Saturday, 19 November 2011


எடியூரப்பா மீது மேலும் ஒரு புகார்

yed
பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் நில பேர ஊழல் தொடர்பாக பா.ஜ.கவின் முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் வி.சோமண்ணா மீது லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் மேலும் ஒரு வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
நாகதேவன் ஹள்ளியில் அரசு கைப்பற்றிய நிலத்தை எடியூரப்பா முதல்வராக பதவி வகிக்கும் வேளையில் சோமண்ணாவின் மனைவியின் பெயரில் நிலவிடுவிப்பு செய்யப்பட்டுள்ளது என்பது புகார் ஆகும். இதன் காரணமாக மாநில கருவூலத்திற்கு எட்டுகோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என புகாரில் கூறப்பட்டுள்ளது. ரவி கிருஷ்ணா என்பவர்தாம் புகாரை அளித்தவர்.
சோமண்ணாவின் மனைவி ஸைலஜா எதிர் தரப்பு ஆவார். 2007-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறிய சோமண்ணா பா.ஜ.கவில் இணைந்தார்.

No comments:

Post a Comment