Saturday, 10 December 2011

முஸ்லிம் சமூகத்தின் வறுமையும் பொருளாதார நிலையும்


Muslim Poor Man ஆய்வுக்கான அவசியம்
சிராஜ் மஷ்ஹூர்
கொழும்பை அண்மித்துள்ள முஸ்லிம் பாடசாலை ஒன்றிற்கு உதவி செய்வதற்காக சிலர் சென்றிருந்தனர். பின்தங்கிய பாடசாலை ஆதலால் மாணவர்களை கல்வி ரீதியாக முன்னேற்ற வேண்டும் என்பது அவர்களது மன விருப்பம். மாணவ, மாணவியரைப் பாராட்டும் வகையில் பரிசளிக்க எண்ணிய அவர்கள், உங்களுக்கு என்ன பரிசு வேண்டும் என்று அவர்களிடம் கேட்டனர்.
அதற்கு "சோறு" என வளர்ந்த மாணவி ஒருத்தி பதிலளித்த போது, உதவி செய்யச் சென்றோர் ஒரு கணம் அதிர்ந்து விட்டனர். நிலமையைப் புரிந்துகொண்ட அவர்களது கண்களிலிருந்து கண்ணீர்த் துளிகள் வழிந்தோடத் தொடங்கின. ஒருவேளைக்கேனும் சோறு உண்ண முடியாமல் தவிக்கும் நமது சமூகத்தின் அவல நிலை இது. இன்றாவது சோறு கிடைக்காதா என்ற ஏக்கம் தான் அந்த மாணவியின் பதிலில் வெளிப்பட்டது.
இதேபோல் புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய சகோதரி ஒருத்தி வீடுகளுக்குச் சென்று உதவி ஒத்தாசைகளைச் செய்து சம்பாதிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டாள். இத்தனைக்கும் அவள் மணமானவள்தான். அவளது கணவனோ போதைப்பொருள் வியாபாரி. பொலிஸாரிடம் சிக்குண்ட அவன் சிறைக் கம்பிகளை எண்ணியபோது இவளால் என்ன செய்ய முடியும்?
ஒருவாறாக தண்டனை முடிந்து கணவன் தங்குமிடத்திற்குத் திரும்பினான். அவர்கள் தங்குவதற்கென, தெரிந்தவர்கள் மன மிரங்கி தமது வீட்டில் ஒதுக்கமாகவுள்ள ஒரு சிறு பகுதியை வழங்கியிருந்தனர். தங்குமிடம் வந்து சேர்ந்த கணவன், ஆதரவளித்த வீட்டு உரிமையாளர்களின் மோட்டார் சைக்கிளையே திருடி விற்றுவிட்டான். அதற்கு மேலும் அவர்கள் பொறுப்பார்களா? வீட்டை விட்டே அவர்களை வெளியேற்றி விட்டார்கள்.
இந்த அபலைப் பெண் என்ன செய்வாள்? கணவனோ குடும்பத்தைக் கவனிக்கும் நிலையில் இல்லை. இத்தனைக்கும் கைக் குழந்தையோடு சேர்த்து மூன்று பிள்ளைகள் அவளுக்கு. வாழ்வின் அடுத்த கணம் பற்றி முழுமையாக நம்பிக்கை இழந்து தண்டவாளத்தை நோக்கி நடக்கத் தொடங்கினாள். மூன்று பிள்ளைகளோடு சேர்த்து தனது வாழ்வையும் முடித்து விடுவதுதான் அவளது தீர்மானமாக இருந்தது.
தண்டவாளத்தை நெருங்கிய போது அவளது உள்ளத்தில் மாற்றம் ஏற்பட்டது. தனக்குத் தெரிந்த பெண்ணொருவரை நாடி ஏன் உதவி கோரக் கூடாது என்று அவளது மனம் சிந்திக்கத் தலைப்பட்டது. வைத்த கால்களை பின்வாங்கியவளாக அந்தப் பெண்ணின் வீட்டை நோக்கி நடக்கலானாள்.
தனது நிலையை அப்பெண்ணிடம் பகிர்ந்துகொண்டபோது, அவளும் மனமிரங்கி மாதம் 500 ரூபாய்க்கு வாடகை வீடொன்றை (அதனை வீடு என்று சொல்ல முடியாது) உதவியாகப் பெற்றுக் கொடுத்தாள். அதனால், அவளது வாழ்க்கை திசை மாறியது. 2000 ரூபாய் முற்பணத்துடன் 500 வாடகை. இதுதான் அந்தப் பெண் செய்த உதவி.
இவை நண்பர் ஒருவர் பகிர்ந்து கொண்ட உண்மைச் சம்பவங்கள். அன்றாடம் இவ்வாறான சம்வங்கள் பலவற்றை நேரடியாக எதிர்கொள்கிறோம் அல்லது பிறர் சொல்லக் கேட்கிறோம். பல சந்தர்ப்பங்களில் மிக அற்பமான உதவிகள் கூட, மக்களின் வாழ்க்கையில் பெரிய திருப்பங்களை ஏற்படுத்துகின்றன. இரண்டாவது சம்பவம் அதற்கு நல்ல உதாரணம்.
வறுமை நமது சமூகத்தின் ஆழத்துள் புரையோடிப் போயிருக்கிறது. அதற்கு என்ன தீர்வை நாம் நம்மளவில் எடுத்திருக்கி றோம்? குறிப்பாக றமழானில் பெற்ற எவ்வளவோ ஆன்மீகப் பாடங்களுக்கு அப்பால், சமூகம் சார்ந்த இந்தப் பாடம் குறித்து நம்மை சுயவிசாரணை செய்து கொள்வோம்.
துயர் செறிந்த இவ்வாறான சம்பவங்களைக் கேட்டு அனுதாபப்படுகிறோம். பின்னர் மறந்து விடுகிறோம். வறுமை எத்தனை பேரின் உள்வீடுகளில் தீயாய் எரிகிறது.
அதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளையும் திட்டங்களையும் நோக்கி நாம் விரைவாக நகர வேண்டியுள்ளது. ஸகாத்தை கூட்டாக முன்னெடுக்கும் முயற்சிகள் ஆங்காங்கே பல இடங்களில் உள்ளனதான். எனினும், அவற்றுள் பலவற்றில் நிறுவன ரீதியான முறைமைகளும் ஒழுங்குகளும் பலவீனமாகவே உள்ளன.
அத்தோடு பொருளாதாரம் சார்ந்த வேறு நிறுவன முயற்சிகளும் பரவலாக தேவையாக உள்ளது. குறிப்பாக கடன் சுமைகளிலிருந்து மீட்சி பெறும் வகையில் வட்டி முறைகளிலிருந்து விடுபட்டு மக்களுக்கு உதவும் வெவ்வேறு நிதி நிறுவனங்களின் தேவை இன்று மிகவும் இன்றியமையாததாய் மாறியுள்ளது.
நம்மிடமுள்ள சமூகம் சார்ந்த நிதி நிறுவனங்களை முறையாக ஒழுங்கமைப்பது, அதன் குறைபாடுகளை நிவர்த்திப்பது, அதன் இடைவெளிகளை இனங்கண்டு வலுப்படுத்துவது நமது முதற் பணியாகும். அத்தோடு புதிய பல திசைகளை நோக்கி நமது கவனத்தைக் குவிக்க வேண்டியுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார நிலை தொடர்பாக எம்மிடம் சரியான தரவுகளோ தகவல்களோ இல்லை.

இரவு வணக்கத்தை அனைவரும் சுவைக்க முயற்சி செய்வோம்

றுஸ்லி ஈஸா லெப்பை (நளீமி)
இரவு வணக்கமென்பது நாம் அனைவரும் சுவைக்க வேண்டிய ஒன்றாகும். அதற்கான ஆசை எம்மனைவரிலும் இன்னும் இன்னுமின்னும் வளர வேண்டும். நாம் எமது முன்னைய சமுதாயத் தவர்களோடு நன்மைகளால் போட்டுபோடுவதற்கான மிகப் பெரும் சந்தர்ப்பம் இந்த இரவு வணக்கமாகும்.

எம் உடம்பு சோம்பல் பட்டாலும் கூட நாம் முனைப்போடு செய்யவேண்டிய ஒரு அமலாக இது காணப்படுகிறது. கல்வி கற்கும் மாணவனுக்கு கல்வியில் தேற இது ஒரு கட்டுச்சாதம். கற்பிக்கும் ஆசான் கற்பித்தலில் தேற இது ஒரு கட்டுச்சாதம். வாழ்வை ருசிக்க வேண்டுமென விரும்பும் இளைஞனுக்கான ஒரு கட்டுச் சாதம். இல்லர வாழ்வில் சந்தோசம் விளைய வேண்டுமென விரும்பும் தம்பதியினருக்கான ஒரு கட்டுச்சாதம்.
கியாமுல் லைல் வீட்டின் சிறந்த தலைவனாக இருக்க விரும்புபவருக்கான ஒரு கட்டுச்சாதம். வீட்டின் சிறந்த தலைவியாக இருக்க வேண்டுமே என விரும்பும் பெண்ணுக்கான ஒரு கட்டுச் சாதம். தனது தொழிலை திறன் பட செய்ய வேண்டும் என விரும்பும் தொழிலாளியின் கட்டுச் சாதம். வியாபாரத்தில் இலாபம் கிடைக்க வேண்டுமென பாடுபடும் வியாபாரிக்கான கட்டுச் சாதம். இஸ்லாமிய அழைப்பாளனுக்கான மிகப்பெரும் கட்டுச் சாதம். எனவேதான், மிகப்பெரும் தாஈயான நபி (ஸல்) அவர்களுக்கு இரவில் நின்று வணக்குவது பர்ளாக காணப்பட்டது.
"போர்வை போர்த்திக் கொண் டிருப்பவரே! இரவில் -சிறிது நேரம் தவிர்த்து (தொழுகைக்காக எழுந்து) நிற்பீராக. அதில் பாதி (நேரம்) அல்லது அதில் சிறிது குறைத்துக் கொள்வீராக! அல்லது அதைவிடச் சற்று அதிகப்படுத்திக் கொள்வீராக, மேலும் அல் குர்ஆனைத் தெளிவாக தஜ்வீத் முறைப்படி ஓதுவீராக. நிச்சயமாக, நாம் விரைவில் கனதியான ஒரு வாக்கை உம்மீது இறக்கி வைப்போம்." (73:1-5)
நாம் இரவு வணக்கத்தின் பயன்களை அறிந்து கொள்வது எமக்கு இன்னும் ஒரு உத்வேகத்தை தருவதாக இருக்கும் என்ற வகையில் அதன் சில பயன்களை இங்கு நோக்குவோம் இன்ஷா அல்லாஹ்.
கியாமுல் லைலின் பயன்கள்:
01. அல்லாஹ்வின் திருப்தி கிட்டும்.
"ஆகவே (நபியே!) அவர்கள் சொல்வதை (யெல்லாம்) நீர் பொறுத்துக் கொள்வீராக. இன்னும் சூரியன் உதிப்பதற்கு முன்னும், அது மறைவதற்கு முன்னும், இரவின் நேரங்களிலும் உம்முடைய இறைவனின் புகழைத் துதித்துத் தொழுவீராக. இன்னும் பகலின் (இரு) முனைகளிலும் இவ்வாறே துதி செய்து தொழுவீராக இதனால் (நன்மை களடைந்து) நீர் திருப்தி பெறலாம்." (20:130)
02. இரவு வணக்கம் அல்லாஹ்வைப் பற்றிய தெளிவைத் தரும்.
"நிச்சயமாக, இரவில் எழு(ந்திருந்து வணங்கு) வது (அகத்தையும் புறத்தையும்) ஒருங்கிணைக்க வல்லது. மேலும் வாக்கையும் செவ்வைப்படுத்தக் கூடியது." (73:6)
03. நல்லடியார் களின் பழக்க மாகும்.
"நீங்கள் கியாமுல் லைல்லை பேணிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு முன்னிருந்த நல்லடியார்களின் பழக்கமாகும்." (ஹதீஸ்)
04. பொடுபோக்கை நீக்கும்.
"யார் அல்குர்ஆனின் 10 வசனங்களை ஓதி நின்று வணங்குகிறாரோ அவர் பொடுபோக்கானவர்களின் பட்டியலில் சேர்க்கப்படமாட்டார். யார் அல்குர்ஆனின் 100 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் இறைவனுக்கு கட்டுப்பட்டவர்களில் சேர்க்கப்படுவார். யார் அல்குர்ஆனின் 1000 வசனங்களை ஓதி தொழுகிறாரோ அவர் பலமடங்கு நன்மைகள் செய்தவர்களில் சேர்க்கப்படுவார்." (ஹதீஸ்)
05. கியாமுல் லைல் அல்லாஹ் வுடனான உறவையும் நெருக்கத் தையும் தரும்.
"நீங்கள் இரவு நேர வணக்கத்தைப் பேணிக்கொள்ளுங்கள். அது உங்களுக்கு முன்னிருந்தோரின் பழக்கமாகும். மட்டுமன்றி, அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தையும் தரும்." (ஹதீஸ்)
இமாம் ஹஸனுல் பஸ்ரி கூறுவார்: "இரவின் நடுப்பகுதியில் எழுந்து, தொழுவதை விட அல்லாஹ்வை ஒரு அடியான் நெருங்குவதற்கான மிகச் சிறந்த வழிமுறையாக வேறொன்றையும் நான்  அறியவில்லை."
