Tuesday, 11 October 2011

international news

சீனாவில் 7000 அப்பாவி முஸ்லிம்கள் சிறையிலடைப்பு

அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதல்களைக் காரணம் காட்டி சீனா, ஷின்ஜியாங் பகுதியில் ஏழாயிரம் அப்பாவிப் பொதுமக்களை சீன அரசாங்கம் சிறைப்பிடித்துள்ளதாக "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.

பெரும்பான்மையாக முஸ்லிம்களைக் கொண்ட ஷின்ஜியாங் எனப்படும் இப்பிரதேசம். சீனாவின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு உய்குர் முஸ்லிகள் வாழ்கின்றனர்.
பின்னர், சீன அரசாங்கத்தினால் ஹான் சீன இனத்தவர் இங்கு அதிகளவில் குடியேற்றப்பட்டனர். இதனால் உய்குர் முஸ்லிம்களுக்கும் ஹான் சீன இனத்தவருக்கும் இடையில் அடிக்கடி மோதல் ஏற்பட்டது.
அத்தோடு உய்குர் இன முஸ்லிம்கள் தாம் வாழும் ஷின்ஜியாங் பகுதியை தனி நாடாக பிரிக்க வேண்டும் எனக் கோரி "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்கம்" என்ற அமைப்பும் துவக்கப்பட்டது. சீனா இதனை பயங்கரவாத அமைப்பு என தடை செய்துள்ளது.
இந்நிலையில் ஜேர்மனியில் செயல்பட்டு வரும் "உலக உய்குர் காங்கிரஸ்" அமைப்பின் தலைவர் ரெபியா காதீர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: உய்குர் இனத்தவர் அமைதியான முறையில் தமக்குள் நடக்கும் அரசியல், சமூக, கலாசார நிகழ்வுகளைக் காரணம் காட்டி இரட்டைக் கோபுர தகர்ப்ப்புக்குக் காரணம் எனக் கூறி அடக்கி வருகிறது என்றார்.
பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று கூறி கடந்த 10 ஆண்டுகளாக உய்குர் இனத்தவரின் கோரிக்கைகளை சீன அரசு ஏற்க மறுத்து வருகிறது. சீனாவில் அரசுக்கு எதிராக நாளுக்கு நாள் போராட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் உய்குர் போராட்டங்களுக்கு மட்டும் அரசு "பயங்கரவாதம்" என முத்திரை குத்தியுள்ளது.

குரூப்-2 தேர்வு முடிவு 7ம் தேதி வெளியீடு!!!



Tamilnadu civil services group 2 exam resultsகுரூப் 2 தேர்வு முடிவுகள் வரும் 7ம் தேதி வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணைச் செயலாளர் மைக்கேல் ஜெரார்டு நேற்று வெளியிட்ட அறிக்கை: டிஎன்பிஎஸ்சி சார்பில் ஒருங்கிணைந்த சார்நிலை பணி (குருப் 2) எழுத்து தேர்வு உதவி தொழிலாளர் நல அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், தணிக்கை ஆய்வாளர், வருவாய்த் துறையில் உதவியாளர் உட்பட, பல்வேறு துறைகளில் 1,628 குரூப்-2 பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, 2010ம் ஆண்டு ஏப்ரல் 11ம் தேதி நடந்தது. அதைத் தொடர்ந்து, கடந்த பிப்ரவரி 2 முதல் மார்ச் 28ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடந்தது. எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் பட்டியல் ஏப்ரல் 1ம் தேதி வெளியிடப்பட்டது. இதன் இறுதி தேர்வுப் பட்டியல், 7ம் தேதி வெளியிடப்படும் என, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் செல்லமுத்து அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment