7 Aug 2012

கெய்ரோ:சியோனிஸ்டுகளின் கடுமையான தடையினால் துயரத்தை அனுபவித்து வரும் ஃபலஸ்தீன மக்களை மேலும் துயரத்தில் ஆழ்த்த இஸ்லாத்தின் எதிரிகள் புதிய தந்திரங்களை கையாளத் துவங்கியுள்ளனர்.
எகிப்தின் ஸினாய் மாகாணத்தில் இஸ்ரேல் எல்லையில் நடத்தப்பட்ட தாக்குதல் இந்த சதித்திட்டத்தின் ஒரு பகுதியாகும். ரஃபா எல்லைக்கு அருகில் நடந்த தாக்குதலில் 16 பேர் கொல்லப்பட்டனர். மேலும் பலர் காயமுற்றனர். எகிப்து ராணுவம் மற்றும் பாதுகாப்பு படையினர் மீது இத்தாக்குதல் நடத்தப்பட்டது.
தாக்குதலின் பின்னணியில் யார்? என்பது இதுவரை தெளிவாகவில்லை. ஆனால், ராணுவம் ஃபலஸ்தீன் மக்கள் மீது குற்றம் சாட்டுகின்றது. அதேவேளையில் ஃபலஸ்தீன் மக்கள் இக்குற்றச்சாட்டை வன்மையாக மறுத்துள்ளனர். தாக்குதலுக்கு யார்? காரணம் என்பது குறித்து விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால், இச்சம்பவத்தின் பின்னணியில் பல மர்மங்கள் நீடிக்கின்றன.
ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா, ஹமாஸ் தலைவர் காலித் மிஷ்அல் உள்ளிட்டோர் எகிப்துக்கு சென்று அதிபர் முஹம்மது முர்ஸியை சந்தித்த பிறகு இரு நாடுகள் இடையேயான உறவு மேலும் வலுப்பட்டது. இதனால் சியோனிஸ்டுகளின் தடையில் இருந்து விடுதலைப்பெற ரஃபா எல்லை திறக்கப்பட்டது. ஃபலஸ்தீன் மக்களும் இரு நாடுகளின் அரசுகளும் இந்நடவடிக்கையை மிகவும் சிறந்த காலடிச் சுவடாக கருதின. ரஃபா எல்லை வழியாக ஃபலஸ்தீனுக்கு எகிப்தில் இருந்து பொருட்கள் கொண்டு செல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு விலைகள் குறைந்தன. உணவு பற்றாக் குறையும் சற்று தணிந்தது. இது ஃபலஸ்தீன் மக்களுக்கு ஆறுதலை தந்தது.
பிராந்தியத்தில் இந்த அமைதி சூழலால் பொறாமையும் எரிச்சலும் அடைந்தவர்கள் சியோனிஸ்டுகளும் அவர்களின் கூட்டாளிகள் மட்டுமே. இவர்களின் சதித் திட்டமே ஸினாய் தாக்குதலின் மூலம் நிதர்சனமானது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
ஸினாய் தாக்குதல் நிகழ்ந்த உடனேயே, இத்தாக்குதலின் பின்னணியில் ஃபலஸ்தீனர்கள் என்றும், ரஃபா எல்லையை திறந்து விட்டதுதான் இத்தாக்குதலுக்கு காரணம் என்று சில ராணுவ வட்டாரங்கள் குற்றம் சாட்டின. இச்சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் சதித் திட்டத்தையே இக்குற்றச்சாட்டு எடுத்தியம்புகிறது.
எகிப்தின் மீது அழுத்தம் கொடுத்து மீண்டும் ரஃபா எல்லையை மூடி மீண்டும் ஃபலஸ்தீன் மக்களை துயருறச் செய்வதே யூத சியோனிஸ்டுகளின் சதித்திட்டம்
No comments:
Post a Comment