06. கியாமுல் லைல் பாவத்தை விட்டும் தூரமாக்கும், பாவமன் னிப்பைக்கொண்டு தரும், உடம் பிலுள்ள நோயை அகற்றும்.
"இரவு நேர வணக்கம் அது அல்லாஹ்வுடனான நெருக்கத்தை தருவதோடு, பாவங்களை விட்டும் தடுக்கும், பாவமன்னிப்பைத் தரும், உடம்பிலுள்ள நோயையும் நீக்கிவிடும்." (ஹதீஸ்)
07. கியாமுல் லைல் தொழுபவர் களுக்கு அல்லாஹ் மறுமையில் ஒளி வழங்குவான்.
"அந்நாளில் சில முகங்கள் ஒளியினால் இலங்கிக் கொண்டிருக்கும். சிரித்தவையாகவும், மகிழ்வுடையதாகவும் இருக்கும். (80: 38,39) இந்தப் பிரகாசம் கியா முல் லைலின் காரணமாகவே ஏற்படுகிறது என இப்னு அப்பாஸ் (றழி) இவ்வசனத்திற்கு விளக்க மளிக்கிறார்.
"இரவு நேரத்திலே நின்று வணங்கும் மனிதர்களின் முகங்கள் மிக அழகாக இருப்பதற்கான காரணமென்ன?" என இமாம் ஹஸனுல் பஸ்ரியிடம் வினவப்பட்ட போது, அவர்: ஏனெனில், அவர்கள் தம்மை இறைவனுக்காக அர்ப்பணித்தார்கள். எனவே, அல்லாஹ் அவர்களுக்கு பிரகாசத்தை வழங்கினான்" என பதிலளித்தார்.
08. துஆ ஏற்றுக்கொள்ளப்படும்.
நாம் சில மனிதர்களிடம் எமக்காக துஆக்கேட்குமாறு வேண்டியிருப்போம். அவர்களும் எமக்காக அல்லாஹ்விடம் துஆக் கேட்டிருப்பார்கள். அது எமது வாழ்விலும் தாக்கத்தை உண்டுபண்ணியிருக்கும். நாம் அதற்கான காரணத்தைத் தேடிப் பார்த்திருக்க மாட்டோம். அவர்கள் இரவுநேர வணக்கவாளிகளாக இருப்பதே அதன் காரணமாகும்.
"யார் இரவு நேரத்தில் எழுந்து,
லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு, லஹுல் முல்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர், அல்ஹம்து லில்லாஹி வ ஸுப்ஹானல்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத இல்லா பில்லாஹ்
எனக் கூறி, யா அல்லாஹ் எனது பாவங்களை மன்னித்தருள்வாயாக என பிராத்திக்கிறாரோ அல்லது துஆக் கேட்கிறாரோ அவரின் துஆ ஏற்றுக் கொள்ளப்படும்." (புஹாரி)
09. கியாமுல் லைல் ரஹ்மத் தைப் பெற்றுத்தரும்.
"எவர் மறுமையை அஞ்சி, தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது  செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (39:9)
"யார் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது மனைவியையும் எழும்பி தொழச்செய்து, அவள் எழும்ப மறுத்தால் அவளின் முகத்தில் நீரைத் தெளிப்பவருக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும். அதுபோல ஒரு பெண் இரவு நேரத்தில் எழுந்து தொழுது, தனது கணவனையும் எழும்பி தொழச் செய்து, அவன் எழும்ப மறுத்தால் முகத்தில் நீரைத் தெளிப் பவளுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்யட்டும்." (ஹதீஸ்)
10. சுவனத்தில் உயர் அந்தஸ்து களைத் தரும்
மற்ற மனிதர்கள் தூங்கும் நேரத்தில் எமது படுக்கையிலிருந்து எழுந்து வணக்கம் செய்வது என்பது மிகப் பெறுமதியான ஒன்றாகும். அதற்கு அல்லாஹ் அதிக கூலிகளைத் தருவான் என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் இதனைப் பின்வருமாறு தெளிவு படுத்துகிறார்கள்:
"சுவனத்திலே சில அறைகள் காணப்படுகின்றன. அவற்றின் உட்புறமிருந்து பார்த்தால் வெளிப்புறம் தென்படும். வெளிப்புற மிருந்து பார்த்தால் உட்புறம் வெளிப்படும். யார் உணவளித்து, ஸலாத்தைப் பரப்பி, மனிதர்கள் தூங்கும் வேளையில் நின்று வணங்குகிறாரோ அவருக்காக அல்லாஹ் அவ் அறைகளைத் தயார்படுத்தி வைத்திருக்கிறான்." (ஹதீஸ்)
11. எதிரிகளோடு வெற்றிகிடைப்பதற்கான வழி கியாமுல் லைல்.
வரலாற்றில் முஸ்லிகளுக்கு கிடைத்த வெற்றிகளை எடுத்து நோக்கினால் கூட அவை கியாமுல் லைலுடன் சம்பந்தப்பட்டிருப்பதைக் காணமுடியும்.
எனவே, சகோதர சகோதரிகளே இவ்வாறான பல பலன்களைச் சுமந்திருக்கும் கியாமுல் லைலை பேணித்தொழுபவர்களாக அல்லாஹ் எம்மையும் உங்களையும் மாற்றியருள்வானாக. ஆமீன்.

