14 ஆயிரம் கைதிகளுக்கு சிரியாவில் பொது மன்னிப்பு
16 Jan 2012
பெய்ரூத்:சிரியாவில் சிவிலியன்கள் மீதான தாக்குதலை நிறுத்துமாறு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் கோரிக்கை விடுத்துள்ளார்.
பெய்ரூத்தில் அரபு வசந்தத்தை குறித்து நடந்த ஜனநாயக மாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர். ஏகாதிபத்தியத்தை மக்கள் வெறுப்பதற்கான அடையாளம்தான் அரபுலக புரட்சி என மூன் தனது உரையில் குறிப்பிட்டார்.
அதேவேளையில், சிரியாவில் புரட்சிப் போராட்டம் துவங்கிய பிறகு தண்டிக்கப்பட்ட கைதிகளுக்கு பொது மன்னிப்பை வழங்குமாறு அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் உத்தரவிட்டுள்ளார். 2011 மார்ச் 15-ஆம் தேதி முதல் 2012 ஜனவரி 15-ஆம் தேதி வரை கைது செய்யப்பட்ட 14 ஆயிரம் எதிர்ப்பாளர்கள் இதன் மூலம் விடுதலைச் செய்யப்படுவார்கள். ஏற்கனவே 3,952 பேர்
விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment