Monday, 16 January 2012

எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனில்


எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனில்

Palestinian president Mahmud Abbas (R) s
ரமல்லா:இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஃபலஸ்தீனுக்கு வருகை தந்தார். இஸ்ரேல் சுற்றுப் பயணத்தை முடித்துக்கொண்டு கிருஷ்ணா பெய்த்தூனியா செக்போஸ்ட் வழியாக ஃபலஸ்தீன் வருகைத் தந்தார்.
பத்தாண்டுகளுக்கு இடையே ஃபலஸ்தீனுக்கு செல்லும் முதல் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சரான கிருஷ்ணா, ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பிரதமர் ஸலாம் ஃபய்யாத் ஆகியோர் உள்பட உயர் ஃபலஸ்தீன் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஃபலஸ்தீன் நாட்டிற்கான இந்தியாவின் ஆதரவை தனது பேச்சுவார்த்தைக்கு இடையே மீண்டும் உறுதிச்செய்தார் கிருஷ்ணா. ஃபலஸ்தீன் நாட்டிற்கான அந்தஸ்தை முதன் முதலில் ஆதரித்த அரபு அல்லாத நாடு இந்தியா ஆகும். மறைந்த ஃபலஸ்தீன் தலைவர் யாஸிர் அரஃபாத்தின் அடக்கஸ்தலத்திற்கு ஃபலஸ்தீன் வெளியுறவுத்துறை அமைச்சருடன் சென்ற கிருஷ்ணா அங்கு அஞ்சலி செலுத்தினார். இங்கிருந்து கிருஷ்ணா ஜோர்டானிற்கு செல்கிறார்.
இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்துவது ஃபலஸ்தீனுடன் உறவை பாதிக்காது என இந்தியா கருதுகிறது.

No comments:

Post a Comment