Tuesday, 10 January 2012

பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யாவும் துருக்கிய பிரதமர் அர்தூகானும் சந்திப்பு


பலஸ்தீனப் பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யாவும் துருக்கிய பிரதமர் அர்தூகானும் சந்திப்பு

IsmailHani-Ardukanஹமாஸ் அரசாங்கம் பதவியேற்றதன் பின்னர், பிரதமர் இஸ்மாயில் ஹனிய்யா முதல் முறையாக எகிப்து, சூடான், துருக்கி உள்ளிட்ட பல நாடுகளுக்கு உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டு வருகிறார்.
துருக்கிக்கு விஜயம் செய்த ஹனிய்யா, பிரதமர் அர்தூகான் தலைமை வகிக்கும் நீதிக்கும் அபிவிருத்திக்குமான கட்சியின் கூட்டத்திலும் கலந்து கொண்டார். செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற இக்கூட்டத்திற்கு சமூகமளித்த அவர், கட்சியின் அங்கத்தவர்களுடன் கைகுலுக்கி தனது நல்லுறவை வெளிப்படுத்தினார்.
இக்கூட்டத்தில் அர்தூகான் காரசாரமான உரை ஒன்றை நிகழ்த்தினார். இதில் குர்திய இன சார்பான சமாதானம் மற்றும் நீதிக்கான கட்சியின் ஒரு பக்கச் சார்பான இனத்துவ சிந்தனையை அவர் கடுமையாக கண்டித்தார்.
சமீபத்தில் துருக்கி இராணுவத்தின் விமானத் தாக்குதல்களின்போது, 35 குர்தியர்கள் வட ஈராக்கில் கொல்லப்பட்டனர். இது தவறு என அர்தூகான் பகிரங்க மன்னிப்பைக் கோரியிருந்தார். தமது கட்சியைச் சேர்ந்த அங்கத்தவர் ஒருவரின் சகோதரர் ஒருவரும் இதில் கொல்லப்பட்டதாக அர்தூகான் குறிப்பிட்டார்.
இது இராணுவத்தின் தவறு என்பதை தாம் ஒப்புக் கொண்டபோதிலும், இன அடிப்படையில் குர்திய கட்சி இதைப் பிரித்து நோக்குகிறது என அவர் விமர்சித்தார்.
இஸ்மாயில் ஹனிய்யா மாவி மர்மாரா கப்பலையும் பார்வையிட்டார்.
Haniyah6
Haniyah5
Haniyah2


Haniyah1

No comments:

Post a Comment