Tuesday, 10 January 2012

அன்வர் இப்றாஹிம் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு


அன்வர் இப்றாஹிம் நிரபராதி என நீதிமன்றம் தீர்ப்பு


Anwerமலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்றாஹிம் நிரபராதி என அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. "நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது" என இது குறித்து,கோலம்பூர் உயர் நீதிமன்றத்திற்கு வெளியே கூடியிருந்த தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றும்போது அவர் கூறினார். சிலர் அல்லாஹு அக்பர் என கோஷம் எழுப்பினர்.
2008 இல் அவரது உதவியாளர் ஒருவர் ஓரின பாலியல் குற்றச்சாட்டை அவருக்கு எதிராக முன்வைத்தார். இதன் காரணமாக DNA மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. அதன் பின்னரே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இது மலேசிய அரசியலில் அன்வர் இப்றாஹிமின் செல்வாக்கை வீழ்த்தலாம் என அப்போது அனுமானிக்கப்பட்டது.
இவ்வருடம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் தேர்தலில்அன்வர் இப்றாஹிமுக்கு இது அரசியல் ரீதியாக சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. 1990களில் அன்வர் இப்றாஹிம் மலேசிய அரசியலில் நட்சத்திர அந்தஸ்து பெற்றிருந்தார். மஹாதிரின் அரசியல் வாரிசு எனவும் இவர் அப்போது கணிக்கப்பட்டிருந்தார்.
இவரது புகைப்படம் 1997 இல் பிரசுரிக்கப்பட்ட டைம் சஞ்சிகையின் அட்டையில் இடம்பெற்றிருந்தது. அதில் ஆசியாவின் எதிர்காலம் என்ற வாசகம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment