Saturday, 10 December 2011


ஹாவர்டு நடவடிக்கை: மறு பரிசீலனை செய்ய சு.சாமி வேண்டுகோள்

  su.samy
புதுடெல்லி:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கட்டுரை எழுதிய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமியை ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளியேற்றியிருந்தது.
ஒரு சிறுபான்மை சமூகத்திடம் பகை உணர்வை வெளிப்படுத்தும் நபரை தங்களிடன் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவில் இடம்பெற
செய்ய விருப்பமில்லை என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பயிற்றுவித்த இரண்டு பொருளாதார பாடங்களை இவ்வருட கோடை கால பாடத்திட்டத்திலிருந்து நீக்க பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
சு.சாமியின் கட்டுரை, கருத்து சுதந்திரம் அல்ல.மாறாக, துவேசத்தின் பிரகடனம் ஆகும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 1965-ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி பட்டம் பெற்ற சு.சாமி கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்ற துவங்கினார்.
ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை குறித்து சு.சாமி பதிலளிக்கையில், “என்னை நீக்கியது அநீதியான நடவடிக்கை ஆகும். எனக்கு நோட்டீஸ் அளிக்கவோ, எனது கருத்துக்களை கேட்கவோ செய்யாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய பல்கலைக்கழகம் தயாராகவேண்டும்” என கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதிய சு.சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment