Monday, 16 January 2012

சென்னை எழிலக கட்டடத்தில் நள்ளிரவு தீ விபத்து


சென்னை எழிலக கட்டடத்தில் நள்ளிரவு தீ விபத்து – தீயணைப்பு வீரர் பலி

fire-accident1
சென்னை:சென்னை சேப்பாக்கத்தில் அரசு அலுவலகங்கள் இயங்கும் எழிலகம் கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் தீயை அணைக்கச் சென்ற மீட்புப் படை வீரர் ஒருவர். தீயில் சிக்கி பலியானார். மேலும் தீயணைப்புத்துறை பெண் உயர் அதிகாரி உட்பட இருவர், தீக்காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எழிலகக் கட்டடத்தில் முக்கிய அரசுத்துறை அலுவலங்கள் அமைந்துள்ளன. நள்ளிரவில் சமூக நலத்துறை மற்றும் தொழில் வணிகத்துறை அலுவலகத்தில் ஏற்பட்ட இந்தத் தீ விபத்தில் முக்கிய ஆவணங்களும் எரிந்து சாம்பலாயின. தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
தீவிபத்து குறித்து எழிலக கட்டிடத்தின் காவலாளி தீயணைப்புப் படையினருக்கு கொடுத்தார்.  தகவல் அறிந்ததும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டன.

கொழுந்துவிட்டு எரிந்த தீ ஒரு மணி நேரத்தில் கட்டுப்படுத்தப்பட்டது. இதையடுத்து தீயணைப்புப் படையின் சென்னை மத்திய மண்டல அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், இரவு 1.30 மணிக்கு கட்டடத்துக்குள் நுழைந்தார். அப்போது, திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் அவருடன் உள்ளே நுழைந்த தீயைணப்புப் படை வீரர் அன்பழகன் (55), அந்த இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்.
பிரியா உட்பட மூன்றுபேர் பலத்த காயமடைந்தனர். இதையடுத்து மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம்


முஸ்லிம் நபரின் உடலை போஸ்ட் மார்ட்டம் செய்ய ஒரு மாத காலம் – தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ்

NHRC
புதுடெல்லி:உ.பி மாநிலத்தில் கொலைச் செய்யப்பட்ட முஸ்லிம் நபரின்  போஸ்ட் மார்ட்டம் நடத்த காலதாமதம் செய்வது குறித்து விளக்கம் கேட்டு உ.பி மாநில உள்துறை மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

ஜவுன்பூர் மாவட்டத்தில் கொலைச் செய்யப்பட்ட ஒருவரின் போஸ்ட்மார்ட்டம் நடத்த காலதாமதம் ஏற்பட்டதால் அவரது இறுதிச் சடங்குகளை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது என பத்திரிகைகளில் செய்தி வெளியானது. இச்செய்தியின் அடிப்படையில் தேசிய மனித உரிமை கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க அதிகாரிகளுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
கெராக்கட் ரெயில்வே நிலையத்திற்கு அருகே உள்ள கிணற்றில் இருந்து கண்டெடுக்கப்பட்ட உடல் அதிகாரிகளின் அலட்சியத்தால் போஸ்ட்மார்ட்டம் செய்வதற்கு ஒரு மாத காலம் தாமதமாகியுள்ளது. இச்செய்தி பத்திரிகையில் வெளியானதை தொடர்ந்து சுயமாகவே தேசிய மனித உரிமை கமிஷன் நடவடிக்கை மேற்கொண்டது.
மரணித்த நபரின் இறுதிச்சடங்குகளை தாமதப்படுத்துவது ஒரு நபரின் கண்ணியத்தின் மீதான சுதந்திரத்தை மீறுவதாகும். மேலும் முற்றிலும் மனித உரிமை மீறலுமாகும் என கமிஷன் கூறியுள்ளது.
கெராக்கட்டில் முனவ்வர்கான் என்பவரின் மகன் தில்வார் கடந்த 2011 நவம்பர் 14-ஆம் தேதி காணாமல் போனார். டிசம்பர் ஒன்றாம் தேதி அவரது இறந்த உடல் அருகில் உள்ள கிணற்றில் கண்டெடுக்கப்பட்டது. இதுத்தொடர்பாக கொலை வழக்கை பதிவுச்செய்த போலீஸ் மூன்றுபேரை கைது செய்தது. போஸ்ட்மார்ட்டம் தாமதமாவதாக செய்தி பத்திரிகையில் வெளியாகும் வரை முனவ்வர் தனது மகனின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்தார்களா? என்பது குறித்து விசாரிக்க லக்னோ, வாரணாசி, ஜவுன்பூர் ஆகிய இடங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு செல்ல நிர்பந்திக்கப்பட்டு அழைக்கழிக்கப்பட்டார்.