Saiful IslamDr. ஸைபுல் இஸ்லாம், MBBS, M.Sc (Nutrition) 
வேலைகளை ஒழுங்குபடுத்தல் என்பது ஒரு மனிதனின் வாழ்க்கையில் அடிப்படை அம்சமாகக் காணப்படுகிறது. தன்னுடைய வாழ்க்கையை ஒழுங்குபடுத்திக் கொள்ளும் மனிதன் நிச்சயம் நிறையவே சாதிப்பான். சாதித்த மனிதர்களின் வரலாற்றை வாசித்தால் அவர்களனைவரும் தமது வேலைகளை, விவகாரங்களை ஒழுங்குபடுத்தி செயற்பட்டிருப்பதைக் காணலாம். ஒரு மனிதன் தனது விவகாரங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கான நடைமுறை வடிவங்கள் சிலவற்றை இங்கு அடையாளப்படுத்துகிறோம்.
எந்தவொரு பணியிலும் ஈடுபட முன்பாக தன்னை மனோரீதியாக தயார்படுத்திக் கொள்ள வேண்டும். பின்னர், தான் ஈடுபடப்போகும் விவகாரத்திற்கு கொஞ்சம் நேரம் ஒதுக்க வேண்டும். தான் செய்யப்போகும் வேலை குறித்து அமைதியாக, ஆறுதலாக சிந்திக்க வேண்டும். ஒரு மனிதனது வாழ்க்கையில் வெற்றியும் தோல்வியும் அவன் நேரமெடுத்து, தனது வேலைகளை தயார்படுத்துவதிலும், அதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்திலுமே தங்கியுள்ளது. நேர முகாமைதான் இதனைத் தீர்மானிக்கிறது. நிஜத்தை மனதாற உள்வாங்கவேண்டும்.
இங்கு தன்னுடைய வேலைகளை எப்படி ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம் என்பதற்கான சில நடைமுறை உதாரணங்களை தருகிறோம்.
1. To do list போடுதல்
ஒரு நாள் துவங்க முன்னர் அன்றைய தினமுள்ள வேலைகளை அடையாளப்படுத்தி, அவற்றில் எதனை முற்படுத்துவது எவற்றைப் பிற்படுத்துவது என்பதில் தெளிவாக இருத்தல். ஒரு நாளை இந்த வழிமுறையில் ஆரம்பிப்பவருக்கும் அப்படி ஆரம்பிக்காத ஒருவருக்குமிடையிலே வித்தியாசம் இருப்பதை புரிந்து கொள்ளுதல்.
2. முன்னுரிமைப்படுத்தல் ஒழுங்கு (Priority Order)
தனது வாழ்வில் நாளாந்த விடயங்களில் முன்னுரிமைப்படுத்த வேண்டிய விடயங்களை அடையாளப்படுத்தி அவற்றுக்கு முன்னுரிமை கொடுத்தல்.
3. நேர வரையறை (Time Limit)
ஒவ்வொரு செயலுக்குமுள்ள காலம், நேரம் என்பவற்றைத் தெரிந்திருந்தல். ஒவ்வொரு செயலுக்கும் குறிப்பிட்ட காலம், நேரம் தேவைப்படும். வேலையின் வகைகளைப் பொறுத்து இவை வித்தியாசப்படும். ஒவ்வொருவரும் தமது காலத்தையும் நேரத்தையும் அடையாளப்படுத்தி சரியாக நடைமுறைப்படுத்தினால் வீணான குளறுபடிகளிலிருந்து விடுபட முடியும்.
4. எதிர்பாராத பிரச்சினைகளை எதிர்கொள்ளல்
எந்தவொரு வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கும்போது அதற்குரிய நேர முக்கியத்துவத்தை விளங்கி அவற்றை முன்னெடுத்தல் வேண்டும். சில சந்தர்ப்பங்களில் தாம் முன்னெடுக்கும் வேலைத்திட்டம் எதிர்பாராத பிரச்சினைகளில் சிக்க வேண்டி வரலாம். அப்போது பதறியடித்துக் கொண்டு தடுமாறுவதில் எப்பிரயோசனமும் இல்லை. எனவே, எதாவதொரு வேலைத்திட்டத்திற்கு உட்பட முடியுமான எதிர்பார்த்திராத விவகாரங்களை அடையாளம் கண்டு மாற்றீடுகளை ஏற்படுத்திவைத்தல்.
5. ஐந்து நிமிடங்களுக்கு குறைவான வேலைகளை உடனே செய்து முடித்தல்
எந்தவொரு சிறிய வேலையையும் பிற்போடக் கூடாது. அவை சேர்ந்து பின்னர் பெரிய வேலையாகி, ஏனைய பிரதான வேலைகளுக்குத் தடையாகிவிடும்.
6. பிற்போடுவதைத் தவிர்க்க முடியாத சந்தர்ப்பத்தில் மாத்திரம் பிற்போடல்
இயலுமானவரை உரிய நேரத்திலேயே வேலைகளை செய்து முடிக்க முயற்சித்தல்.
7. மற்றவர்களின் நேர முகாமைத்துவத்தைப் பேண ஒத்துழைத்தல்
இந்த விடயங்களில் பலர் தவறுவிடுவதைக் காணமுடியும். உதாரணமாக ஒருவரை சந்திக்கச் செல்ல வேண்டுமாக இருந்தால் முன்கூட்டியே அனுமதியெடுத்துக் கொள்ளல். சந்திப்பினை உரிய நேரத்தில் முடித்துக் கொள்ளல். ஒருவருக்கு நாம் கொடுக்கும் மரியாதை, மதிப்பானது அவர் நம்மீது நல்லெண்ணம் கொள்வதற்கு வாப்பாக அமையும்.
8. ஒரு விடயத்தை சேய்வதற்கு முன் அதற்குரிய சாதனங்களைத் தயார்படுத்திக் கொண்டு ஆரம்பித்தல்
உதாரணமாக, கட்டுரை யொன்றை எழுதுவதாக இருந்தால் பேனை, தாள், உஷாத்துணை நூல்கள் போன்ற தேவையான பொருட்களைத் தயார்படுத்திக் கொண்டு எழுதுதல்.
9. இடைவேளை எடுத்துக் கொள்ளுங்கள் (Take a Break)
ஒரு வேலையை தொடர்ந்து செய்யாமல் பகுதி பகுதியாகச் செய்தல். சிறிய சிறிய இடைவேளைகளை எடுப்பதன் மூலம் அவற்றை விரைவாகவும் நேர்த்தியாகவும் முடித்துவிடலாம். இதன்மூலம் சோர்வையும் களைப்பையும் தவிர்க்கலாம்.
10. Buffer Time
தான் செய்யப்போகுப் வேலை தொடர்பான அனைத்து விடயங்களையும் நேரமொதுக்கி குறிப்பெடுத்தல். உதாரணமாக, தான் அலுவலக மொன்றில் வேலை செய்வதால் அந்த அலுவலகத்தை சுத்தமாக வைத்திருத்தல், ஆவணங்களை ஒழுங்குபடுத்தல், தேவையான விடயங்களை, தமது கணினியிலுள்ள பைல்களை ஒழுங்குபடுத்தல், அலுவலக மேசையை ஒழுங்குபடுத்தல்... போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றுக்காக தினமும் அரைமணிநேரம் ஒதுக்குதல். கிழமையில் குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல். மாதத்திற்கு ஒரு நாள் ஒதுக்குதல். இதன்மூலம் நிறைய நேரங்களை மிச்சப்படுத்திக் கொள்ளலாம்.
11. இயலாது என்று சோல்லத் தெரிந்து கொள்ளல் (Know how to say No)
சிலர் வருகின்ற அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்றுக்கொண்டு, தலையில் போட்டுக் கொள்வார்கள். பின்னர் எதைச் செய்வதென்று தெரியாமல் நேரங்கள் வீணாகிவிடும். தன்னால் இயலாவிட்டால் இல்லைஎன்று சொல்லத் தெரிந்தால் அவற்றை இங்கிதமாக முன்வைக்கலாம்.
12. ஓய்வு நேரம் (Free Time)
இன்றைய உலக மனிதனது வேலைப் பளுவானது ஒரு மனிதனை அவனது ஆன்மாவும் உடலும் சந்திக்க முடியாத ஒன்றாக ஆக்கியிருக்கிறது. எனவே, அவனுக்கு மன அமைதிக்காக, எல்லாச் சோலிகளிலிருந்தும் விடுபட ஓய்வு அவசியம். இந்த ஓய்வு குறுகிய நேரமாக இருக்கலாம்.
13. கவனக் குவிப்பு நேரம் (Focus Time)
ஒருவர், தான் வரைந்திருக்கும் இலக்கு, Key Result, குறிக்கோள்களை பார்க்கவும், அவதானிக்கவும் நேரம் எடுத்தல் வேண்டும். இது மாதத்தில் ஒரு நாளாக இருக்க முடியும். அல்லது கிழமையில் ஒரு மணித்தியாலமாக இருக்க முடியும். தனது பாதையை அவன் ஆறுதலாக இருந்து பார்வையிடல் அவசியம்.
14. வாசிப்பதற்கு நேரம் ஒதுக்குதல்
குறிப்பாக, பிரச்சாரகர்களுக்கு இது மிகவும் அவசியப்படுகிறது. வாசிப்பு ஒரு மனிதனை உருவாக்குவதில், அவனை நெறிப்படுத்துவதில், அவனை வலுவூட்டுவதில் காத்திரமான பங்களிப்பைச் செய்கிறது.
15. பயன்படுத்தாமல் வீணாகக் கழியும் நேரங்கள் (Useless Time)
பல மனிதர்களின் வாழ்க்கையில் பல்வேறு சந்தர்ப்பங்கள் இப்படி வீணாக் கழிகின்றன. அவன் பிரயாணம் செய்யும் நேரம், பஸ்ஸுக்காகக் காத்துக் கொண்டிருக்கும் நேரம் என்பன. இப்படியான நேரங்களைப் பயன்படுத்துவதன் மூலம் வேலைகளை ஒழுங்குபடுத்திக் கொள்ளலாம்.

