19 Nov 2011

அஹ்மதாபாத்:இஷ்ரத் ஜஹான் உள்பட நான்கு அப்பாவிகளை போலி என்கவுண்டரில் கொலைச்செய்த வழக்கை விசாரணை நடத்திய சிறப்பு புலனாய்வு குழு(எஸ்.ஐ.டி) குஜராத் உயர்நீதிமன்றத்தில் இறுதி அறிக்கையை சமர்ப்பித்தது.
குஜராத் போலீஸ் நடத்திய என்கவுண்டர் போலியானதா? உண்மையா? என்பது குறித்து விசாரணை நடத்தி இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க கடந்த அக்டோபர் மாதம் 7-ஆம் தேதி நீதிபதிகளான ஜயந்த் பட்டேல், அபிலாஷகுமாரி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் எஸ்.ஐ.டிக்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தரவின்படி அறிக்கையை சமர்ப்பித்ததாக கூறும் எஸ்.ஐ.டி அதிகாரி அது குறித்து மேலும் தெரிவிக்க இயலாது என கூறினார்.
2004-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி அஹ்மதாபாத் க்ரைம் ப்ராஞ்சின் தலைமையில் கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான், ஜாவேத் ஷேக், அம்ஜத் அலி ராணா, ஷிஷான் ஜோஹர் ஆகியோர் ஆகியோர் அநியாயமாக சுட்டுக் கொல்லப்பட்டனர். குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் மோடியை கொலைச்செய்ய வந்தவர்கள் என போலீஸ் பொய் கூறியது.
இஷ்ரத்தின் தாயார், ஜாவேத் ஷேக்கின் தந்தை ஆகியோர் என்கவுண்டர் குறித்து சந்தேகம் இருப்பதாக குற்றம் சாட்டி உயர்நீதிமன்றத்தை அணுகியதை தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவை நீதிமன்றம் நியமித்து உத்தரவிட்டது.
கடந்த அக்டோபர் மாதம் ஏழாம் தேதி நடந்த விசாரணையில் விசாரணையின் முன்னேற்றம் குறித்து எஸ்.ஐ.டியிடம் கேட்டது. என்கவுண்டர் போலி என்பது நிரூபணமானால் அதற்கு உகந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும் என நீதிபதி ஜயந்த் பட்டேல் தெரிவித்திருந்தார்.
No comments:
Post a Comment