இந்தியாவில் கள்ள நோட்டுக்கள் விநியோகம் 400 சதவீதம் அதிகரிப்பு

இந்தியாவில் கள்ள நோட்டுக்கள் விநியோகம் 400 சதவீதம் அதிகரிப்பு

கள்ளநோட்டுக்கள்
புதுடெல்லி:இந்தியாவில் கள்ள நோட்டுக்கள் விநியோகம் 400 சதவீதமாக அதிகரித்துள்ளதாக நிதியமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.

14 ஆயிரம் கைதிகளுக்கு சிரியாவில் பொது மன்னிப்பு


14 ஆயிரம் கைதிகளுக்கு சிரியாவில் பொது மன்னிப்பு

imagesCA99TUC6
பெய்ரூத்:சிரியாவில் சிவிலியன்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஆயுதங்களை கைவிட ஐ.நா கோரிக்கை: ஹிஸ்புல்லாஹ் நிராகரிப்பு


ஆயுதங்களை கைவிட ஐ.நா கோரிக்கை: ஹிஸ்புல்லாஹ் நிராகரிப்பு

hezbullahhasan nasrullah
பெய்ரூத்:லெபனான் சுற்றுப்பயணத்தின் போது ஆயுதங்களை கைவிட வேண்டும் என ஐ.நா பொதுச் செயலாளர் பான் கீ மூன் விடுத்த கோரிக்கையை லெபனானின் போராளி இயக்கமான ஹிஸ்புல்லாஹ் நிராகரித்துவிட்டது.
ஹிஸ்புல்லாஹ் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் இதுத் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘லெபனானின் தற்காப்பிற்கு ஆயுதங்கள் அத்தியாவசியமானதாகும். இக்காரியத்தில் ஹிஸ்புல்லாஹ்வின் நிலைப்பாடு தெளிவானது. ஹிஸ்புல்லாஹ்வின் வசமிருக்கும் ஆயுதங்கள் மட்டுமே லெபனான் மக்களின் பாதுகாப்பிற்கு ஒரே உத்தரவாதம்.

ஹிஸ்புல்லாஹ்வின் ஆயுதபலத்தைக் கண்டு மேற்கத்திய நாடுகள் கவலை அடைவதில் எங்களுக்கு மகிழ்ச்சியே. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் கவலை எங்களுக்கு மேலும் உத்வேகத்தை அளிக்கிறது.’ இவ்வாறு நஸ்ருல்லாஹ் கூறியுள்ளார்.

அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார்


அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் – பஹ்ரைன் மன்னர் அறிவிப்பு

bahrainkhalifa
மனாமா:அரசு எதிர்ப்பு போராட்டம் நடைபெறும் பஹ்ரைனில் அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு தயார் என மன்னர் ஹமத் பின் ஈஸா அல் கலீஃபா அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு கூடுதல் அதிகாரம் வழங்கி மன்னர் குடும்பத்திற்கான அதிகாரங்களை வெட்டிக் குறைக்கப்படும் வகையிலான சீர்திருத்தங்கள் அமுல்படுத்தப்படும் என மன்னர் விளக்கமளித்துள்ளார்.

ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்


ஈரான் மீது தாக்குதல் நடத்த இஸ்ரேல் ஆயத்தம்: போர் சூழலை எதிர்கொள்ள தயாராகும் அமெரிக்கா

irak
வாஷிங்டன்:அமெரிக்காவின் எச்சரிக்கையை மீறி ஈரானை தாக்குவதற்கு முயற்சியை இஸ்ரேல் துவக்கியுள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
இஸ்ரேல் ஈரானை தாக்க இருப்பதை முன்னிட்டு வளைகுடா பகுதியில் தங்களின் தளங்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா ஆரம்பித்துள்ளது. இச்செய்தியை வால்ஸ்ட்ரீட் ஜெர்னல் பத்திரிகை வெளியிட்டுள்ளது.
திமோன்னாவில் உள்ள அணுசக்தி நிலையத்தை இம்மாதம் இஸ்ரேல் மூடியதற்கு காரணம் தாக்குதலுக்கு முன்னோடியாக கருதப்படுகிறது. ஈராக் உள்பட ஈரானின் தாக்குதலுக்கு இலக்காகும் தளங்கள் மற்றும் மையங்களில் பாதுகாப்பு ஏற்பாட்டை பலப்படுத்த அமெரிக்கா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இஃவான்களை எதிர்கொள்ள ஸலஃபிகள் தயாராகிறார்கள்


இஃவான்களை எதிர்கொள்ள ஸலஃபிகள் தயாராகிறார்கள்

imagesCAPT0WMA
கெய்ரோ:புதிய பாராளுமன்றத்தில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சியின் ஆதிக்கத்தை தடுப்பதற்கு முக்கிய ஸலஃபி அரசியல் கட்சியான அந்நூர் இதர கட்சிகளை அணுகி வருகிறது.
ஆனால், ஸலஃபி அமைப்புகளுடன் மேற்கத்திய சார்பு கொள்கையை கொண்ட கட்சிகளால் கூட்டணியை ஏற்படுத்துவது சிரமம் என கருதப்படுகிறது.