முல்லைப்பெரியாறு:பேச்சுவார்த்தையில் தமிழகம் பங்கேற்குமா?



  mulla periyar war
சென்னை:முல்லைப்பெரியாறு அணை குறித்து மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சுவார்த்தையில் தமிழக அரசு பங்கேற்பது சந்தேகம் என கருதப்படுகிறது.
முன்னர், இரு மாநில அரசு அதிகாரிகள் அளவிலான பேச்சுவார்த்தைக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அழைப்பு விடுத்தது. ஆனால், இந்த கூட்டத்தில் பங்கேற்க போவதில்லை என தமிழ அரசு அறிவித்தது.இதனைத் தொடர்ந்து இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்க்க மத்திய அரசு அழைப்பு விடுத்தது.
இதுத்தொடர்பாக இரு மாநில அரசுகளின் பொதுப்பணித்துறை செயலாளர்களுக்கு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியது. அதில், டெல்லியில் டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி பேச்சுக்கான சந்திப்பை நடத்தலாம். இந்த இரு தேதிகளில் உங்களுக்கு ஏற்ற ஒரு தேதியைத் தேர்வு செய்யலாம் என்று தமிழக, கேரள மாநில அதிகாரிகளுக்குக் கூறப்பட்டிருந்தது.
முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையில் 5 பேர் அடங்கிய, “அதிகாரம் அளிக்கப்பட்ட குழு” அமைக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் கூட்டம் கடந்த 5-ம் தேதி நடந்தது. அதில், நில நடுக்கத்தால் அணைக்கு பாதிப்பு எனக் கூறி கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தமிழக அரசு 10 நாள்களில் பதிலளிக்க வேண்டும் என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழக அரசு தனது பதிலை டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதிக்குள் அளிக்கும். உச்ச நீதிமன்றம் அமைத்துள்ள குழுவுக்கு தமிழக அரசு பதிலளிக்கும் நிலையில், அதே காலகட்டத்தில் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சில் பங்கேற்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
“முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது; அதில் 142 அடி வரை நீரைத் தேக்கலாம்” எனத் தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
இந்தச் சூழ்நிலையில், அணை தொடர்பாக கேரள அரசு தெரிவித்துவரும் தேவையற்ற அச்சங்களுக்கு, மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ள பேச்சில் பங்கேற்றுதான் பதில் தெரிவிக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்ற கருத்து எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில் மத்திய அரசு நடத்தவிரும்பும் பேச்சில் தமிழக அரசு பங்கேற்காது எனத் தெரிகிறது.

ஹாவர்டு நடவடிக்கை: மறு பரிசீலனை செய்ய சு.சாமி வேண்டுகோள்

  su.samy
புதுடெல்லி:முஸ்லிம்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் கட்டுரை எழுதிய ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணிய சுவாமியை ஹாவர்டு பல்கலைக்கழகம் வெளியேற்றியிருந்தது.
ஒரு சிறுபான்மை சமூகத்திடம் பகை உணர்வை வெளிப்படுத்தும் நபரை தங்களிடன் பல்கலைக்கழக ஆசிரியர் குழுவில் இடம்பெற
செய்ய விருப்பமில்லை என பல்கலைக்கழக செய்தித் தொடர்பாளர் தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து இவர் பயிற்றுவித்த இரண்டு பொருளாதார பாடங்களை இவ்வருட கோடை கால பாடத்திட்டத்திலிருந்து நீக்க பல்கலைக்கழகம் தீர்மானித்துள்ளது.
சு.சாமியின் கட்டுரை, கருத்து சுதந்திரம் அல்ல.மாறாக, துவேசத்தின் பிரகடனம் ஆகும் என பல்கலைக்கழக ஆசிரியர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது. 1965-ஆம் ஆண்டு ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் ஆய்வு நடத்தி பட்டம் பெற்ற சு.சாமி கடந்த ஆகஸ்ட் மாதம் இப்பல்கலைக்கழகத்தில் விசிட்டிங் பேராசிரியராக பணியாற்ற துவங்கினார்.
ஹாவர்ட் பல்கலைக்கழகத்தின் நடவடிக்கை குறித்து சு.சாமி பதிலளிக்கையில், “என்னை நீக்கியது அநீதியான நடவடிக்கை ஆகும். எனக்கு நோட்டீஸ் அளிக்கவோ, எனது கருத்துக்களை கேட்கவோ செய்யாமல் என் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தை மறு பரிசீலனை செய்ய பல்கலைக்கழகம் தயாராகவேண்டும்” என கூறியுள்ளார்.
முஸ்லிம்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய கட்டுரையை எழுதிய சு.சாமியை நீக்க வேண்டும் என்று கோரி ஹாவர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 400 மாணவர்கள் கையெழுத்திட்டு கோரிக்கையும் வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கொல்கத்தா:மருத்துவமனையில் தீ விபத்து – 89 பேர் பலி



