Tuesday, 3 January 2012

பாலியல் கொடுமைகளுக்கு காரணம் கண்ணியமற்ற ஆடையே


பாலியல் கொடுமைகளுக்கு காரணம் கண்ணியமற்ற ஆடையே -கர்நாடகா அமைச்சர்

Due to sexual abuse indecent dressing1
பெங்களூர்:கண்ணியமான ஆடையை அணிவது பெண்களுக்கு இழைக்கப்படும் பாலியல் ரீதியான கொடுமைகளில் இருந்து ஓரளவாவது காப்பாற்றும் என கர்நாடகா குழந்தைகள்-மகளிர் நலதுறைஅமைச்சர் சி.சி.பாட்டீல் கூறியுள்ளார்.
இதுக்குறித்து அவர் கூறியிருப்பதாவது:
“பிறரை கவர்ந்து இழுக்கும் ஆடையை பெண்கள் அணிவதற்கு தனிப்பட்ட ரீதியில் தான் எதிரானவன். பெண்கள் தாங்கள் அணியும் ஆடையைக் குறித்து பூரண விழிப்புணர்வு உடையவர்களாக இருத்தல் அவசியம். பெண்களுடன் ஆண்களுடன் சேர்ந்து அவர்களுடைய வேலைகளை செய்வது சர்வசாதாரணமாகிவிட்டது.


ஐ.டி. நிறுவனங்களிலும், கால் செண்டர்களிலும், இன்னும் இதர நிறுவனங்களிலும் பெண்கள் இரவு வேளைகளிலும் பணியாற்றும் சூழல் ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழல்களில் தாங்கள் என்ன ஆடையை அணிகிறோம் என்பது குறித்த விழிப்புணர்வு பெண்களுக்கு உருவாக வேண்டும். ஒழுக்க நேர்மையை இழந்த சமூகத்தில் பாதுகாப்பை உறுதிச் செய்வதில் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு உடையவர்களாக இருத்தல் அவசியம்.
ஆண்-பெண் சமத்துவம் என்பது ஆடையில் அல்ல என்பதை இதனைக் குறித்து வாதிடுவோர்  கவனத்தில் கொள்ள வேண்டும். பெண்களுக்கு என தனியாக ஆடையை குறித்து நான் பரிந்துரைக்கவில்லை. தங்களின் கலாச்சாரத்திற்கும் சூழலுக்கும் ஏற்ற கண்ணியமான ஆடையை தேர்வுச் செய்யவேண்டிய பொறுப்பு பெண்களுக்கே உள்ளது.
தங்களுக்கு பாதுகாப்பான ஆடை எது என்பதை பெண்கள் அடையாளம் காணவேண்டும்.” இவ்வாறு பாட்டீல் கூறியுள்ளார்.
முன்னர், சினிமாவில் நடிகைகள் அணியும் ஆடையைப் போல் தாங்களும் அணிவதற்கு பெண்கள் விரும்புவது அவர்களுக்கு எதிரான பாலியல் கொடுமைகள் அதிகரிக்க காரணம் என கர்நாடகா போலீஸ் டி.ஜி.பி 

No comments:

Post a Comment