி நம்பிக்கை சுதந்திரம் என்பது. ஒருசித்தாந்தத்தையோ. ஒரு மதத்தையோ அல்லது ஒரு குறிப்பிட்ட கருத்தையோநம்புவதற்கும் அதே சமயம் நம்பாமல் இருப்பதற்கும் ஒரு தனி மனிதனுக்குள்ளசுதந்திரமாகும், இன்னும் அவனுக்கு தனது மதத்தை மாற்றிக் கொள்ளவும் அல்லதுமதத்தையே நிராகரித்துக் கொள்வதற்கும் உரிமை உண்டு, தங்களை இஸ்லாமியசமூகத்தைச் சார்ந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் குöப்பார்களின் சில தேய்ந்துபோன ஒலிநாடாக்கள் நம்பிக்ளை சுதந்திரம் என்பது இஸ்லாத்துக்கு முரணானதால்என்று கூறுகிறார்கள், தங்கள் வாதத்துக்கு ஆதரவாக பின்வரும் குர்ஆன் வசனத்தைகுறிப்பிடுகிறார்கள்.
மார்க்கத்தில் நிர்பந்தம் இல்லை. (குர்ஆன் 2:256)
ஏற்றுக்கொள்கிறவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். இன்னும் நிராகரிக்க நாடுகிறவர்கள்நிராகரித்துக் கொள்ளட்டும். (குர்ஆன்18:29)
தாராள வர்த்தக கொள்கை (Free Market Policies)
உலகளாவிய அளவில் திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலம் முஸ்−ம்களுக்குமற்றுமுள்ள உலக நாடுகளும் வாழ்வியல் நடைமுறையில் பின்பற்ற வேண்டும்என்று அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் கோரும் முதலாளித்துவகோட்பாட்டின் நான்காவது கோஷம் தாராள வர்த்தக கொள்கை என்பதாகும்,இந்த பிரச்சாரத்தில் கூறப்படும் தாராள வர்த்தக கொள்கை என்பதுமுதலாளித்துவ கோட்பாட்டிலிருந்து பிறந்தது ஆகும்.
மேலும் இது அமெரிக்காவின்நலனை பாதுகாப்பதற்காகவே உருவாக்கப்பட்ட கொள்கையாகும், இந்த கொள்கைசொத்துரிமையில் சுதந்திரத்தை சர்வதேச அளவில் நடைமுறைப் படுத்துவதைவலியுறுத்துகிறது, அதாவது சர்வதேச நாடுகளின் வர்த்தக உறவுகளில் சொத்துரிமைசுதந்திரத்தை அமல்படுத்துவது என்று பொருள்,தாராள வர்த்தக கொள்கைக்கு விளக்கம் என்னவென்றால் குறிப்பாகவர்த்தகத்திலும் பொதுவாக பொருளாதாரத்திலும் அரசின் குறுக்கீடு தளர்வதுஅல்லது முற்றிலும் இல்லாது போவது என்பதாகும்.
இந்த விளக்கத்தின்அடிப்படையில் உலக நாடுகளின் வர்த்தகத்துறை மற்றும் சுங்கத்துறைஆகியவைகள் நடைமுறைப்படுத்திவரும் அனைத்து வகையான கட்டுப்பாடுகளும்அவை உலக வர்த்தகத்திற்கு (Globalization) தடையாக இருப்பதால் அவற்றைநீக்க வேண்டும் என்று அமெரிக்கா நிர்பந்தித்து வருகிறது, தாராள வர்த்தக கொள்கைஎன்ற பெயரில் அமெரிக்கா திணிக்கும் மற்றொரு விதிமுறை ப்ரடக்ஸனிஸம்(Protectanism) என்பதாகும், இதன்படி உள்நாட்டில் உற்பத்தியாகும் சிலபொருட்களை சர்வதேச போட்டியிலிருந்து பாதுகாக்க அத்தகைய பொருட்களின்இறக்குமதியில் சில கட்டுப்பாடுகளை விதித்தல். இன்னும் சில பொருட்கள் மீதுஅதிகமான சுங்கவரி விதித்தல். சில உள்நாட்டுப் பொருட்களுக்கு அரசு மான்யம்அளித்தல். வர்த்தக பரிவர்த்தனையின் அளவை ஒரு கட்டுக்குள் வைத்தல் இன்னும்சில மறைமுகமான வர்த்தக பாதுகாப்பு விதிமுறைகளை விதித்தல் ஆகியநடவடிக்கைகள் அடங்கும், இந்த தாராள வர்த்தக கொள்கையை மற்ற நாடுகளின்மீது அமெரிக்கா விதிக்கும் நோக்கம் என்னவென்றால் உலகை ஒரு தாராள வர்த்தகசந்தையாக மாற்றுவதன் மூலம் மற்ற நாடுகளில் வர்த்தக சந்தை உருவாக்குவது, இதன் விளைவாக அன்னிய முதலீடுகள் ஒவ்வொரு நாட்டிலும் அதிகரித்துஒவ்வொரு நாடும் அதனதன் பொருளாதாரத்தை தாங்களே நிர்வகித்துவரும்மேலாண்மை திறனை கைவிட்டுவிடும் நிலைக்கு தள்ளப்படும், இதன் உள் அர்த்தம்என்னவெனில் இத்தகைய நாடுகளிலுள்ள பொதுத்துறை அரசு நிறுவனங்கள்அங்குள்ள தனியார் நிறுவனங்களுக்கு பெரிய தடைக்கல்லாகவும் அதன் வளர்ச்சிக்குமுட்டுக்கட்டையாகவும் இருப்பதால் அத்தகைய பொதுத்துறை அரசுநிறுவனங்களை தனியார் மயமாக்க ஒரு நெருக்கடியை ஏற்படுத்துவதாகும்,இந்த குறிக்கோளை அடைவதற்கு அமெரிக்கா மற்ற பெரிய முதலாளித்துவநாடுகளோடு இணைந்து பல சர்வதேச ஒப்பந் தங்களையும் பொருளாதாரகூட்டனிகளையும் ஏற்படுத்துவதில் கடுமையாக முயன்று வருகிறது, கனடா.அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோ ஆகிய நாடுகளுக்குள் ஏற்பட்ட வட அமெரிக்காதாராள வர்த்தக உடன்படிக்கை(North American Free Trade Agreement -NAFTA) ஐரோப்பிய பொது வர்த்தக சந்தை
(The Europeon Common Market) மற்றும் NAFTA நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா. நியூஜிலாந்து. ஜப்பான்.இந்தோனேஸியா மற்றும் ஆசியாவின் புலிகள் என்றழைக்கப்படும் நாடுகள் ஆகியவர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பசுபிக் நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள APEC என்ற ஒப்பந்தம் ஆகியவைகள் இந்த பொருளாதார கூட்டணிக்கு சிலஉதாரணங்களாகும், இந்த முதலாளித்துவ நாடுகள் G7 (Group of seven)என்றழைக்கப்படும் செல்வந்த நாடுகளின் கூட்டணியை பொருளாதாரம். நிதி மற்றும்வர்த்தகம் ஆகிய துறைகளில் பல முக்கிய சர்வதேச முடிவுகள் எடுக்கவும். அதைநடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது, இந்தமுடிவுகள் – குறிப்பாக வர்த்தக துறையில் எடுக்கும் முடிவுகள் – விரைவில் சர்வதேசவிதிமுறைகளாக கொள்ளப்படும்.
(The Europeon Common Market) மற்றும் NAFTA நாடுகளுக்கும் ஆஸ்திரேலியா. நியூஜிலாந்து. ஜப்பான்.இந்தோனேஸியா மற்றும் ஆசியாவின் புலிகள் என்றழைக்கப்படும் நாடுகள் ஆகியவர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த பசுபிக் நாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள APEC என்ற ஒப்பந்தம் ஆகியவைகள் இந்த பொருளாதார கூட்டணிக்கு சிலஉதாரணங்களாகும், இந்த முதலாளித்துவ நாடுகள் G7 (Group of seven)என்றழைக்கப்படும் செல்வந்த நாடுகளின் கூட்டணியை பொருளாதாரம். நிதி மற்றும்வர்த்தகம் ஆகிய துறைகளில் பல முக்கிய சர்வதேச முடிவுகள் எடுக்கவும். அதைநடைமுறைப்படுத்துவதை கண்காணிக்கவும் பயன்படுத்திக் கொள்கிறது, இந்தமுடிவுகள் – குறிப்பாக வர்த்தக துறையில் எடுக்கும் முடிவுகள் – விரைவில் சர்வதேசவிதிமுறைகளாக கொள்ளப்படும்.
GATT ஒப்பந்தம் (The General Agreement for Tariff and Trade) கி,பி,1995வரை சர்வதேச வர்த்தகத்தின் முகவரியாக இருந்தது, அனேகமாக எல்லாஉலக நாடுகளும் அவைகள் ஒப்பந்த நாடுகளானாலும் அல்லது ஒப்பந்தத்தில்இல்லாத நாடுகளானாலும் GATT ஒப்பந்தத்துக்கு கட்டுப்பட்டே வந்தன.
