
புதுடெல்லி:ஜம்மு-கஷ்மீரில் ஜுவைனல்(சிறுவர் சீர்திருத்த) நீதிமன்றங்கள் விசாரணை இன்றி சிறுவர்களை காவலில் வைப்பதாக மனித உரிமை அமைப்பான ஏசியன் செண்டர் ஃபார் ஹியூமன் ரைட்ஸின் உண்மை கண்டறியும் அறிக்கை கூறுகிறது.
ஜம்மு கஷ்மீரில் ஜுவைனல் அமைப்பு சீர்குலைந்துள்ளதாக கூறும் அறிக்கையை தொடர்ந்து ஸ்ரீநகர், புத்காம், ஷோபியான், புல்வாமா, இஸ்லாமாபாத், குல்காம், கந்தேர்பல், ஜம்மு ஆகிய மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு நடத்திய பிறகு மனித உரிமை அமைப்பு அறிக்கையை தயார் செய்தது.
சிறுமிகளை அடைப்பதற்கு போதிய இடவசதி சிறுவர் சீர்திருத்த பள்ளிகளில் இல்லாததால் அவர்களை போலீஸ் லாக்-அப்புகள் மற்றும் சிறைகளுக்கு அனுப்புவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
ஆர்.எஸ் புராவில் விசாரணை இல்லாமல் சிறுவர்கள் சிறார் சீர்திருத்த பள்ளிகளில் தங்கவைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.
கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் செப்டம்பர் மாதம் வரை ஜம்மு-கஷ்மீரில் நடந்த போராட்டத்தின் போது பொது பாதுகாப்பு சட்டத்தின் போர்வையில் கைதுச் செய்யப்பட்ட சிறுவர்களை வயதுக்கு வந்த நபர்களுடன் லாக்-அப்புகளிலும், சிறையிலும் அடைத்து சாதாரண நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தி விசாரணை செய்துள்ளதாக மனித உரிமை அமைப்பின் அறிக்கை கூறுகிறது.
ஜம்மு-கஷ்மீரில் சிறுவர்-சிறுமிகளுக்கு நீதி மறுக்கப்படுவதாகவும், ஜுவைனல் ஜஸ்டிஸ் சட்டம் 1997 ஆம் ஆண்டு அடிப்படையிலான உரிமைகள் மறுக்கப்படுகிறது என அவ்வறிக்கை கூறுகிறது.
No comments:
Post a Comment