Friday, 4 November 2011

மோத்தி மஸ்ஜித் ஓவியம் 31 லட்சம் டாலருக்கு விலைபோனது


Moti_masjid_190
வாஷிங்டன்:ரஷ்யாவின் பிரபல ஓவியர் வாஸிலி வாஸிலியேவிச் வரைந்த டெல்லி மோத்தி மஸ்ஜிதின் பிரபலமான பிரம்மாண்ட ஓவியம் 31 லட்சம் டாலருக்கு ஏலத்தில் விற்றது.ஏறத்தாழ 13 அடி உயரமும், 16 அடிவீதியும் கொண்ட இந்த ஓவியம் பிரபல ஏல நிறுவனமான ஸோதபி விற்பனைச்செய்துள்ளது.
போஸ்டனில் ஃபைன் ஆர்ட்ஸ் அருங்காட்சியகம் நிதியை திரட்ட ஓவியத்தை விற்க ஏற்பாடுச்செய்தது.மஸ்ஜிதில் தொழுகை நடத்துபவர்களை வரைந்த ஓவியம் வாஸிலியேவிச்சின் புகழ்பெற்ற கலை படைப்புகளில் ஒன்றாகும்.
19-ஆம் நூற்றாண்டில் ரஷ்யாவில் மிகவும் புகழ்பெற்ற கலைஞராக விளங்கினார் வாஸிலியேவிச்.1847-ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வருகைத்தந்த வாஸிலியேவிச் மோத்தி மஸ்ஜிதை தூரிகையால் வரைந்தார்.

No comments:

Post a Comment