ஏனென்றால் இந்த ஒப்பந்தம் பல நாடுகளின் வர்த்தக உறவுகளைஒழுங்குபடுத்துவதாக இருந்தது,அந்த நாடுகளில் தங்கள் உள்நாட்டு பொருளாதாரம் மற்றும் வர்த்தககொள்கைகளை நடைமுறைப்படுத்துவதில் எந்த தலையீட்டையும் இந்தஒப்பந்தத்தின் மூலம் அமெரிக்க செய்ய முடியவில்லை, இக்காரணத்தினால் தமதுகுறிக்கோளை அடைவதற்கு இந்த ஒப்பந்தம் போதுமானதாக இல்லை என்றுஅமெரிக்கா கண்டது, ஆகவே உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization) என்ற அமைப்பை மாற்று ஒப்பந்தமாக அமெரிக்கா ஏற்படுத்தியது,கி,பி,1995ல் உலகின் பெரும் வர்த்தக நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொரக்கோவில்இந்த அமைப்பு உருவாக்கப்பட்டதை அறிவித்தன, தனது குறிக்கோளைஅடைவதற்காக பலநாடுகளில் நெருக்கடியை ஏற்படுத்தி நிர்பந்திப்பதின் மூலம் உலகநாடுகள் இந்த புதிய அமைப்பில் சேர்ந்து கொள்ள ஒப்பந்தத்தில்கையொப்பமிடக்கூடும், இந்த புதிய ஒப்பந்தத்தின் தனித்தன்மை என்னவென்றால்.வல்லரசுகள் உலக நாடுகளின் மீது சுமத்தியிருக்கும் ஆட்சிமுறையின் வாயிலாகஅமெரிக்காவின் தலைமையிலிருக்கும் செல்வந்த நாடுகள் மற்ற நாடுகளின்பொருளாதார வர்த்தக நடவடிக்கைகளில் எளிதில் குறுக்கீடு செய்து ஆதிக்கம்செலுத்த இந்த ஒப்பந்தம் வழி செய்கிறது அல்லது அனுமதிக்கிறது என்பதுதான்.
அமெரிக்காவும் மற்ற முன்னணி முதலாளித்துவ நாடுகளும் தங்கள் தரம்வாய்ந்த உற்பத்தி பொருட்களுக்கு உலகம் முழுவதிலும் சந்தைகளை உருவாக்கவும் அன்னிய முதலீடுகளை உருவாக்கவும் தான் வர்த்தக சந்தை கொள்கைகளைசர்வதேச விதிமுறையாக்கியது என்பதில் ரகசியம் ஒன்றும் இல்லை, வளரும்நாடுகளை செல்வந்த நாடுகள் பொருளாதார வர்த்தக துறைகளில் தங்கள் பிடிக்குள்வைத்திருக்கவும் செல்வந்த நாடுகளின் உற்பத்தி பொருட்களுக்கு நுகர்வோராகமட்டும் இருக்கும் நிலையில். அவைகளின் பொருளாதார ஆதிக்கத்தின் கீழ் பணிந்துகிடப்பதிலிருந்து தங்களை மீட்டுக் கொள்ளும் பொருட்டு தங்கள் நாடுகளின்பொருளாதாரத்திற்கு ஒரு உறுதியான அடித்தளம் அமைக்க அவைகள் முயன்றால்அதனை தடுத்து நிறுத்தவும் இந்த புதிய வர்த்தக அமைப்பின் கொள்கைகள்அமெரிக்காவிற்கு கருவியாக இருக்கின்றன, கனரக தொழிற்சாலைகள் (Heavy Industries) இல்லாமல் ஒரு நாடு முன்னேற்றம் அடைய இயலாது, இத்தகையபெரிய ஆலைகள் இன்றி செல்வந்த நாடுகளின் பிடியில் இருக்கும் நிலையில் தங்கள்பொருளாதாரத்தை உற்பத்தி பொருளாதாரமாக (Production Economy) மாற்றஇயலாது, இந்த நாடுகள் ஏழை நாடுகளாகவே இருக்க நேரிடும்.
மேலே விவரிக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில். அமெரிக்காவும்மேற்கத்திய நாடுகளும் பொதுவாக ஆதரிக்கும், தாராள வர்த்தக கொள்கையைஏற்றுக் கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதி இல்லை, இந்த கொள்கைகள்முதலாளித்துவ கோட்பாட்டின் சொத்துரிமை சுதந்திரம் என்ற குöப்ர் கருத்தினைஅமல்படுத்தும் நடவடிக்கையாகும், இது இஸ்லாத்திற்கும் அதன்நெறிமுறைகளுக்கும் முற்றிலும் முரணானதாகும், மேலும் இஸ்லாமிய நாடுகள்இதனை ஏற்றுக் கொண்டால் அவர்களின் பொருளாதாரத்தில் குöப்பார்களின்ஆதிக்கம் செலுத்த உதவி செய்யப்படுவார்கள் என்பதும் குöப்ரிலிருந்தும்குöப்பார்களின் ஆதிக்கத்திலிருந்தும் முஸ்லிம்கள் தங்களை விடுவித்துக்கொள்வதை இது தடுத்துவிடும், ஆகவே இக்கொள்கைகள் இஸ்லாத்தின்விதிமுறைகளின்படி முஸ்லிம்களுக்கு தடுக்கப்பட்டுள்ளது.
அல்லாஹ் காஃபிர்கள் விசுவாசிகள் மீது ஆதிக்கச் செலுத்துவதை ஒரு போதும்ஏற்றுக் கொள்ள மாட்டான். (குர்ஆன் 4:141)
மேலும் இஸ்லாம் வர்த்தகத்தில் சுங்கதீர்வை விதிப்பதை தடை செய்கிறது,ஏனெனில்இறைதூதர்(ஸல்) கூறினார்கள்.
சுங்கத்தீர்வை விதிப்பவர்கள் சொர்க்கத்தில்நுழைய மாட்டார்கள்.
உற்பத்தி மூலங்கள் எவ்வாறு இருந்த போதும் இஸ்லாமிய அரசின்குடிமகனுக்கு வர்த்தகத்தில் சுங்க தீர்வை விதிப்பதை இஸ்லாம் தடை செய்கிறது,ஏனென்றால் இஸ்லாம் வர்த்தக கொள்கையில் வர்த்தகரின் குடியுரிமையை மட்டும்பார்க்கிறதே தவிர பொருளின் உற்பத்தி மூலத்தை பார்ப்பது இல்லை, மேலும் அவர்எத்தகைய குடியுரிமையை உடையவராக இருந்த போதிலும் வர்த்தகத்தில்சுங்கத்தீர்வை விதிப்பதை-மற்ற நாடுகள் இதை போன்ற நடவடிக்கையில்ஈடுபட்டால் அன்றி- இஸ்லாம் அனுமதிக்கவில்லை, இந்த உண்மைகளின்அடிப்படையில் முதலாளித்துவ கோட்பாட்டின் தாராள வர்த்தக கொள்கைஇஸ்லாத்துக்கு ஒத்துப்போகவில்லை என்பதால் இதை அங்கீகரிப்பதைமுஸ்லிம்கள் ஏற்றுக் கொள்ளக் கூடாது, மற்ற ஆட்சிமுறைகளில் இஸ்லாத்தோடுஒத்துப் போகக்கூடிய சில விதிமுறைகள் இருப்பது போல தோன்றினாலும்அவற்றை பின்பற்றுவதற்கு ஒருபோதும் முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை,இஸ்லாம் கோரும் சில விதிமுறைகள் மற்ற கோட்பாடுகளின் சிலவிதிமுறைகளோடு ஒத்தாக இருக்கிறது என்ற காரணத்தால் சில முஸ்லிம்கள்இஸ்லாத்தை குöப்ர் வார்த்தைகளைக் கொண்டு விளக்குவதை ஒருபோதும்நியாயப்படுத்த முடியாது, கவிஞர் ஷவ்கி இறைதூதர்(ஸல்) அவர்களை நீங்கள் சோசலிஸம் என்று கூறுவதும். ஷீரா என்ற ஆலோசனை கலக்கும் வழிமுறையைவைத்து இஸ்லாத்தை ஜனநாயகம் என்று கூறுவதும் கண்டிக்கத்தக்கது,இஸ்லாத்தினின்று பெறப்பட்ட அனைத்தும் இஸ்லாமேயன்றி அது சோசலிஸமோஅல்லது ஜனநாயகமோ அல்ல, மேலும் இருந்து வருகிறது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஆகவே தாராள வர்த்தக கொள்கை அதன் பிறப்பிடமும் அடிப்படையும் குöப்ர்கோட்பாட்டிலிருந்து வந்துள்ளது என்ற கோணத்தில் முஸ்லிம்கள் அதை நிராகரிக்கவேண்டும், அதை அமல்படுத்துவதால் இஸ்லாமிய சமூகத்தில் கடுமையானவிளைவுகள் ஏற்படும், அதன் குறைந்த அளவு கேடு என்னவென்றால் இஸ்லாமியநாடுகளின் பொருளாதாரத்தை முதலாளித்துவ நாடுகளின் பொருளாதாரத்தோடு அதுஇணைத்து விடும் என்பதுதான், முஸ்லிம் சமூகம் நல்ல விளைவுகளை ஏற்படுத்தும்பொருளாதாரத்தை உருவாக்குவதிலிருந்து இது தடுத்துவிடும்,மேலும குöப்பார்கள்முஸ்லிம்கள் மீது ஆதிக்கம் செலுத்த இது வழிவகை செய்து விடும்,
முடிவுரை
முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகமக்கள் அனைவரும் தழுவுவதற்குஅமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் உலகளாவிய அளவில் மேற்கொள்ளும்திட்டமிட்ட நடவடிக்கைகள் மூலமும் பிரச்சாரத்தின் மூலமும் அழைப்பு விடுக்கும்,பிரதான கோஷங்கள் இவைகள்தான், இந்த சித்தாந்தத்தின் கொள்கைகள் மற்றும்அதிலிருந்து பிறந்த ஆட்சிமுறை இவைகளின் ஊழல் முகங்களை நாம் தெளிவாகவிளங்கியிருக்கிறோம், அதன் ஜனநாயகம். பன்மைவாதம். மனித உரிமை. தாராளவர்த்தக கொள்கை ஆகியவைகளின் அறிவு ரீதியான அடிப்படைகுறைபாடுகளையும் அது இஸ்லாத்திற்கு அடிப்படையில் அனைத்து துறைகளிலும்முரண்படுகிறது என்பதையும் நாம் தெளிவாக விளக்கியுள்ளோம், ஆகவே முஸ்லிம்இவைகளை ஏற்பதை அதினின்றும் யாதொன்றையும் பின்பற்றுவதையும் ஒருகனம் நினைத்துப் பார்ப்பதற்குக்கூட அனுமதியில்லை என்பதை இங்கு தெளிவாகநிறுவியுள்ளோம்.
அமெரிக்காவின் இந்த திட்டமிட்ட நடவடிக்கை முஸ்லிம்களை முதலாகவும்முற்றாகவும் குறி வைத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை, ஏனெனில்இஸ்லாமிய சமூகம் மட்டும்தான் முதலாளித்துவ கோட்பாட்டை எதிர்க்கவும்நேருக்குநேர் நின்று மோதவும் தகுதியான ஒரு சித்தாந்தத்தையும் கையில்வைத்திருக்கின்றது, இஸ்லாம் எனும் இந்த சித்தாந்தம் உலகில் அமுல்படுத்தப்படும்போது. உலக மக்களிடம் இதன் செய்தி சென்றடையும் போது முஸ்லிம் சமூகம்எத்தகைய ஆற்றலை பெறும் என்பதை கடந்த கால வரலாறுகளின் ஆதாரத்தின்வாயிலாக இந்த குöப்பார்கள் நன்கு அறிவார்கள், இதற்கு மிகத் தெளிவானஆதாரம் என்னவென்றால் முதலாளித்துவ சித்தாந்தத்தை உலகம் முழுவதிலும்பிரச்சாரம் செய்யவும் நிலைநிறுத்தவும் அமெரிக்கா பல திட்டமிட்டநடவடிக்கைகளை எடுத்து வருவதோடு கூடவே இஸ்லாத்தை திரித்துக்கூறிபிரச்சாரம் செய்வதற்கும். முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கும்பல திட்டங்களை துவங்கியிருக்கிறது, மேலும் தங்களுடைய முஸ்லிம் நாடுகளின்ஊழல் ஆட்சியாளர்களைக் கொண்டு இஸ்லாத்தின் மறுமலர்ச்சிக்காக பாடுபடும்முஸ்லிம் மீது அடக்குமுறைகளையும் அட்டூழியங்களையும். கொடுமைகளையும்ஏவி விட்டிருக்கிறது, இஸ்லாத்தின் கொள்கைகள் இழித்தும் பழித்தும் கூறுவதற்கும்அதன் விதிமுறைகளை திரித்தும் இட்டுக் கூட்டியும் விளக்குவதற்கும் தங்களுடையகங்காணிகளான இஸ்லாமிய ஆட்சியாளர்களையும் அவர்களின்பரிவாரங்களையும். தோழர்களையும் பயன்படுத்துகிறது.
தங்கள் கடந்தகால வரலாறு நெடுகிலும் முஸ்லிம்கள் அனுபவித்தசொல்லொன்னா துயரங்களையும் ஆபத்துக்களையும் மீறியதாக இன்றுமுஸ்லிம்கள் சந்தித்துள்ள ஆபத்து இருக்கிறது, சிலுவை யுத்தங்கள் முஸ்லிம்களின்ஒரு பகுதிநிலத்தை ஆக்கிரமிப்பு செய்வதற்காக நடத்தப்பட்டது, குöப்பார்களின்சதித்திட்டங்களிருந்து முஸ்லிம்களை காப்பதற்கும். அவர்களைஒற்றுமைபடுத்துவதற்கும். எதிரிகளால் அவர்கள் ஒற்றுமைக்கு குந்தகம்வந்துவிடாமல் அவர்களுக்கு நல் உபதேசம் செய்யவும் அவர்கள் வளங்களும்உடமைகளும் குöப்பார்களால் கொள்ளையிடப்படாமல் தடுப்பதற்கும். அவர்களைதுண்டுதுண்டுகளாக பிரித்து பலஹீனப்படுத்தி குöப்ர் கொள்கைகளையும்ஆட்சிமுறைகளையும் அவர்கள் மீது குöப்பார்கள் திணித்து விடாமல் பார்த்துக்கொள்வதற்கும் பாதுகாப்பு அரணாக இருந்த கிலாöபத் என்னும் இஸ்லாமிய அரசு கி.பி 1924ல் எதிரிகளால் வீழ்த்தப்பட்டது.
