நில ஒதுக்கீடு முறைகேடு: வி.எஸ்.அச்சுதானந்தன் மீது எஃப்.ஐ.ஆர்
14 Jan 2012
கோழிக்கோடு/காஸார்கோடு:முதல்வராக பதவி வகித்த வேளையில் தனது உறவினருக்கு சட்ட விதிமுறைகளை மீறி காஸர்கோடு மாவட்டத்தில் 2.33 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்த வழக்கில் இடதுசாரி எதிர்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன் மீது முதல் தகவல் அறிக்கை பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
மேலும் நான்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள், முன்னாள் அமைச்சர் ஆகியோர் உட்பட 7 பேர் மீதும் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.
கேரள மாநிலத்தில் கடந்த இடதுசாரிகள் தலைமையிலான கூட்டணி அரசில் வி.எஸ்.அச்சுதானந்தன் முதல்வராக பதவி வகித்தார். அப்பொழுது முன்னாள் ராணுவ வீரர்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் வழங்கப்படும் நிலத்தை 25 ஆண்டுகளுக்கு
யாருக்கும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும் மீறி தனது உறவினருக்கு ஒதுக்கினார். இதுத்தொடர்பாக கேரள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
யாருக்கும் விற்கக்கூடாது என்ற சட்டத்தையும் மீறி தனது உறவினருக்கு ஒதுக்கினார். இதுத்தொடர்பாக கேரள லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
இந்நிலையில் கடந்த தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வந்தது. இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு முதல்வர் உம்மன் சாண்டி உத்தரவிட்டார். அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் அச்சுதானந்தன் மீது கூறப்பட்ட புகார் உண்மை என தெரிய வந்தது.
இதையடுத்து, அச்சுதானந்தன், முன்னாள் வருவாய்த் துறை அமைச்சர் கே.பி. ராஜேந்திரன், 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உட்பட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் தீர்மானித்துள்ளனர். இவர்கள் மீது வழக்கு பதிவு செய்ய அனுமதிக்கும்படி லஞ்ச ஒழிப்புத் துறை இயக்குனருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது.
அச்சுதானந்தன் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்ய முடிவு செய்திருப்பது, கேரள அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து பதிலளித்துள்ள வி.எஸ்.அச்சுதானந்தன், இந்த வழக்கை சட்டரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் சந்திக்கப் போவதாக தெரிவித்துள்ளார். மேலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டால் தனது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்வேன் என குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment