இந்தியாவில் பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை – உச்சநீதிமன்ற நீதிபதி
8 Jan 2012
சென்னை:இந்தியா விடுதலை அடைந்து 65 ஆண்டுகள் கழிந்த பிறகும், பெண்களுக்கு இன்னும் முழுமையான சுதந்திரம் கிடைக்கவில்லை என உச்சநீதிமன்ற நீதிபதி ரஞ்சனா பி.தேசாய் தெரிவித்துள்ளார்.
அகில இந்திய பெண் வழக்குரைஞர்கள் கூட்டமைப்பின் தேசிய மாநாடு சென்னையில் சனிக்கிழமை தொடங்கியது. கூட்டமைப்பின் தலைவர் கே.சாந்தகுமாரி தலைமையில் நடைபெற்ற இம்மாநாட்டில், நீதிபதி ரஞ்சனா பேசியதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனினும், பெண்களின் நிலையில் இப்போதும் பெரிய அளவில் முன்னேற்றம் இல்லை. நாட்டின் மிகப் பெரும்பாலான பெண்கள் மனிதத் தன்மையோடு நடத்தப்படவில்லை.
உடல் மற்றும் மன ரீதியான வன்முறை பெண்களை மிகவும் பாதிக்கச் செய்கிறது. பெண்கள் மீதான இந்த வன்முறை என்பது பாகுபடின்றி எல்லா மதங்கள், இனங்கள், ஜாதிகளிலும் நிலவுகிறது.
இத்தகைய மோசமான சூழ்நிலையில், பெண்களுக்கான நீதியைப் பெற்றுத் தருவதில் பெண் வழக்குரைஞர்களின் பங்கு மிகவும் முக்கியமானதாகும். பெண்களைப் பாதுகாக்கும் நோக்கில் நடைமுறையில் இருக்கும் சட்டங்களை பெண் வழக்குரைஞர்கள் முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் என்றார் ரஞ்சனா.
இம்மாநாட்டை உச்சநீதிமன்ற நீதிபதி பி.சதாசிவம் துவக்கி வைத்தார்.
மாநாட்டில் சிறப்புரை ஆற்றிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் கூறியதாவது: “பெண்களுக்கு வாக்குரிமை அளிப்பதும், சட்டப்பேரவை, நாடாளுமன்றங்களில் அவர்களுக்கு கொஞ்சம் பிரநிதித்துவம் அளிப்பதும் மட்டும் பெண்களுக்கான அதிகாரங்களை தந்து விடாது. மாறாக, பெண்கள் அனைவருக்கும் அவர்கள் வாழும் பகுதிகளிலும், அவர்கள் சார்ந்த துறைகளிலும் சம வாய்ப்பு கிடைக்கச்
No comments:
Post a Comment