எனினும் சிலுவை யுத்தங்களை தொடுத்தவர்களும். கிலாöபத்தைஅழித்தவர்களும் முஸ்லிம்களை அவர்கள் அகீதாவிலிருந்து திருப்புவதை நோக்கமாக கொள்ளவில்லை, ஆகவே சிலுவை யுத்தங்களைதொடுத்தவர்கள் இஸ்லாமிய ராஜ்ய எல்லைக்குள் புகுந்ததும். முஸ்லிம்கள் தங்கள்அகீதாவில் உறுதி உடையவர்களாக ஒன்று திரண்டு போராடி முடிவாக எதிரிகளைவிரட்டியடித் தார்கள், மேலும் கிலாöபத்தை வீழ்த்தப்பட்ட சொற்ப காலத்திலேயேமுஸ்−ம்கள் ஒன்றுபட்டு தங்கள் அகீதாவிற்கு திரும்பி விட்டார்கள், பிறகு ஜீவரத்தம் முஸ்லிம் உம்மாவில் பாய்ந்து ஓட ஆரம்பித்தது, அவர்கள் கிலா öபத்தைமறுபடியும் கட்டமைக்கவும் இஸ்லாத்தின் செய்தியை உலகெங்கிலும் எடுத்துச்செல்லவும் தங்கள் பணியினை துவங்கி விட்டிருந்தார்கள்.
ஆனால் இப்போதுள்ள அமெரிக்காவின் திட்டங்கள் முஸ்லிம்கள் தங்கள்இஸ்லாமிய கொள்கைகளை விட்டுவிட்டு மதசார்பின்மை கொள்கையை தழுவுவதன் மூலம் இஸ்லாத்தையே அழிப்பதை நோக்கமாககொண்டுள்ளன, இந்த கொள்கை மனித வாழ்வியல் விவகாரங்களி−ருந்துமார்க்கத்தை பிரித்துவிட அழைப்பு விடுக்கிறது, மேலும் முஸ்−ம்கள்முதலாளித்துவ கோட்பாட்டை தங்கள் புதிய மார்க்கமாக எடுத்துக் கொண்டுவாழ்வதற்கும் அதன் அடிப்படையில் சிந்திப்பதற்கும் அந்த ஆட்சிமுறையின் கீழ்வாழ்வதற்கும் இதன்மூலம் இஸ்லாமிய நெறிகளை தங்கள் வாழ்விலிருந்து முற்றாகநீக்கிவிடுவதற்கும் பிறகு முஸ்லிம் சமூகத்தில் வணக்கஸ்தலங்களில் செய்யப்படும்சில சம்பிரதாய சடங்குகள் தவிர வேறொன்றும் மிஞ்சாமல் ஆகி விடுவதற்கும்குöப்பார்களின் திட்டமிட்ட சூழ்ச்சி முஸ்−ம் சமூகத்தை சுற்றி வளைத்துள்ளது.
அமெரிக்காவும் மேற்கத்திய நாடுகளும் இஸ்லாமிய சமூகத்தில் புகுத்திலுள்ளமுதலாளித்துவ சித்தாந்தம் மற்றும் அதன் ஆட்சிமுறை மற்றும் அது அழைப்புவிடுக்கும் பல்வேறு குöப்ர் கொள்கைகள் ஆகியவற்றின் உண்மையான நோக்கம்மேலே விவரித்துள்ள இஸ்லாத்தின் வீழ்த்தும் திட்டங்களின் பல்வேறுநிலைகள்தான்.
அருமை இஸ்லாமிய சகோதரர்களே!
õஇந்த பயங்கர நோக்கத்தின் வெளிச்சத்தில் நீங்கள் விழித்துக்கொள்ள வேண்டும்,குöப்பார்களும் அவர்களது அடிவருடிகளும் மேற்கொள்ளும் சதித்திட்டத்தின்பின்னணியிலுள்ள உண்மையான நோக்கத்தின் நீங்கள் உணர வேண்டும், இன்றுநீங்கள் உங்கள் மார்க்கத்தை காத்துக் கொள்வதற்கும். உங்கள் அகீதாவை மீட்டுக்கொள்வதற்கும். ஒரே சமூகமான நீங்கள் உங்களையே காத்துக் கொள்வதற்கும்அழைப்பு விடுக்கப்படுகிறது, ஏனெனில் மக்களிடம் அதன் கோட்பாடு இருக்கும்வரை அந்த சமூகம் வாழ்கிறது, அதன் கோட்பாடுகள் மறையும் போது அந்தசமூகமும் மறைந்து விடுகிறது.
இந்த வேளையில் நீங்கள் சத்தியத்தை அசத்தியத்திலிருந்து பிரித்து தெளிவாகஅறிந்து கொள்ள வேண்டும், வாழ்விற்கும் மரணத்துக்கும் உள்ள வேறுபாட்டைஉணர்ந்து கொள்ள வேண்டும், ஒருபுறம் அசத்தியத்தின் உருவாக அமெரிக்காவும்மேற் கத்திய குöப்பார்களின் அதனுடைய ஆதரவாளர்களான முஸ்லிம்ஆட்சியாளர்களும் அவர்களின் பரிவாரங்களும் அவர்கள் திட்டங்களுக்கு உதவிசெய்யும் அரசியல்வாதிகளும் சிந்தனைவாதிகளும். பொருளாதார நிபுணர்களும்.செய்தி ஊடகங்களின் பிதாமகர்களும். முதலாளித்துவ கலாச்சாரத்தினால்கவர்ச்சியூட்டபட்டவர்களும். அதன் வாழ்வு முறையை பின்பற்றி நெறிதவறியவர்களும். மதசார்பின்மை. ஜனநாயகம். பன்மை வாதம். மனித உரிமை.தாராள வர்த்தக கொள்கை ஆகிய கோஷங்களால் வசீகரிக்கப்பட்டவர்களும். சந்தர்ப்பவாதிகளும். நயவஞ்சகர்களும். உலக ஆதாயவாதிகளும் நிற்கிறார்கள்,மறுபுறம் சத்தியத்தின் ஒளி உருவாக இஸ்லாமிய சத்திய நெறியின் விழித்தெழுந்தஅதன் தவப்புதல்வர்களாக. இஸ்லாத்தையே உயிர்மூச்சாக கொண்டவர்களாக.அதனை விசுவாசித்துள்ள கோடானுகோடி முஸ்லிம்களின் ஒப்பற்ற தளபதியாக.சொர்க்கத்திற்கு பகரமாக தங்கள் இன்னுயிர்களை இறைவனிடம் விற்றவர்களாகஅச்சமின்றி கம்பீரமாக நின்றிருக்கும் அல்லாஹ்(சுபு)வின் பரிசுத்த அடியார்கள்.
முஸ்லிம்களே!
உங்கள் விதி இந்த யுத்தத்தில் முடிவு செய்யப்படும், இந்தயுத்தத்தின் முடிவில் ஒன்று இம்மையிலும் மறுமையிலும் கண்ணியம் அல்லதுஷஹாதத் என்னும் வீரமரணம் அல்லது இம்மையிலும் மறுமையிலும் இழிவு(அல்லாஹ்(சுபு) காப்பாற்றுவானாக) இந்த இரண்டு தீர்வுகள்தான் முஸ்லிம்களுக்குகாத்திருக்கின்றன.
அல்லாஹ்(சுபு)வையும் அவனுடைய தூதர்(ஸல்) அவர்களையும் அவர்கள்கொண்டு வந்த மார்க்கத்தையும் விசுவாசிப்பவர்கள் சத்தியத்தின் பக்கம்அணிவகுத்து நிற்பதற்கு கடமைப்பட்டுள்ளார்கள், இதைத்தவிர அவர்களுக்குவேறுவழி கிடையாது, ஏனெனில் சத்தியத்தை காக்கும் யுத்தத்தில் நடுநிலை என்பதுகிடையவே கிடையாது, மேய்ப்பர் இல்லாத மந்தைகள் போல நீங்கள் இருக்கிறீர்கள்,மரணபயம் உங்களை அச்சுறுத்துகிறது என்பதில் ஐயம் இல்லை, உங்களைபாதுகாப்பதற்கும் துர்பாக்கியத்தி−ருந்து உங்களை மீட்பதற்கும்அல்லாஹ்(சுபு)வுடைய அரசான கிலாöபத் இல்லை, ஆம்õ மந்தையை காக்கும்மேய்ப்பராக உங்களை பாதுகாக்கும் கலீöபா ஒருவரை இஸ்லாம் உங்களுக்காகஆக்கியிருக்கிறது, அல்லாஹ்(சுபு)வின் வேதத்தின் படியும் அவனுடைய தூதர்(ஸல்)சுன்னாவான அவரது வழிமுறையின் படியும் நீங்கள் ஆட்சி செய்யப்படுவதற்காகஅவரிடம் கைலாகு (பையாத்) கொடுக்க நீங்கள் கனிசமான காலத்தைகழித்துவிட்டீர்கள், இது அல்லாஹ்(சுபு)வுக்கு கூறினார்கள், எவர் தனது கழுத்தில்பையாத் இல்லாத நிலையில் மரணம் அடைகிறாரோ அவர் அறியாமை கால(ஜாஹிலியத்) மரணத்தை அடைந்தவர் ஆவார், தீமைகளுக்கும். தீயவைகளுக்கும்எதிராக போராட கலீöபாதான் உங்களை மறுபடியும் ஒற்றுமைப்படுத்தக் கூடியவர்,அல்லாஹ்(சுபு) உங்களுக்கு வடிவமைத்துக் கொடுத்த தனித்தன்மையை அவர்மீட்டுக் கொடுப்பார், மனித சமூகம் கண்ட மிகச் சிறந்த சமுதாயமாக நீங்கள்இருப்பீர்கள்.
உண்மையில் நீங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு மெய்யான விசுவாசத்துடன் உங்கள்நோக்கங்களில் உறுதியாகவும் தெளிவாகவும் இருப்பீர்களானால். நீங்கள் வாழும்இந்த துயரமான பாவமான பாவமான வாழ்விலிருந்து உங்களை நீங்களே மீட்டுக்கொள்ளும் திறன் உங்களுக்கு வந்துவிடும், உங்களை வழிகேட்டுக்கு அழைக்கும்குöப்பார்களும் அவர்களுடைய சகாக்களும் இதை நன்கு அறிவார்கள், இதன்பொருட்டே குöப்பார்களின் நேசகர்களான உங்களது ஆட்சியாளர்கள் சத்தியத்தைநீங்கள் முழங்கி டாமல் குöப்பார்களின் குöப்ருக்கு நீங்கள் அடிபணிந்து போகும்வண்ணம் உங்களைச் சுற்றி அச்சம். அச்சுறுத்தல். கொடுங்கோன்மை. அநீதி ஆகியசூழ்நிலைகளை உருவாக்குகிறார்கள்.
ஆனால் அல்லாஹ்(சுபு) உங்களை அவனுக்கு மட்டுமே அஞ்ச வேண்டும் என்றுகட்டளை இடுகிறான்,
நீங்கள் உண்மை விசுவாசிகளாக இருந்தால் அவர்களுக்கு அஞ்சக்கூடாது.எனக்கே அஞ்ச வேண்டும். (குர்ஆன் 3:175)
நீங்கள் அல்லாஹ்(சுபு)வுக்கு மட்டுமே அஞ்சினீர்களானால் அவன் வாக்களித்தவெற்றியை உங்களுக்கு நல்குவான்,
அல்லாஹ்(சுபு)வின் காரியத்தில் நீங்கள் உறுதுணையாக இருந்தால் அவன்உங்களுக்கு உதவி செய்வான். இன்னும் உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவான்.(குர்ஆன் 47:7)
அல்லாஹ்(சுபு) ஒருபோதும் தனது வாக்குறுதியை முறிக்க மாட்டான், ஆகவேமுதலாளித்துவ சித்தாந்தத்தையும். அதன் ஆட்சிமுறையையும் அதன்கோஷங்களையும். அதன் கொள்கைகளையும். அதன் மீது கட்டமைக்கப்பட்டஅனைத்து விஷயங்களையும் முற்றாக நிராகரிப்பதைத் தவிர வேறொன்றும்இப்போது உங்கள் முன் இல்லை, அதனை நிலைக்க வைப்பதற்கு முயற்சிக்கும்அனைவரையும் நீங்கள் முழு பலம் கொண்டு எதிர்க்க வேண்டும், நீங்கள்உண்மையாக அல்லாஹ்(சுபு)வுக்கு கீழ்படிகிறவர்களாக இருந்தால். அவனுடையதூதர்(ஸல்) வழிமுறையை உண்மையாக பின்பற்றுகிறவர்களாக இருந்தால்.அவனுடைய தீனை காக்கும் பொருட்டு உண்மையாகவும். உறுதியாகவும்.விழிப்போடும் கடும்பணி மேற்கொண்டு கிலாöபத் என்னும் இஸ்லாமிய அரசைநிறுவ வேண்டும், அதுதான் குöப்ரிலிருந்தும். பிரிவினையிலிருந்தும். தீங்கிலிருந்தும்.தீயவைகளிலிருந்தும் உங்களை காக்கும் கேடயமாகும்.
முஸ்லிம்களே!
அல்லாஹ்(சுபு)வின் கட்டளைக்கு கீழ்படிய உங்களை நாங்கள்அழைக்கின்றோம். பதிலளியுங்கள்!
விசுவாசிகளே! உங்களுக்கு வாழ்வளிப்பதை (சத்தியத்தை) நோக்கி நீங்கள்அழைக்கப்பட்டால், அல்லாஹ்(சுபு)வுக்கும் அவனுடைய தூதருக்கும்(ஸல்)நீங்கள் பதிலளியுங்கள். (குர்ஆன்8:24)
By
The New College Student.
No comments:
Post a Comment