Wednesday, 4 January 2012

வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது?


வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே தடையாக உள்ளது?



Unhcr-logoவடக்கில் மீள்குடியேற்றப்படும் மக்களை பழைய அகதிகள் என்றும் புதிய அகதிகள் என்றும் பிரித்து தனது சேவையை செய்கின்றது. அதில்முஸ்லிம்களை பழைய அகதிகள் என்று கூறியு.என்.எச்.சீ.ஆர் நிறுவனத்தினரால் எந்தவிதநிவாரணமும் முஸ்லிம்களுக்குவழங்கப்படாதுள்ளது. என அமைச்சர் றிசாத்பதியுதீன் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனமே வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு தடையாக உள்ளனர். அவர்களுக்கு எதிராக அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் வழக்கு தாக்கல் செய்யவுள்ளது என்றும் கூறினார்.

தற்போது இலங்கையில் பெரும்பான்மைசிறுபான்மை என்ற வேறுபாடு இல்லாமல் எல்லோரும் ஒரு தேசத்தின் மக்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி செய்கின்றபோது.யு.என்.எச்.சீ.ஆர் நிறுவனம் வடக்கில் மீள்குடியேறுகின்ற மக்களை பழைய அகதிகள்புதிய அகதிகள்என பிரித்து செயல்படுகின்றது.
இதன் மூலம் வடக்கில் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை தடுக்கும் சதியினையே யு.என்.எச்.சீ.ஆர்நிறுவனம் மேற்கொள்வதாக அமைச்சர் றிசாட் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment