Monday, 16 January 2012

பிரஞ்சு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் படுகொலை

சிரியா:பிரஞ்சு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் படுகொலை

d6d8aea9e1564e9f963c8f8b53d7a2103247225671-1326311479-4f0de837-620x348
டமாஸ்கஸ்:சிவிலியன்கள் மீது கடுமையான தாக்குதல் தொடரும் சிரியாவின் ஹும்ஸ் நகரத்தில் வியாழக்கிழமை நடந்த தாக்குதலில் பிரஞ்சு பத்திரிகையாளர் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். பெல்ஜியம் நாட்டைச் சார்ந்த செய்தியாளர் உள்பட 25 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
செய்தியாளர்கள் ஹும்ஸ் நகரில் சுற்றுப்பயணம் செய்ய அரசு ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில்தான் குண்டுவெடித்தது. பிரான்ஸ் டூ தொலைக்காட்சியின் ஃபோட்டோ ஜெர்னலிஸ்ட் கில்லிஸ் ஜாக்வர் என்பவர் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர்.

அதேவேளையில், அரபு லீக் கண்காணிப்பாளர்கள் குழுவின் மீது நடந்த தாக்குதலை தொடர்ந்து அடுத்த குழுவை சிரியாவுக்கு உடனடியாக அனுப்பமாட்டோம் என அரபு லீக் அறிவித்துள்ளது.
மேற்கு சிரியாவில் லதாகியாவில் அரபு லீக்கின் 11 உறுப்பினர்கள் மீது தாக்குதல் நடந்தது.
தற்பொழுது அரபுலீக் கண்காணிப்பு குழுவில் 165 உறுப்பினர்கள் உள்ளனர். ஆனால், அரபு லீக்கின் கண்காணிப்பு வெறும் கேலிக்கூத்தாக மாறுகிறது என நேற்று முன்தினம் கண்காணிப்பு குழுவிலிருந்து ஓய்வு பெற்ற அல்ஜீரியாவின் அன்வர் மாலிக் கூறியுள்ளார்.
கண்காணிப்பு குழுவால் ஒன்றும் செய்ய இயலாது என நியூயார்க்கை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மனித உரிமை அமைப்பு கூறியுள்ளது. சிவிலியன்களுக்கு பாதுகாப்பை உறுதிச்செய்யாமல் கண்காணிப்பு குழுவை சிரியாவில் தொடந்து இருக்க அனுமதிப்பது கூடுதல் மரணங்களை உருவாக்கும் என அவ்வமைப்பு கூறியுள்ளது.

No comments:

Post a Comment