துபாயில் இருந்து திரும்புகிறார் சர்தாரி
13 Jan 2012
இஸ்லாமாபாத்:சர்தாரி துபாய்க்கு சென்றது சர்ச்சையை கிளப்பிய சூழலில் பாகிஸ்தானுக்கு அவர் திரும்புவதாக செய்தி
வெளியாகியுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) அவர் பாகிஸ்தான் திரும்புவார் என செய்திகள் கூறுகின்றன.
வெளியாகியுள்ளது. இன்று(வெள்ளிக்கிழமை) அவர் பாகிஸ்தான் திரும்புவார் என செய்திகள் கூறுகின்றன.
ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கத்தான் சர்தாரி துபாய்க்கு சென்றார் என கூறப்பட்டது. ஆனால், அரசுக்கு எதிராக ராணுவம் காய்களை நகர்த்தி வரும் வேளையில் சர்தாரி துபாய்க்கு சென்றது சர்ச்சையை கிளப்பியது.
பாகிஸ்தானில் தற்பொழுது நிலவும் அரசியல் சூழல்களை குறித்து விவாதிக்க இன்று தேசிய அவை கூடுகிறது.
ராணுவ புரட்சி என்பது பாகிஸ்தானுக்கு புதிதல்ல. ஆனால், பாகிஸ்தானில் நடக்கும் புதிய நிகழ்வுகள் மீண்டும் ஒரு ராணுவ புரட்சியை நோக்கி செல்வதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அரசுக்கு எதிராக ராணுவம் காய்களை நகர்த்தி வரும் வேளையில்தான் பாக்.ராணுவ தலைமை தளபதிக்கு நெருக்கமான பாதுகாப்பு செயலாளர் காலித் நயீமை பிரதமர் கிலானி நீக்கினார்.
பிரதமரின் நடவடிக்கைக்கு எதிராக கடுமையான வார்த்தைகளால் ராணுவம் பதிலளித்தது. பிரதமரின் செயல் கடுமையான எதிர்விளைவுகளை உருவாக்கும் என ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
No comments:
Post a Comment