அணு விஞ்ஞானி கொலை: தொடர்பில்லை என அமெரிக்கா
16 Jan 2012நியூயார்க்:ஈரானில் கடந்த புதன்கிழமை குண்டுவெடிப்பில் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி கொல்லப்பட்ட சம்பவத்திற்கு அமெரிக்கா அனுதாபம் தெரிவித்துள்ளது. இத்தாக்குதலில் தங்களுக்கு பங்கில்லை என அமெரிக்கா
அறிவித்துள்ளது.
அறிவித்துள்ளது.
அணு விஞ்ஞானியின் கொலையின் பின்னணியில் இஸ்ரேலும், அமெரிக்காவும் என ஈரான் கூறிய குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டன் இவ்வாறு கூறியுள்ளார்.
இதற்கிடையே, இக்கொலையை ஐ.நா பொதுச்சபை கண்டிக்க வேண்டும் என ஈரான் கோரிக்கை விடுத்துள்ளது. எவ்வித பயங்கரவாத தாக்குதல்களையும் எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐக்கிய நாடுகள் சபையும், சர்வதேச அமைப்புகளும் முன்வரவேண்டும் என ஐ.நா பொதுச்செயலாளர் பான் கி மூனுக்கு அனுப்பிய கடிதத்தில் ஐ.நாவின் ஈரான் தூதர் முஹம்மது கஸாஇ கோரிக்கை விடுத்துள்ளார்.
No comments:
Post a Comment