பா.ஜ.க-அ.தி.மு.க:ஒரே எண்ணத்தை கொண்டுள்ளன – அத்வானி பெருமிதம்

imagesCA39HBV3
சென்னை:ஜெயலலிதாவால் ‘செல்க்டீவ் அம்னீஷியா’ என புகழாரம் சூட்டப்பட்ட பாரதீய ஜனதா கட்சியின் தலைவர் எல்.கே.அத்வானியும், குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியும் பார்ப்பன பாசிச ஏஜண்ட் சோ
ராமசாமியின் பத்திரிகையான துக்ளக்கின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்தினர்.

பாபா ராம் தேவ் மீது கறுப்பு மை தெளிக்க முயன்றவர் மீது சரமாரி தாக்குதல்


பாபா ராம் தேவ் மீது கறுப்பு மை தெளிக்க முயன்றவர் மீது சரமாரி தாக்குதல்

Man_Throws_Blac13611
புதுடெல்லி:பாபா ராம்தேவ் மீது கறுப்பு மை தெளிக்க முயன்ற நபரை அவரது ஆதரவாளர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் கொட்டியது.
கறுப்பு பணத்திற்கு எதிராக டெல்லி கான்ஸ்டிடியூஷனல் க்ளப்பில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் ராம்தேவ். அப்பொழுது ஒருவர் ராம்தேவ் மீது கறுப்பு மையை தெளிக்க முயன்றார். இதையடுத்து ராம்தேவின் ஆதரவாளர்கள் அந்த நபரைப் பிடித்து சரமாரியாக தாக்கினர். இதில் அவரது வாயில் இருந்து ரத்தம் சொட்டியது.

சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி


சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி

g,y,f
புதுடெல்லி:21 சமூக இணையதளங்கள் மீது விசாரணை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஃபேஸ்புக், கூகிள், யாஹு, மைக்ரோஸாஃப்ட் ஆகிய இணையதளங்கள் இதில் அடங்கும்.
டெல்லி மாநகர மாஜிஸ்திரேட் சுதேஷ்குமார் முன், மத்திய அரசு நேற்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ‘தேசிய ஒருமைப்பாட்டிற்கு ஊறு விளைவிக்கும் மற்றும் இரு பிரிவினரிடையே விரோதத்தை தூண்டும் வகையிலான தகவல்கள் மற்றும் செய்திகளை சமூக வலைதளங்கள் வெளியிட்டுள்ளன. இந்த வகையில், 21 வலைதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க மத்திய அரசிடம் போதிய ஆதாரங்கள் உள்ளன. இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153-ஏ, 153-பி மற்றும் 295-ஏ போன்றவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும். சமூக வலைதளங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கும் அதிகாரியும், அவற்றுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலித்து விட்டார். அதில், அவர் திருப்தி அடைந்துள்ளார்.’ இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: தீவிர சோதனை, சேர்மன் ராஜினாமா


டி.என்.பி.எஸ்.சி முறைகேடு: தீவிர சோதனை, சேர்மன் ராஜினாமா

தமிழ்நாடு அரசு தேர்வாணையம்
சென்னை:தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் வெற்றிப்பெற பணம் தந்ததாக கருதப்படும் 73 தேர்வர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று(வெள்ளிக்கிழமை) தீவிர சோதனை நடத்தினர். இவர்களின் தேர்ச்சியில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்புள்ளதாக எழுந்த சந்தேகத்தின் அடிப்படையில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.
டி.என்.பி.எஸ்.சி தொடர்பாக ஏற்கனவே மூன்று தடவை சோதனைகள் நடந்துள்ளன. இப்போது நடந்திருப்பது நான்காம் கட்ட சோதனை ஆகும்.
சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைபெற்றது. உதவி பல் மருத்துவர் பணிக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிடுவதற்கு முன்பு பார்வையிட கோரியதால் டி.என்.பி.எஸ்.சி. தலைவர், ஊழியர்கள் தவறான வழிகளில் பணப் பயன் பெற முயற்சித்த குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ளதாகப் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் 21 மாவட்டங்களில் 73 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடு

போபால்:பாதிக்கப்பட்டவர்களுக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடு

போபால்
புதுடெல்லி:போபால் விஷவாயு துயர சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 12 ஆயிரம் பேருக்கு 134 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்குவதற்கான பரிந்துரையை சமர்ப்பிக்க இச்சம்பவம் தொடர்பான அமைச்சரவை குழு(GoM-Group of Ministers)
தீர்மானித்துள்ளது. போபால் விஷவாயு துயர சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களால் அவதியுறுகின்றனர்.

இழப்பீட்டு தொகையை விநியோகிக்க நேற்று கூடிய அமைச்சரவை கூட்டம் தீர்மானித்துள்ளதாக கூட்டத்திற்கு பிறகு மத்தியபிரதேச மாநில அமைச்சர் பாபுலால் கவுர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் குலாம்நபி ஆஸாத், சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் ஆகியோர் உள்பட பல அமைச்சர்களும் கலந்துக்கொண்டனர்.
விஷவாயு விபத்தால் பாதிக்கப்பட்ட 10045 பேருக்கு 10 லட்சம் ரூபாய் வீதம் வழங்கவேண்டும் என்ற கோரிக்கையை அமைச்சரவை குழு நிராகரித்தது. இதுக்குறித்து ம.பி.அமைச்சர் பாபுலால் கவுர் தனது அதிருப்தியை வெளியிட்டார்.

2002 குஜராத் இனக்கலவரம்


2002 குஜராத் இனக்கலவரம்: கைது செய்யப்பட்ட ஹிந்துக்களை விடுதலைச்செய்ய உத்தரவிட்ட மோடி

nmodi
அஹமதாபாத் 2002 குஜராத் இனக்கலவர வழக்குகளில், நரேந்திர மோடிக்கெதிராக போர்க்கொடி தூக்கியுள்ள முன்னால் கூடுதல் போலீஸ் இயக்குனர் ஆர்.பி.ஸ்ரீகுமார், தற்போது மேலும் ஒரு மனுவை நானாவதி கமிஷன் முன் சமர்பித்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது, கலவரத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டுள்ள ஹிந்துக்களை உடனடியாக விடுதலை செய்யும்படி மோடி உத்தரவிட்டுள்ளதாக குஜராத்தின் அப்போதைய தலைமை செயலாளர் அசோக் நாராயணன் தன்னை தொடர்புகொண்டு தெரிவித்ததாக கூறியுள்ளார். இது தொடர்பான தொலைபேசி உரையாடல்களையும் ஸ்ரீகுமார் சமர்பித்துள்ளார்.
இது மோடிக்கெதிராக  ஸ்ரீகுமார் சமர்பித்த ஒன்பதாவது மனுவாகும்

முஸ்லீம்களுக்கு எதிரான கட்டுரை


முஸ்லீம்களுக்கு எதிரான கட்டுரை: சுப்பிரமணியம் சுவாமிக்கு முன் ஜாமீன்

ssamy
டெல்லி:முஸ்லீம்களுக்கெதிரான கட்டுரை விவகாரத்தில் ஜனவரி 30ம் தேதி வரை ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியம் சுவாமியை கைது செய்யக்கூடாது என டெல்லி உயர்நீதி மன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

நில ஒதுக்கீடு முறைகேடு

நில ஒதுக்கீடு முறைகேடு: வி.எஸ்.அச்சுதானந்தன் மீது எஃப்.ஐ.ஆர்

vsachu
கோழிக்கோடு/காஸார்கோடு:முதல்வராக பதவி வகித்த வேளையில் தனது உறவினருக்கு சட்ட விதிமுறைகளை மீறி காஸர்கோடு மாவட்டத்தில் 2.33 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்த வழக்கில் இடதுசாரி எதிர்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

மேலும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ஆகியோர் உட்பட 7 பேர் மீதும் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி அரசில் வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வராக பதவி வகித்தார். அப்பொழுது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்படும் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு
யாருக்கும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும் மீறி தனது உறவினருக்கு ஒதுக்கினார். இதுத்தொடர்பாக கேரள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் அச்சுதானந்தன் மீது கூறப்பட்ட புகார் உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து, அச்சுதானந்தன், முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் கே.பி. ராஜேந்திரன், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் தீர்மானித்துள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அச்சுதானந்தன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்திருப்பது, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து பதிலளித்துள்ள வி.எஸ்.அச்சுதானந்தன், இந்த வழக்கை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் தனது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வேன் என குறிப்பிட்டார்.

லத்திகா சரண் நியமனம் செல்லும்

லத்திகா சரண் நியமனம் செல்லும்: உயர்நீதிமன்றம்

லத்திகா சரண்
சென்னை:தமிழக டி.ஜி.பியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. முந்தைய தி.மு.க ஆட்சியின்போது தமிழக டி.ஜி.பியாக லத்திகா சரண் நியமிக்கப்பட்டார். ஆனால், இந்த நியமனம் செல்லாது என்றும், அவருக்கு பதிலாக புதிய டி.ஜி.பியை தமிழக அரசு தேர்வுச்செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் தீர்ப்பு அளித்தது. இதனை எதிர்த்து லத்திகா சரண் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.

பிரஞ்சு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் படுகொலை

சிரியா:பிரஞ்சு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் படுகொலை

d6d8aea9e1564e9f963c8f8b53d7a2103247225671-1326311479-4f0de837-620x348
டமாஸ்கஸ்:சிவிலியன்கள் மீது கடுமையான தாக்குதல் தொடரும் சிரியாவின் ஹும்ஸ் நகரத்தில் வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் பிரஞ்சு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த செய்தியாளர் உள்பட 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் ஹும்ஸ் நகரில் சுற்றுப்பயணம் செய்ய அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்தான் குண்டுவெடித்தது. பிரான்ஸ் டூ தொலைக்காட்சியின் ஃபோட்டோ ஜெர்னலிஸ்ட் கில்லிஸ் ஜாக்வர் என்பவர் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

தாலிபான் போராளிகளின் உடல் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க ராணுவத்தினர்


தாலிபான் போராளிகளின் உடல் மீது சிறுநீர் கழித்த அமெரிக்க ராணுவத்தினர்

404856_2196412050414_1850613636_1463795_1308785044_n
வாஷிங்டன்:தாலிபான் போராளிகளின் இறந்த உடல்கள் மீது அமெரிக்க ராணுவத்தினர் சிறுநீர் கழித்தது தொடர்பாக வெளியான வீடியோ காட்சிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என பெண்டகன் அறிவித்துள்ளது.
இதனை யார் செய்தாலும் அது ராணுவத்திற்கு உகந்த செயல் அல்ல என பெண்டகனின் செய்தித் தொடர்பாளர் கேப்டர்ன் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
யார் இந்த வீடியோவை வெளியிட்டார்? இதன் உண்மை நிலை என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும் என கிர்பி கூறினார்.

சிமி: தடை மீண்டும் நீட்டிப்பு


சிமி: தடை மீண்டும் நீட்டிப்பு

bansimi
புதுடெல்லி:இந்திய இஸ்லாமிய மாணவர் இயக்கம்(சிமி) மீதான தடையை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க மத்திய சட்ட அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. தடையை நீட்டிக்க சட்டரீதியான தடைகள் எதுவுமில்லை என இதுத்தொடர்பான உள்துறை அமைச்சகத்தின் சிபாரிசுக்கு சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி


பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி: திக்விஜய் சிங்கிற்கு ப.சிதம்பரம் மறுப்பு

chidambaram-10410630
புதுடெல்லி:பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலியானது என கூறியுள்ள அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய் சிங்கின் கருத்தை மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் நிராகரித்துள்ளார்.
ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட்ட சம்பவம் உண்மையாக இருக்கும் வேளையில் மறு விசாரணை தேவையில்லை
என சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

2008-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி தேசத்தை உலுக்கிய பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் அரங்கேறியது. டெல்லி ஜாமிஆ மில்லியா பல்கலைக்கழகத்துடன் இணைந்த பாட்லா ஹவுஸில் போலீஸின் போலி என்கவுண்டரில் ஒரு மாணவர் உள்பட இரண்டுபேர் கொல்லப்பட்டனர்.
டெல்லி போலீஸ் அதிகாரி ஒருவரும் கொல்லப்பட்டார். உ.பி மாநிலத்தின் ஆஸம்கர் மாவட்டத்தில் சஞ்சர்பூர் கிராமத்தைச் சார்ந்த ஆதிஃப் அமீன், முஹம்மது ஸாஹித் ஆகிய இளைஞர்கள்தாம் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள்.
எம்.சி.சர்மா என்ற போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொல்லப்பட்ட இச்சம்பவம் போலி என துவக்கம் முதலே குற்றச்சாட்டு எழுந்தது. இதனைக் குறித்து மனித உரிமை ஆர்வலர்கள் நடத்திய விசாரணையில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. ஆனால், என்கவுண்டர் குறித்து விசாரணைக்கு உத்தரவிடுவது போலீஸாரின் தன்னம்பிக்கையை தகர்த்துவிடும் என கூறி மத்திய-மாநில அரசுகள் மறுத்துவிட்டன.
தான் மத்திய உள்துறை அமைச்சராக பதவியேற்ற பிறகு பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் உண்மை என்பது தெளிவானது என வியாழக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ப.சிதம்பரம் தெரிவித்தார்.
திக்விஜய்சிங் கூறியது அவரது தனிப்பட்ட கருத்து என ப.சிதம்பரம் கூறினார். அதேவேளையில், பாட்லா ஹவுஸ் என்கவுண்டர் போலி என மீண்டும் திக்விஜய்சிங் கூறியுள்ளார். இச்சம்பவத்தை குறித்து மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்திய போதிலும் பிரதமரும், ப.சிதம்பரமும் இதற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்ததால் தன்னால் எதுவும் செய்ய இயலவில்லை என திக்விஜய் சிங் கூறியுள்ளார்.

