Thursday, 10 November 2011

ரஷ்யா:ஸயீத் நூர்ஸியின் நூல்களை வாசித்ததற்கு சிறைத்தண்டனை


10 Nov 2011 மாஸ்கோ:துருக்கியை சார்ந்த பிரபல இஸ்லாமிய மார்க்க அறிஞர் பதியுஸ்ஸமான் ஸய்யித் நூர்ஸியின் பிரபல திருக்குர்ஆன் விரிவுரையான ரிஸாலே நூர் வாசித்ததற்கும், அதனை பாதுகாத்ததற்கும் ரஷ்யாவில் ஒரு நீதிமன்றம் ஆறு முஸ்லிம்களுக்கு சிறைத்தண்டனை வழங்கியுள்ளது.

நூர்ஸியின் ரஷ்ய மொழியிலான நூல்கள் தீவிரவாத செயல்களை தூண்டுகிறது என குற்றம் சாட்டி ரஷ்ய நீதிமன்றங்கள் தடை விதித்துள்ளன. நிஷ்னி நோவகரோத் நீதிமன்றம் ஆறுபேருக்கு தண்டனை வழங்கியது. அவர்கள் நூர்ஸியின் கொள்கைகளை பிரச்சாரம் செய்யும் குழுவில் உறுப்பினர்கள் என நீதிமன்றம் குற்றம் சாட்டியது.
ரஷ்யாவில் பல இடங்களிலும் அமைதியான முறையில் இஸ்லாமிய மார்க்க பணிகளை நடத்துவதை தடுக்க நீதிமன்றங்கள் இத்தகைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.

தாடி வைத்திருந்ததால் காஷ்மீரி மாணவரிடம் ஆறுமணி நீரம் விசாரணை 

 

போபால்:காஷ்மீரி மாணவர் ஒருவர் தாடி வைத்திருந்த காரணத்தால் பல்கலைகழக ஹாஸ்டலில் சக மாணவர்களால் வேதனை செய்யப்பட்டதுடன் திருட்டு மற்றும் தீவிரவாதம் என்ற பெயரில் ஆறு மணி நேரம் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
குர்ஷீத் அஹ்மத் வணி என்ற கஷ்மீரைச் சேர்ந்த மாணவர் போபால் பர்கதுல்ல பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்.சி முதலாம் ஆண்டு பயின்று வருகிறார். அவர் தாடி வைத்திருந்ததின் காரணமாக அவருடன் படிக்கும் சக மாணவர்கள் பல்கலைக்கழக விடுதியில் தொடர்ந்து கேலி செய்து அவரை துன்புரித்தியுள்ளனர். எனவே குர்ஷீத் விடுதியில் தங்க மனம் இல்லாமல் விடுதியை காலி செய்துவிட்டு வெளியில் சென்றுள்ளார்.
விடுதியில் கட்டியிருந்த பணத்தை திரும்ப பெறுவதற்காக அவர் காசோலையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக வங்கி சென்றுள்ளார். சென்ற மாதம் ஆந்திர வங்கியில் திருட்டு நடந்துள்ளமையால் போலீசாரால் வரையப்பட்டிருந்த படமும் இவரது தாடியும் ஒரே மாதிரியாக இருக்கிறது என்று வங்கியின் காவலாளி போலீஸிற்க்கு தகவல் கொடுத்துள்ளார்.
எனவே போலீஸ் அவரை பக் செவனியா காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று ஆறு மணி நேரம் துருவி துருவி விசாரித்துள்ளனர். குர்ஷீத் துன்புறுத்தப் பட்டிருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதுப் பற்றி காவல்துறை அதிகாரி எ.பி.சிங் கூறுகையில் சந்தேகப்படும் படி குர்ஷீத் இருந்ததால் விசாரணை செய்தோம் பிறகு அவர் அப்பாவி என்று தெரிந்ததால் விடுதலை செய்து விட்டோம் என்று கூறியுள்ளார். மேலும் குர்ஷீத் துன்புறுத்தப் பட்டாரா என்று கேட்டதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
போலீஸ் ஆறு மணி நேரம் விசாரித்ததில் குர்ஷீத் கடுமையான பயத்தில் உள்ளார். மேலும் தன்னை சக மாணவர்கள் தாடி வைத்திருப்பதற்காக கேலி செய்வதால் தான் விடுதியில் தங்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 

ஆசியா முழுவதும் உளவுத் துறையை பரப்பி வருகிறது இஸ்ரேல் 

mostofi20111107193557920 

தெஹ்ரான்: இஸ்ரேலிய உளவு அமைப்பான மொசாத் அதன் செயல்பாட்டு மற்றும் உளவு மையங்களை பல ஆசிய நாடுகளில் பரப்பி வருவதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையானது இஸ்ரேலில் உள்ள டெல் அவிவின் நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கப் பெற்றது எனவும், ஈரானின் தொடர் தாக்குதலுக்கு பழி வாங்கும் வண்ணமாகவும், மேலும் ஈரான் இஸ்ரேலின் சியோனிச கட்சியின் சில பயங்கரவாதிகளை கைது செய்த பின்னருமே  இந்த முடிவு மேற்க் கொள்ளப்பட்டதாக பார் எனும் ஊடகம் தெரிவித்துள்ளது.
இதனை நிருபிக்கும் வண்ணாமாக கடந்த ஜனவரி மாதம் 2010- ஆம் ஆண்டு தெஹ்ரான் பல்கலைகழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய மசௌத் அலி முஹம்மதி என்பவரை அவரது சொந்த ஊரான வடக்கு தெஹ்ரானில் வைத்து அலி ஜமாலி பாசி என்பவர் கொலை செய்த வழக்கில், ஈரான் நீதிமன்றத்தில் அலி ஜமாலி ஆஜர் படுத்தப்பட்ட போது, இவர் பல முறை துருக்கி சென்று மொசாத் உளவு துறையை சந்தித்தது வெட்ட வெளிச்சமாக தெரிய வந்துள்ளது.
இதனால் இஸ்ரேல், அஜர்பைஜான், துர்க்மெனிஸ்தான் மற்றும் ஜார்ஜியாவில் உள்ள தனது உளவு துறையை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. மேலும் துர்க்மெனிஸ்தானில் உள்ள இஸ்ரேலிய தூதரகம் அமெரிக்காவின் வற்புறுத்தலால் திறக்கப்பட்டது எனவும், அதனை இஸ்ரேல் டெல் அவிவின் உளவு துறை மையமாக பயன்படுத்தப்பட்டு வருவதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இஸ்ரேல் உளவு துறையின் உண்மை முகத்தை அறியாத தாய்லாந்து, இந்தியா, அர்மேனியா மற்றும் மலேசியாவின் அரசாங்கங்களே இஸ்ரேலின் உளவு துறையை வலுவூட்ட காரணமாக அமைந்து வருகிறது. மேலும் இந்த உளவு மையமானது ஈரானில் மட்டுமல்லாது சிரியா, ஈராக், சவூதி அரேபியா, எகிப்து மற்றும் துனிசியாவிலும் டெல் அவிவ் தங்களது குறியை வைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.
மேலும் இதற்கு நிபுணர்கள் தெரிவிக்கும் கருத்து, மத்திய கிழக்கு மற்றும் வட ஆப்ரிக்காவில் ஏற்பட்ட இஸ்லாமிய விழிப்புணர்வு மற்றும் மறு சீரமைப்பே இதற்கு பின்னால் உள்ள காரணம் என்று தெரிவித்துள்ளனர்.

இஸ்ரேல் குண்டுவீச்சில் இரண்டு ஃபலஸ்தீனர்கள் படுகொலை 

pa2 

காஸ்ஸா:ஃபலஸ்தீனின் காஸ்ஸாவில் இஸ்ரேலின் அக்கிரமமான தடையினால் அவதியுறும் மக்கள் மீது இஸ்ரேல் தொடர்ந்து அடாவடி தாக்குதல்களை நடத்திவருகிறது. காஸ்ஸாவின் தெற்கு பகுதியில் உள்ள கான் யூனுஸில் சனிக்கிழமை இரவு நடந்த தாக்குதலில் 2 ஃபலஸ்தீன்  முஸ்லிம்கள் படுகொலைச்செய்யப்பட்டனர். இப்பகுதியில் கடுமையான தாக்குதல்களை நடத்திவிட்டு இஸ்ரேல் போர் விமானங்கள் திரும்பிச்சென்றன.
பைத்துல் லஹியா கிராமத்தில் ஆக்கிரமித்து குடியிருப்புகளை கட்டியிருக்கும் யூதர்கள் ஃபலஸ்தீன மக்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு ராணுவத்தை அழைத்துள்ளனர். ஃபலஸ்தீன் போராளிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து போர் விமானங்கள் திரும்பிச்சென்றன. கடந்த சனிக்கிழமை முதல் இஸ்ரேல் நடத்திவரும் அக்கிரம தாக்குதல்களில் இதுவரை 17 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
ஐ.நாவின் கலாச்சார அமைப்பான யுனெஸ்கோவில் ஃபலஸ்தீனுக்கு முழுமையான உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை தொடர்ந்து இஸ்ரேல் வெறித்தனமாக ஃபலஸ்தீன் மீது தாக்குதல்களை தீவிரப்படுத்திவருகிறது. யுனெஸ்கோவிற்கான நிதியை அமெரிக்கா, கனடா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் நிறுத்திவிட்டன. சில தினங்களுக்கு முன்பு காஸ்ஸாவிற்கு நிவாரணப்பொருட்களுடன் வந்துக்கொண்டிருந்த உதவி கப்பல்களை இஸ்ரேல் தடுத்தி நிறுத்தியிருந்தது.



No comments:

Post a Comment