Friday, 4 November 2011

மானிட அபிவிருத்தியில் தென்னாசியாவிலேயே இலங்கை முதலிடம்

ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தினால்(யூஎன்டிபிநேற்று வெளியிடப்பட்ட மானிட அபிவிருத்திசுட்டெண் அறிக்கையின்படி மானிட அபிவிருத்தியில்தென்னாசியாவிலேயே இலங்கை முதல் இடத்தைவகிக்கின்றது.
2011 ஆம் ஆண்டுக்கான மானிட அபிவிருத்தி அறிக்கையில்இலங்கைப் பிரஜைகளின் வாழ்க்கைத் தரத்திற்காக நடுத்தரமானுட அபிவிருத்திப் பிரிவில் இலங்கைக்கு 97ஆவது இடம்வழங்கப்பட்டுள்ளதுஇலங்கையின் மானிட அபிவிருத்திச்சுட்டெண் 2010 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகின்ற போது 0.658 இல்இருந்து 2011 ஆம் ஆண்டு 0.691 வரையில் குறிப்பிடத்தக்களவு அதி;கரித்துள்ளதுஇந்த அதிகரிப்புகல்வியறிவுவாழ்நாள் எதிர்பார்ப்பு போன்ற முக்கிய சமூக குறிகாட்டிகளின் விளைவாகவேஏற்பட்டுள்ளது.

மானிட அபிவிருத்தியில் இந்தியா 134 ஆவது இடத்தையும்பாக்கிஸ்தான் 145 ஆவது இடத்தையும்,நேபாளம் 157 ஆவது இடத்தையும் வகிக்கின்றனபிராந்தியத்திலேயே ஆகக்குறைந்த இடத்தைவகிக்கும் ஆப்கானிஸ்தான் 172 ஆவது இடம் வகிப்பதோடு பங்களதேஷ் 146 ஆவது இடத்தைவகிக்கின்றது.

2011 ஆம் ஆண்டின் மானிட அபிவிருத்தி சுட்டெண்ணில் நோர்வேஅவுஸ்திரேலியா மற்றும்நெதர்லாந்து ஆகிய நாடுகள் முதல் இடங்களை வகிக்கும் அதேநேரம் கொங்கோ குடியரசுநைகர்மற்றும் புரூண்டி ஆகிய நாடுகள் ஆகக் குறைந்த இடங்களை வகிக்கின்றன.

மானிட அபிவிருத்திச் சுட்டெண் உலக நாடுகளின் அபிவிருத்தியை தரப்படுத்துவதற்கான ஒருஅளவீட்டு முறையாகும்இது ஒரு நாட்டின் எழுத்தறிவுவாழ்நாள் எதிர்பார்ப்புகல்வி,வாழ்க்கைத்தரம் என்ற அம்சங்களை வைத்து இந்த அபிவிருத்தி கணிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment