கைம்பெண்களின் துயரம்
10 Jan 2012
மதரா(உ.பி):மதரீதியான சடங்குகள் சில பெண்களின் வாழ்க்கையை அவமானகரமாக மாற்றிவிடுகிறது. அதற்கு ஏராளமான உதாரணங்களை காணலாம்.
கணவனை இழந்த கைம் பெண்களுக்கு மறுமணம் புரியும் உரிமை மறுக்கப்பட்டதன் காரணமாக இந்து சமூகத்தைச் சார்ந்த கைம் பெண்கள் வடஇந்தியாவில் பல பகுதிகளிலும் அறக்கட்டளைகள் சார்பாக நடத்தும் தர்ம ஸ்தாபனங்களில் தள்ளப்படுகின்றனர். இத்தகைய நிறுவனங்களில் கைம்பெண்களின் நிலைமை படுமோசமாக உள்ளது.
சில நிறுவனங்கள் கைம்பெண்களை விபச்சாரத்திற்கு தூண்டுவதாக செய்திகள் வெளியாகின. உத்தரபிரதேச மாநிலம் விருந்தாவனில் இறந்துபோன கைம்பெண்களின் உடல்கள் சாக்கில் கட்டப்பட்டு துப்புரவுத் தொழிலார்களால் கொண்டுசெல்லப்பட்டு பின்னர் துண்டுதுண்டாக வெட்டப்பட்டு பல இடங்களிலும் வீசியெறியப்படும் தகவலை மாவட்ட சட்ட சேவை ஆணையம் (District Legal Services Authority (DLSA)) வெளிக் கொணர்ந்துள்ளது.
மத்திய மகளிர்-குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் விருந்தாவனில் அரசால் நடத்தப்படும் மறுவாழ்வு மையங்கள் இயங்கினாலும் முறையாக இறந்த உடல்களை அடக்கம் செய்ய பணம் இல்லாததால் இந்த கொடுமை நடந்தேறுகிறது.
சொத்துக்களை பறிக்கவோ, கைம்பெண்களின் செலவுகளை கவனிக்க விருப்பமின்றி அவர்களது உறவினர்கள் இத்தகைய இருட்டறைகளில் கொண்டு அவர்களை தள்ளுகின்றனர். பலரும் பட்டினியால் பிச்சை எடுக்க துணிகின்றனர். கைம் பெண்களுக்கு திருமணம் செய்வதற்கான சட்டத்தை நிறைவேற்றிய தேசத்தில்தான் இக்கொடுமை நடக்கிறது.
பாரத மாதாவுக்கு பட்டாபிஷேகம் நடத்த முயலும் பாசிச கும்பல்கள் தங்களது சொந்த மதத்தைச் சார்ந்த அபலைப் பெண்களின் அவமானகரமான வாழ்வு குறித்து வாய் திறக்க மறுக்கின்றனர்
No comments:
Post a Comment