  fire3_859998f
கொல்கத்தா:வெள்ளிக்கிழமை அதிகாலை கொல்கத்தாவில் உள்ள எ.எம்.ஆர்.ஐ என்ற தனியார் மருத்துவமனையில் தீவிபத்து ஏற்பட்டதில் 89 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
மருத்துவமனை இயக்குநர்களான ஆர்.எஸ்.கோயங்கா, எஸ்.கே.டோடி உள்பட ஆறுபேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மரணித்தவர்களில் 70 பேர் நோயாளிகள் ஆவர். 3 பேர் மருத்துவமனை பணியாளர்கள். மீதமுள்ளவர்களை அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
மருத்துவமனையில் தீயணைப்பதற்கான போதிய வசதிகள் இல்லாததுதான் விபத்தின் தீவிரம் அதிகரிக்க காரணம் என சம்பவ இடத்திற்கு வருகை தந்த மே.வங்க முதல்வர் மமதா பானர்ஜி கூறியுள்ளார். மருத்துவமனை அதிகாரிகளிடம் ஏற்பட்ட கடுமையான தவறு மன்னிக்கமுடியாத குற்றம் என்றும், இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மம்தா அறிவித்துள்ளார்.
தீவிபத்தை தொடர்ந்து மருத்துவமனையின் அங்கீகாரம் ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் மீது க்ரிமினல் குற்றம் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே மரணித்தவர்களின் உறவினர்களுக்கு மருத்துவமனை அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் இழப்பீட்டை அறிவித்துள்ளனர்.
மீட்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தீ கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கட்டிடத்தில் சிக்கிய அனைத்து நபர்களும் வெளியே மீட்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
ஐ.சி.யு, ஐ.சி.சி.யு, க்ரிடிக்கல் கேர் யூனிட், விபத்து சிகிட்சை பிரிவு ஆகியன செயல்பட்டுக் கொண்டிருந்த எட்டு மாடி கட்டிடத்தின் அடித்தளத்தில் முதலில் தீப்பிடித்தது. இங்கு க்யாஸ் சிலிண்டர்கள், வயர்கள், வேதியியல் பொருட்கள் ஆகியன சேகரித்து வைக்கப்பட்டிருந்ததால் வேகமாக தீ பரவ காரணமானது. தீ பரவி இரண்டு மணி நேரம் கழித்த பிறகே தீயணைப்பு படையினர் சம்பவ  இடத்திற்கு வந்ததாக நேரில் கண்டவர்கள் கூறுகின்றனர். மருத்துவமனைக்கு செல்வதற்கான வழிகள் குறுகியதாகவும், நெரிசல் மிகுந்ததாகவும் இருந்ததால் மீட்பு பணி பாதிக்கப்பட்டது.
மருத்துவமனை அறைகளின் கதவுகளும், ஜன்னல்களும் மூடிக் கிடந்ததும் மீட்பு பணியை பாதித்தது. மருத்துவமனையின் எலக்ட்ரிக் டிபார்ட்மெண்டிலிருந்து தீ பரவத் துவங்கியுள்ளது. பின்னர் 4 மாடிகளுக்கு தீ பரவியுள்ளது. இதர கட்டிடங்கள் பாதுகாப்பாக உள்ளன. தீ பற்றியதற்கான காரணம் இதுவரை தெளிவாகவில்லை. மருத்துவமனையின் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து ஏராளமானோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களை குறித்து சரியான தகவல் கிடைக்கவில்லை.
கொல்கத்தா போலீஸ் கமிஷனர், மாநகராட்சி துறை, தீயணைப்பு துறை அமைச்சர் ஆகியோர் சம்பம் நடந்த இடத்திற்கு வந்து மீட்பு பணியை பார்வையிட்டனர்.
மீட்பு பணிகள் நடக்கும் வேளையில் மருத்துவமனை அதிகாரிகள் சம்பவ இடத்தில் இல்லாதது அதிர்ச்சியடையச் செய்தது என மேற்கு வங்காள திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் சுப்ரதோ முகர்ஜி தெரிவித்துள்ளார்.மருத்துவமனை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும், தற்பொழுது மீட்பு பணியில் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தீப்பிடித்தவுடன் மருத்துவமனை ஊழியர்கள் நோயாளிகளை காப்பாற்றாமல் தாங்கள் மட்டும் ஓடிவிட்டனர். அதனால் பலர் மூச்சுத் திணறி உயிர் இழந்துள்ளனர் என்று இறந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த விபத்தால் ஆத்திரமடைந்த உறவினர்கள் மருத்துவமனை பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர்

Thursday, 1 December 2011

‘பயங்கரவாதம்’ – அமெரிக்கா விரிக்கும் அகில வலை

இந்தியாவின் முதல் பெண் பிரதமரான இந்திரா காந்தி கொல்லப்பட்டதை “பயங்கரவாதம்”; என அமெரிக்கா கொள்கிறது. மன்னர் ஃபைசல் கொல்லப்பட்டதையும், ஜோன் கென்னடி கொல்லப்பட்டதையும் அது பயங்கரவாதம் என ஏற்றுக்கொள்ளவில்லை. FBI எனப்படும் அமெரிக்காவின் புலனாய்வுத்துறையின் கட்டிடம் தகர்க்கப்பட்ட பொழுது, அச்செயல் பயங்கரவாதத்தின் சதி வேலை என்று கூறிய அமெரிக்கா தன் நாட்டின் ஒரு குழுவே அதை செய்தது என்று தெரிந்த பின், அச்செயலை பயங்கரவாதம்; என சொல்வதை விடுத்து, சாதாரணக் குற்றம் என்ற அடிப்படையில் அப்பிரச்சனையை அணுகியது.

இவ்வாறு 1970ற்குப்பின் பயங்கரவாதத்திற்கு தன் விருப்பப்படி பொருள் புணைந்து அதை உள்நாட்டிலும், வெளி நாட்டிலும் பிரகடனப்படுத்திற்று அமெரிக்கா. 1980இல் பெய்ரூட்டில் TWA என்னும் அமெரிக்க விமானம் கடத்தப்பட்டதையும், அமெரிக்காவிற்கு சொந்தமான அல் கூபார் படைத்தளம் சவூதி அரேபியாவில் தகர்க்கப்பட்டதையும் அது காரணம் காட்டி 1996 ம் ஆண்டு பிரான்சில் நடைபெற்ற ஜி7 (G7) நாடுகளின் கூட்டமைப்பில், பயங்கரவாதத்தை எதிர்க்கும் 40 கோரிக்கைகளை கொண்டு வந்தது. நியுயோர்க்கிலுள்ள உலக வர்த்தக மையம் தகர்;க்கப்பட்டதையும் காரணம் காட்டி அமெரிக்கா, பயங்கரவாதம் தொடர்பான சட்டங்களை இயற்றியது. இதற்கு 1997- ம் ஆண்டு அமெரிக்க மேல் சபை ஒப்புதலும் வழங்கிற்று. இதன் விளைவாக பயங்கரவாதத்தின் பெயரில் குற்றம் சாட்டப்பட்ட எவரையும் அந்நாடு கண்டித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட அந்த நபர் நீதிமன்றத்தில் வாதிட்டு வெற்றி பெற இயலாதபடி அவரை கைது செய்யவோ, நாடு கடத்தவோ, அந்த நபருக்கு குடியுரிமை மறுக்கப்படுவது அல்லது அதிகபட்ச தண்டனை வழங்குவது போன்ற அனைத்தையும் செய்யத் துணிந்தது அமெரிக்கா.

