ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் எதிர்ப்பாளர்கள்
16 Jan 2012
வாஷிங்டன்:அமெரிக்காவின் கார்ப்பரேட் எதிர்ப்பு மையமாக கருதப்படும் ஜுக்கோட்டி பூங்காவில் மீண்டும் வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு எதிர்ப்பாளர்கள் திரள துவங்கியுள்ளனர்.
பூங்காவிலிருந்து வெளியேற்றியதை தொடர்ந்து முடிவுக்கு வந்த போராட்டம், மீண்டும் துவங்குவதற்கான அறிகுறி இதன் மூலம் தென்படுகிறது. 300-க்கும் மேற்பட்ட எதிர்ப்பாளர்கள் பூங்காவில் திரண்டுள்ளனர்.
பூங்காவின் முன்னால் வைத்திருந்த போலீஸ் தடுப்புகள் நேற்று முன்தினம் அகற்றப்பட்டிருந்தன. கார்ப்பரேட்டுகளுக்கும், பொருளாதார பாரபட்சத்திற்கும் எதிராக துவங்கிய போராட்டம் அமெரிக்காவையும் தாண்டி ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியது. எதிர்ப்பாளர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் கையாளப்பட்டன. பல போராட்ட கூடாரங்களையும் அகற்றிய போலீஸ், ஏராளமானோரை கைது செய்தது.
No comments:
Post a Comment