துபாயில் இருந்து திரும்புகிறார் சர்தாரி


துபாயில் இருந்து திரும்புகிறார் சர்தாரி

zardari
இஸ்லாமாபாத்:சர்தாரி துபாய்க்கு சென்றது சர்ச்சையை கிளப்பிய சூழலில் பாகிஸ்தானுக்கு அவர் திரும்புவதாக செய்தி
வெளியாகியுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) அவர் பாகிஸ்தான் திரும்புவார் என செய்திகள் கூறுகின்றன.

ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் சர்தாரி துபாய்க்கு சென்றார் என கூறப்பட்டது. ஆனால், அரசுக்கு எதிராக ராணுவம் காய்களை நகர்த்தி வரும் வேளையில் சர்தாரி துபாய்க்கு சென்றது சர்ச்சையை கிளப்பியது.
பாகிஸ்தானில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழல்களை குறித்து விவாதிக்க இன்று தேசிய அவை கூடுகிறது.
ராணுவ புரட்சி என்பது பாகிஸ்தானுக்கு புதிதல்ல. ஆனால், பாகிஸ்தானில் நடக்கும் புதிய நிகழ்வுகள் மீண்டும் ஒரு ராணுவ புரட்சியை நோக்கி செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அரசுக்கு எதிராக ராணுவம் காய்களை நகர்த்தி வரும் வேளையில்தான் பாக்.ராணுவ தலைமை தளபதிக்கு நெருக்கமான பாதுகாப்பு செயலாளர் காலித் நயீமை பிரதமர் கிலானி நீக்கினார்.
பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் ராணுவம் பதிலளித்தது. பிரதமரின் செயல் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.

அணு விஞ்ஞானி கொலை


அணு விஞ்ஞானி கொலை: தொடர்பில்லை என அமெரிக்கா

நியூயார்க்:ஈரானில் கடந்த புதன்கிழமை குண்டுவெடிப்பில் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா அனுதாபம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என அமெரிக்கா
அறிவித்துள்ளது.
அணு விஞ்ஞானியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் என ஈரான் கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளார்.

ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம்


ஈரான் மீதான தடையை ஆதரிக்கமாட்டோம் – சீனா அறிவிப்பு

China defends Iran oil trade despite U.S. push
பீஜிங்:ஈரான் மீதான அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கொண்டுவந்துள்ள தடைகளை ஆதரிக்க மாட்டோம் என சீனா அறிவித்துள்ளது.
ஈரானின் எண்ணெய் மீது தடையை அறிவித்துள்ள அமெரிக்காவின் நிதித்துறை செயலாளர் திம்மத்தி கீத்னர் இதற்கு ஆதரவைக்கோரி சீனா சென்றுள்ளார். அவரிடம் சீனா, தனது முந்தைய நிலைப்பாட்டில் மாற்றமில்லை என திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
சீன பிரதம்ர் ஜியபாவோ, சீனாவின் எதிர்கால தலைவராக கருதப்படும் துணை அதிபர் ஸி ஜின் பிங் ஆகியோருடன் கீத்னர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
ஈரான் ஏற்றுமதிச்செய்யும் மூன்றில் ஒரு பங்கு எண்ணெயையும் சீனா வாங்குகிறது.

ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள்


ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள்

Zuccotti Park
வாஷிங்டன்:அமெரிக்காவின் கார்ப்பரேட் எதிர்ப்பு மையமாக கருதப்படும் ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் திரள துவங்கியுள்ளனர்.
பூங்காவிலிருந்து வெளியேற்றியதை தொடர்ந்து முடிவுக்கு வந்த போராட்டம், மீண்டும் துவங்குவதற்கான அறிகுறி இதன் மூலம் தென்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் பூங்காவில் திரண்டுள்ளனர்.

பாதுகாப்பு செயலாளர் நீக்கம்: சூடு பிடிக்கும் பாகிஸ்தான் அரசியல்

பாதுகாப்பு செயலாளர் நீக்கம்: சூடு பிடிக்கும் பாகிஸ்தான் அரசியல்

khalid naeem lodhi
இஸ்லாமாபாத்:பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை செயலாளர் காலித் நயீம் லோடியை பிரதமர் கிலானி நீக்கியதை தொடர்ந்து பாகிஸ்தான் அரசியலில் மீண்டும் சூடு பிடிக்க துவங்கியுள்ளது.
காலித் நயீம் பாக்.ராணுவ தலைமை தளபதிக்கு நெருக்கமானவர் ஆவார். சட்டவிரோத நடவடிக்கை மற்றும் மோசமான குணநலனும் கண்டுபிடித்ததை தொடர்ந்து லோடியை நீக்கியுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. முக்கிய துறைகள் இடையே தவறான புரிந்துணர்வை லோடியின் செயல்பாடுகள் ஏற்படுத்தியதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனில்


எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனில்

Palestinian president Mahmud Abbas (R) s
ரமல்லா:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனுக்கு வருகை தந்தார். இஸ்ரேல் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கிருஷ்ணா பெய்த்தூனியா செக்போஸ்ட் வழியாக ஃபலஸ்தீன் வருகைத் தந்தார்.
பத்தாண்டுகளுக்கு இடையே ஃபலஸ்தீனுக்கு செல்லும் முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான கிருஷ்ணா, ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் ஸலாம் ஃபய்யாத் ஆகியோர் உள்பட உயர் ஃபலஸ்தீன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

குவாண்டனாமோ:மனித உரிமை மீறல்களின் 10 ஆண்டு


குவாண்டனாமோ:மனித உரிமை மீறல்களின் 10 ஆண்டு

  Guantanamo-Bay-Barbed-Wire
மனித உரிமை மீறல்களில் வரலாற்றின் எக்காலத்திலும் முதல் இடத்தை பிடிக்கும் குவாண்டானாமோ சிறைக் கொட்டகை நிறுவப்பட்டு 10 ஆண்டுகள் நிறைவுறுகிறது.
ஆப்கானிஸ்தானிலும், ஈராக்கிலும் போர்க்களத்தில் இருந்து பிடிக்கப்படும் நபர்களை சித்திரவதைச் செய்து சீரழிப்பதற்காக மட்டும் ஜார்ஜ் w புஷ் அரசாங்கத்தால் கியூபாவில் உள்ள குவாண்டனாமோவில் அமெரிக்க கடற்படை தளத்தில் பிரம்மாண்டமான சிறைக் கொட்டகை உருவாக்கப்பட்டது.
சிறைக்கைதிகளின் முதல் குழு 2002-ஆம் ஆண்டு ஜனவரி,11-ம் தேதி குவாண்டனாமோவில் அடைக்கப்பட்டு 10-வது ஆண்டு நிறைவுறுகிறது. ஆனால்,10 ஆண்டுகள் கழிந்த பிறகும் விசாரணை இல்லாமல் 171 சிறைக்கைதிகள் விடுதலையை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
முதல் கட்டமாக குவாண்டானாமோவில் அடைக்கப்பட்டவர்களில் குறைந்தபட்சம் பன்னிரெண்டு நபர்கள் இப்பொழுதும் அங்கு துயரங்களை அனுபவித்து வருகின்றனர். இவர்களில் ஒருவருக்கு மட்டுமே இதுவரை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ளோருக்கு விசாரணை கூட நடத்தப்படவில்லை. குற்றவாளிகள் அல்லர் என்பதை கண்டறிந்த பிறகும் 89 பேரின் விடுதலைக் குறித்து இதுவரை முடிவு எடுக்கப்படவில்லை.
கடந்த 10 ஆண்டுகளில் 780 பேர் குவாண்டனாமோவின் இருட்டறைகளில் அடைக்கப்பட்டனர். 2008-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட பாரக் ஒபாமா, குவாண்டனாமோவை மூடுவேன் என வாக்குறுதி அளித்தார். ஆனால், 3 ஆண்டுகளை தாண்டிய பிறகும் ஒபாமா தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கு பதிலாக ராணுவத்திற்கு எந்தவொரு நபரையும் காலவரையற்று விசாரணையில்லாமல் சிறையில் அடைக்கும் அதிகாரத்தை வழங்கும் மசோதாவில் ஒபாமா அண்மையில் கையெழுத்திட்டார்.
குவாண்டனாமோவில் அமெரிக்காவின் பயங்கரவாதத்தை சர்வதேச மனித உரிமை அமைப்பான ஆம்னஸ்டி இண்டர்நேசனல், ‘மனித உரிமைகள் மீறல்களின் வரலாற்றில் நீடிக்கும் நச்சுத்தன்மை வாய்ந்த அடையாளம்’ என வர்ணிக்கிறது. குவாண்டனாமோ சிறைக் கொட்டகையின் 10-வது ஆண்டு நிறைவையொட்டி ஆம்னஸ்டி வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறுகிறது.

Tuesday, 10 January 2012

பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யாவும் துருக்கிய பிரதமர் அர்தூகானும் சந்திப்பு


பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யாவும் துருக்கிய பிரதமர் அர்தூகானும் சந்திப்பு

IsmailHani-Ardukanஹமாஸ் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா முதல் முறையாக எகிப்து, சூடான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
துருக்கிக்கு விஜயம் செய்த ஹனிய்யா, பிரதமர் அர்தூகான் தலைமை வகிக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கூட்டத்திலும் கலந்து கொண்டார். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு சமூகமளித்த அவர், கட்சியின் அங்கத்தவர்களுடன் கைகுலுக்கி தனது நல்லுறவை வெளிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில் அர்தூகான் காரசாரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதில் குர்திய இன சார்பான சமாதானம் மற்றும் நீதிக்கான கட்சியின் ஒரு பக்கச் சார்பான இனத்துவ சிந்தனையை அவர் கடுமையாக கண்டித்தார்.
சமீபத்தில் துருக்கி இராணுவத்தின் விமானத் தாக்குதல்களின்போது, 35 குர்தியர்கள் வட ஈராக்கில் கொல்லப்பட்டனர். இது தவறு என அர்தூகான் பகிரங்க மன்னிப்பைக் கோரியிருந்தார். தமது கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர் ஒருவரின் சகோதரர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டதாக அர்தூகான் குறிப்பிட்டார்.
இது இராணுவத்தின் தவறு என்பதை தாம் ஒப்புக் கொண்டபோதிலும், இன அடிப்படையில் குர்திய கட்சி இதைப் பிரித்து நோக்குகிறது என அவர் விமர்சித்தார்.
இஸ்மாயில் ஹனிய்யா மாவி மர்மாரா கப்பலையும் பார்வையிட்டார்.
Haniyah6
Haniyah5
Haniyah2


Haniyah1

அன்வர் இப்றாஹிம் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு


அன்வர் இப்றாஹிம் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு


Anwerமலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்றாஹிம் நிரபராதி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது" என இது குறித்து,கோலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் கூறினார். சிலர் அல்லாஹு அக்பர் என கோஷம் எழுப்பினர்.
2008 இல் அவரது உதவியாளர் ஒருவர் ஓரின பாலியல் குற்றச்சாட்டை அவருக்கு எதிராக முன்வைத்தார். இதன் காரணமாக DNA மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதன் பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது மலேசிய அரசியலில் அன்வர் இப்றாஹிமின் செல்வாக்கை வீழ்த்தலாம் என அப்போது அனுமானிக்கப்பட்டது.
இவ்வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில்அன்வர் இப்றாஹிமுக்கு இது அரசியல் ரீதியாக சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1990களில் அன்வர் இப்றாஹிம் மலேசிய அரசியலில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்தார். மஹாதிரின் அரசியல் வாரிசு எனவும் இவர் அப்போது கணிக்கப்பட்டிருந்தார்.
இவரது புகைப்படம் 1997 இல் பிரசுரிக்கப்பட்ட டைம் சஞ்சிகையின் அட்டையில் இடம்பெற்றிருந்தது. அதில் ஆசியாவின் எதிர்காலம் என்ற வாசகம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கூடா நட்பு கேடாய் முடியும்


கூடா நட்பு கேடாய் முடியும்

imagesCA1IB1FJ
இஸ்ரேல் – ஒரு வரையறுக்கப்பட்ட எல்லைக்கோடு இல்லாத நாடு, ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களை பல முறை மீறிய நாடு, அப்பாவி குழந்தைகளை குறிவைத்து கொலை செய்வதில் வல்லவர்கள், பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்ய வரும் நிவாரண குழுக்களை சர்வதேச எல்லையில் வைத்து தாக்குபவர்கள் என பல விரும்பத்தகாத சிறப்புகளை கொண்ட நாடு. இந்த நாடு உருவாகிய விதமும் அதனை பாதுகாக்க இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகளும் சர்வதேச நாடுகளின் கடும் கண்டனத்தை சந்தித்து வருகின்றன. சுருக்கமாக சொல்வதென்றால் மத்திய ஆசியாவின் கேன்சர் தான் இஸ்ரேல்.

கஷ்மீர் பண்டிட்கள் – தனிநாடு கோரிக்கை


கஷ்மீர் பண்டிட்கள் – தனிநாடு கோரிக்கை

kashmiri-pandit
புனே:சர்வதேச கஷ்மீர் பண்டிட்களின் இளைஞர் அணியின் இரண்டு நாள் மாநாடு புனேவில் நடைபெற்றது. அம்மாநாட்டில் தனி நாடு கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் தனி நாட்டின் மூலம் தங்கள் மொழி மற்றும் கலாச்சாரம் போன்றவற்றை பாதுகாத்துக் கொள்ளப் போவதாக அறிவித்துள்ளது.
கஷ்மீர் பண்டிட்களின் தலைவர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் புலம் பெயர்ந்துள்ள கஷ்மீர் பண்டிட்களை கண்டறிந்து அவர்களை முன்னேற்றவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக வாழ்ந்த பண்டிட்களின் தியாகத்தை தாங்கள் அங்கீகரிப்பதாகவும் அம்மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.