அமெரிக்காவை எதிர்க்கும் நாடுகளான வடகொரியா, ஈராக், ஈரான் போன்ற நாடுகளுக்கும் இஸ்லாமிக் ஜிஹாத், ஹமாஸ், எகிப்தில் இயங்கி வரும் ஜமாஹ் இஸ்லாமிய்யாஹ், லிபியாவின் FIS போன்ற இயக்கங்களுக்கும், தமது பூர்வீக பூமியை ஆக்கிரமித்துள்ள இஸ்ரேலுக்கு எதிரான பாலஸ்தீனியர்களின் போராட்டத்தையும் அமெரிக்கா பயங்கரவாதச் சாயம் பூசி தண்டிக்க முனைகிறது.

தான் இயற்றிய சட்டங்களைக் கூறி எந்த ஒரு நாட்டின் (ஈராக், லிபியா) மீதும் பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா. இதை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்காவின் முன்னாள் வெளி உறவுச் செயலாளர் ஜோர்ஜ் சல்ட்ஷ் பின்வருமாறு ஒரு முறை கூறியிருந்தார். “தீவிரவாதிகள் முயன்று தப்பி செல்ல முடியுமேயன்றி, அவர்கள் ஒளியவோ, மறையவோ முடியாது”. இவ்வாறு பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டங்களை வகுத்து முழு உலகையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள நினைக்கிறது அமெரிக்கா.

கம்யூனிச உலகின் வீழ்ச்சிக்கு பிறகு அமெரிக்காவின் பிரதான எதிரியாக இஸ்லாம் விளங்குவதாக அமெரிக்கா கருதுகிறது. இஸ்லாமிய உலகில் மீண்டும் இஸ்லாமிய அரசை ஏற்படுத்தும் எண்ணத்துடன் பல இயக்கங்களும், முஸ்லிம் சமூகமும் செயற்படுகின்ற வேளையில் அவர்களை உடனடியாக அடக்கி தனது மேலாதிக்கத்தை தொடர்ந்து பேண வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு ஏற்பட்டுள்ளது. எனவே இஸ்லாமிய சிந்தனையை அடிப்படையாகக்கொண்ட ஒரு து}ய இஸ்லாமிய உலகு (கிலாபா ராஷிதா) தோற்றம் பெறுவது குறித்து அமெரிக்கா பயப்படுகிறது. இதன் விளைவாக பயங்கரவாதத்திற்கு எதிரான தனது வியூகங்களை செயற்படுத்தும் முக்கிய பிராந்தியமாக முஸ்லிம் மற்றும் அரபுலகை அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இதன் விளைவாக முஸ்லிம் உலகெங்கும் போராட்டங்களையும், வன்முறைகளையும் து}ண்டி நிலையற்ற அரசியல் பொருளாதார நிலையை தோற்றுவிப்பதில் அமெரிக்கா பிரயத்தனம் மேற்கொண்டு வருகின்றது.

இதன்படி பல இஸ்லாமிய இயக்கங்களை அமெரிக்கா “பயங்கரவாத இயக்கங்கள்” எனக் கூறி இஸ்லாமிய ஆட்சி நோக்கி அழைக்கும் எந்த ஒரு அமைப்பையும் அமெரிக்கா பயங்கரவாத அமைப்பு என்று கூறுவதன் மூலமாக அவற்றுக்கு எதிராக அதியுச்ச தடைகளை ஏற்படுத்த முனைந்துள்ளது. இதற்காக அமெரிக்கா ஏனைய நாடுகளையும், வற்புறுத்தியும், அவற்றை ஒன்று திரட்டியும் இந்த இயக்கங்களை ஒடுக்க முற்படுகிறது. இதில் பலிகடாவாக ஆக்கப்படுவது கிலாபா ஆட்சியைக் கொண்டு வர முயலும் முஸ்லீம்களே ஆவர்.

எது எவ்வாறெனினும் முஸ்லீம்கள் முற்றுமுழுதாக இஸ்லாமியர்களாக வாழ வேண்டும் என்பது அவர்கள் மீது அல்லாஹ்வால் சுமத்தப்பட்ட மார்க்கக்கடமையாகும். எனவே இது முழுமையாக சாத்தியப்படுவதற்கு கிலாஃபா ஆட்சி முறையைக் கொண்டு முஸ்லிம்கள் ஆழப்பட வேண்டியது அவசியமாகும். இதையே ஷரியா வலியுறுத்துகிறது.

எனவே இஸ்லாத்திற்கு அதிகாரத்தை பெற்றுக்கொடுக்க மேற்கொள்ளும் முயற்சிகளையும், முஸ்லிம்களின் எழுச்சியையும் அமெரிக்கா பயங்கரவாதம் என்ற சாயம் பூசி தண்டிக்க நினைத்தால் நீதி செலுத்துவதற்காக அனுப்பட்ட சமூகம் என்ற அடிப்படையில் அதற்கெதிராக அல்லாஹ்வின் வழிகாட்டலின்படி போராட வேண்டியது முஸ்லிம் உம்மத்தின் தார்மீகக் கடமையாகும்.